video:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே....


.திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல். -

கர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.

கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பிரசவ காலத்தில் பலவித கட்டுக்கதைகளை நமக்கு பலர் பலவிதத்தில் சொல்வார்கள். அதில் வயிற்றை வைத்து குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது, விமானத்தில் செல்ல கூடாது என்பது, ஆவி குளியல் கூடவே கூடாது என்றெல்லாம் கூறுவர். அதில் எது உண்மை எது பொய் என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. அதைப் பற்றி இங்கு தீர்த்து கொள்வோமா...

கட்டுக்கதை: கர்ப்பிணியின் வயிற்றின் வடிவம். வயிறு பெரியதாக இருந்தால் பெண் என்றும், சிறியதாக இருந்தால் ஆண் என்றும் கூறுவர்.
உண்மை: இந்த ஊகத்தை பற்றி அறிவியல் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் தசை அளவு, அமைப்பு, கரு நிலை, தோரணை மற்றும் வயிற்றின் அடிப்படை அளவு இதை பொறுத்தே இந்த வடிவம் வருமே தவிர, குழந்தையைப் பொறுத்து இல்லை என்று கூறுகின்றனர்.

கட்டுக்கதை: உப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பையன் என்றும், இனிப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பெண் குழந்தையை குறிக்கின்றது என்பது.
உண்மை: ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், பசியையும், ருசியையும் வைத்து குழந்தையின் பாலியலை தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது.

கட்டுக்கதை: கர்ப்பிணியின் தொப்பை மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி, அது ஆடும் திசையை வைத்து குழந்தையின் பாலியலை கணிப்பது. அது ஒரு வட்டத்தில் நகருமெனில் பையன் என்றும், முன்னும் பின்னுமாக நகருமெனில் பெண் என்றும் கூறுவர்.
உண்மை: இது உண்மை இல்லை என்றாலும், விளையாட்டாக இதை செய்யலாம்.

கட்டுக்கதை:கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் அவதியால் பாதிக்கப்படுகின்றீர் என்றால் குழந்தைக்கு அதிக முடி என்று அர்த்தம். நெஞ்செரிச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உங்கள் குழந்தையின் முடியை வைத்து இது வருவது இல்லை.
உண்மை: நெஞ்செரிச்சலால் மிகவும் கஷ்டப்பட்டும் கூட, பெண்கள் வழுக்கை குழந்தைகளை பெற்றனர்.

கட்டுக்கதை: உங்கள் அம்மாவிற்கு எளிதாக கர்ப்பம் மற்றும் பிரசவம் நடந்தது என்றால், உங்களுக்கும் அதுபோல் நடக்கும்.
உண்மை: உங்கள் பிரசவத்திற்கும், கர்ப்பத்திற்கும் உங்கள் பரம்பரை அம்சத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம்.

கட்டுக்கதை: மல்லாந்து படுப்பதால் உங்கள் குழந்தைக்கு பாதிப்பு என்பது என்று சொல்வது.
உண்மை: இந்த நிலையில் தூங்குவது உங்கள் குழந்தையை பாதிக்காது என்பதால் ஒரு நிலையில் படுக்கலாம். அதிலும் இடது புறம் படுத்தால் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் சீராக இருப்பதாக அறியப்படுகின்றது. ஆகையால் இடதுபுறம் படுப்பது நல்லது.

கட்டுக்கதை: உடலுறவு குழந்தையை பாதிக்கும் என்று கூறுவதுண்டு.
உண்மை: அடிவயிற்றை சுற்றி பனிக்குடப்பையின் தோல் ஏழு அடுக்குகள் கொண்டது. அவை உங்கள் குழந்தையை பாதுகாப்பதற்காக உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இவை ஒருவித சளி போன்ற படிமத்தை உற்பத்தி செய்து, கருப்பையினை கிருமிகள் தாக்காமல் சுத்தமும் செய்கின்றன. ஆகவே உங்கள் மருத்துவர் கூறினால் மட்டுமே பாலியல் தொடர்பை தவிர்க்கவும், இல்லையென்றால் தேவையில்லை.

கட்டுக்கதை: முதல் குழந்தை எப்போதும் தாமதமாகவே வரும்.
உண்மை: 60 சதவீத பிரசவம் கணிக்கப்பட்ட தேதிக்கு பின் வரும், ஐந்து சதவீதம் கணிக்கப்பட்ட நாளில் வரும், முப்பத்தி ஐந்து கணிக்கப்பட்ட நாளுக்கு முன்பேயே வரும். எனவே குழந்தையின் பிரசவ நேரத்தை, உங்கள் மாதவிடாய் சுழற்சியே திட்டமிடுகிறது. அது குறைவாக இருந்தால், சீக்கிரம் பிரசவம் வரும், அது நீட்டிப்பாய் இருந்தால், பிரசவம் தாமதமாக இருக்கும். சரியாக 28 நாட்கள் இருப்பின் குறித்த நேரத்தில் நடைபெறும்.

கட்டுக்கதை: முதல் அல்லது கடைசி மூன்று மாதங்களில் விமானத்தில் பயணிக்க முடியாது.
உண்மை: மீண்டும் தவறு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சில விமான நிறுவனங்கள், உங்களது இறுதி மூன்று மாதங்களில் விமானத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று கூறுவர். ஏனெனில் விமானத்திலேயே உங்களுக்கு பிரசவம் ஏற்படும் என்பதால் மட்டுமே.

கட்டுக்கதை: கர்ப்பமாக இருக்கும் போது, சூடான குளியல் எடுத்து கொள்ளக்கூடாது.
உண்மை: இது உண்மை தான். பிரசவ காலத்தில் நீராவிக்குளியல், சுடுநீர் தொட்டி குளியல் போன்ற குளியல்களை கூடாது. மேலும் கர்ப்பக்காலத்தில் 102 டிகிரிக்கு மேல் உங்களின் உடலின் வெப்பநிலை இருக்கக்கூடாது.

ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!

google car

google carட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம் டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.
இருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள் கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால் தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.
இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும் கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

பென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா?

pendrive[usp]:
pendriveFloppy, CD என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு (Pen Drive) மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?
ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Floppy ல் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து ப்ளாஷ் ட்ரைவிற்கு வயதாகி விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பதனை எதிர்பார்க்கலாம். ஆனால், அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.
எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கணனியின் CPU வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள் பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப ப்ளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.
பென்டிரைவ் இனை கணனியில் பொருத்தி உபயோகித்த பின் பென்டிரைவ் இன் இயக்கத்தை நிறுத்தாமல் அதாவது Eject பண்ணாமல் பென் டிரைவ் ஐ நீக்காதீர்கள்.

மோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்

தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூபித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் பென்சில் வேனியா பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர் லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகி யோர் அடங்கிய குழு சாக்கோ லேட், லாம் பிராடர் இன நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
கர்பபை புற்றுநோயை உருவாக்கும் செல் கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. பின் னர் கர்பபை புற்று நோய் சோதனைக்கு வந்த பெண்களுக்கு ரசாயன மருந்து கொடுத்து அதன் மூலம் வெளி யேறும் சிறுநீரில் கர்பபை புற்று நோயை உருவாக்கும் செல்கள் இருக்கின்றனவா என மோப்பம் பிடிக்க செய்த னர்.
அவ்வாறு மோப்பம் பிடித்து உறுதி செய் த பெண்களின் ரத்தத்தை பரி சோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப பை புற்றுநோய் இருந்தது தெரியவந்த து. அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்பபை புற்றுநோயை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்து ள்ளனர்.

கண்களை பாதுகாப்பது எப்படி?


பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷ மாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு.

நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப் பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
சுருக்கங்கள் மற்றும் கோடுகள் 
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம்.

கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம்.

கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஓயில் உபயோகிக்கலாம்.மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.

தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினம் செய்யவும். 
கருவளையம்: 
சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல.
இதை ஆரம்பத் திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.
எட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை.
பகல் நேரத்தில் உள்ளங் கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.

கண்களை இறுக மூடவும். பிறகு அகல மாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக் கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றி யுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.

கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.
வீங்கிய கண்கள் 
சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவு வதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம்.
வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம். சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள் கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண் களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம்.எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண் களுக்குள் போகும். கண்களைக் கழுவி விட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக க்கியம்.
கண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்: 
இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண் களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும்.இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய் யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உட் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
சில டிப்ஸ்: 
சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண் களைக் கழுவவும்.
சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.

கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

எட்டு மணி நேரத் தூக்கம். 10 தல் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது இந்த இரண்டும் மிக முக்கியம். 

தலைவா விமர்சனம்


அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை  கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா?’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா. 

 மும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி...என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்) 

 இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்...! ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள்  அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு? அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு  கிடைக்கிற பிரசாதம். 

 மிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ... உங்களுக்கே நியாயமா படுதா பாஸ்? படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா... பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப். 

 ப்ரோ... ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ... கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது. 

 அமலா பால் போலீஸ் அதிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்... வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்? 

 சத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது... தொடரட்டும். 

 படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்... 

 ஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா. 

 விஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது? 

சிந்தனைஒளி


 -பிறரை மகிழ்வித்து -நீ மகிழ்!
 -பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
 -புலிக்கு வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா?
       நீ முடிவு செய்!
 -சம்பாதிப்பதற்கு அளவுகோல் தேவையில்லை -
       செலவழிப்பதற்கு அளவுகோல் தேவை!
-உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே 

எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்

Maathakalமாதகல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் மாரீசன்கூடல், பெரியவிளான் ஆகிய ஊர்களும், தெற்கில் பண்டத்தரிப்பும், மேற்கில் சில்லாலையும் உள்ளன. இவ்வூர் மாதகல் கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது.
பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.
மாதகலுக்கு பெருமை சேர்த்தவர்களில் சிற்றம்பலப்புலவர் முன்னோடி ஆவார். இவர் ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்னே வேளான் குலத்திலே பிறந்தார். வேதாரணீயஞ்சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரென்னும் பெயருடைய சைவக்குருவினிடம் இலக்கண இலக்கியங் கற்று மீளத் தம்மூரில் வந்திருந்தவர். இவரிடம் கற்றவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர் என்பர். இவர் கண்டியரசன்மேல், கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டுத் தம்மூர்க்குத் திரும்பினர் என்பர்.

அடுத்து மாதகலுக்கு பெருமை தேடித் தந்தவர் மயில்வாகனப்புலவர்.அவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் மாதகலில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம்மாமனாரிடம் கல்விகற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா எனும் புலவர் மரபிலே உதித்தவர்.யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.

இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மாதகல் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

video song::-சுண்டுக்குளி ப் பூவே- யாழ்ப்பாணத்திலிருந்து...

Chundukkuli Poove - Eelam Jaffna Song




முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சிகள் அடித்துச் சொல்கின்றன.

இந்த ஆராய்ச்சிகளும், இது போன்ற வேறு பல ஆராய்ச்சிகளும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாகத் தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைத் தொகுத்து சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உணவுப் பழக்கங்கள்:
 உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.
 2) உடற்பயிற்சி:
 தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
 3) புதிய முயற்சிகள்:
 எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
 4) ஓய்வு:
 சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
5) மூளைக்கு வேலை:
 மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
 6) படித்தல்:
 புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.
 7) நல்ல பழக்க வழக்கங்கள்:
 புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.
 8) மற்றவை:
 அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.

மேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக!

 நன்றி:- என்.கணேசன்  

ஒளிர்வு-(33),ஆடி-2013



உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

உங்கள் உடலின் உண்மைகள்

    human_body_370
  • குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • human_body_370பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
  • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 60,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
  • நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
  • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
  • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
  • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
  • மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
  • ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
  • இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
  • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
  • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
  • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
  • நமது மூளை 80% நீரால்  ஆனது.
  • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
  • நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
  • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
  • பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
  • மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
  • மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்:
     -கண்கள்              31 நிமிடங்கள்
      -மூளை               10 நிமிடங்கள்
      -கால்கள்              4 மணி நேரம்
-தசைகள்              5 நாட்கள்
          -இதயம்               சில நிமிடங்கள் 


வயிற்றின் தன்மையறிந்து சாப்பிடலாமே.....!

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சினை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சினை நீளும்.

எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.