பல
ஆண்டுகளுக்கு
முன்னே,
அக்காலத்தில்
வாழ்ந்துகொண்டிருந்த
மக்களினிடையே
ஒரு
சிலர்
அவ்வப்போது
தோன்றி,
சில
நல்வார்த்தைகளைக்
கூறக்கேட்டதும்,
அவர்களை
உடனே
கடவுள்களாக்கியும்,
கடவுளின்
தூதர்களாகவும்
சித்தரித்து
மதங்களையும்
உருவாக்கி
விட்டனர்.
இப்படியாக
உருவாகிய
மதங்களில்
ஒன்றான
கிறீஸ்துவ
சமயம்,
அது
தோன்றிய
மத்திய
கிழக்கு
எல்லையையும்
தாண்டி,
ஐரோப்பிய
சமூகத்தினுள்ளும்
ஊடுருவி,
வேரிட்டுத்
தழைத்து
ஓங்கத்
தொடங்கியது.
அக்கால
ஐரோப்பிய
நாடுகள்,
பல
வெளி
நாடுகளையும் ஆக்கிரமித்து ஆண்டு
வந்திருந்ததனால்,
அந்நாடுகளில்
இச்சமயத்தைப்
பரப்பவும்
இலகுவாக
இருந்தது.
முக்கியமாக,
இந்தியப்
பெரு
நிலத்தில்,
அவர்களால்
பதவி
ஆசை
காட்டி
மதம்
மாற்றப்பட்டோர்
ஒரு
பகுதியினர்.
சாதியைக்
குறிவைத்து
மாற்றப்பட்டோர்
பெரும்
பகுதியினர். ஆனால், தற்கால ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆஸ்திரேலிய சமுதாயம், இந்த சமய நம்பிக்கைகளை
ஒரு
பக்கம்
மூட்டை
கட்டி
வைத்துவிட்டதால்
தங்கள்
நாடுகளை
பெரும்
பொருளாதார
வல்லரசுகளாக
உயர்த்தி,
உல்லாச
வாழ்வுக்கு
உகந்தனவாக
ஆக்கி
விட்டார்கள்.
சமயத்தையே
இறுகக்
கட்டிக்கொண்டு,
கடவுள்தான்
எல்லாம்
தருவார்
என்றும்,
இறந்தபின்
(இல்லாத)
அந்த
சொர்க்கலோகம்
போய்ச்
சேரலாம்
என்றும்
நம்பி,
நாள்முழுவதும்
தவறாது
வணங்கிக்
கொண்டிருக்கும்
மக்களைக்
கொண்ட
நாடுகள்
பலவும்,
அரசியல்
ஸ்திரம்
இன்மை,
பசி,
பட்டினி,
கொலை,
கொள்ளை,கற்பழிப்பு, அடக்கு முறை, சுதந்திரம் இன்மை என்று எவ்வளவெல்லாம்
அல்லல்
படுகின்றன
என்பது
நாம்
நாளாந்தம்
காணும்
உண்மைகள்
ஆகும்.
உதாரணமாக,
2011 ஆஸ்திரேலிய
குடிசன
மதிப்பின்படி,
31% ஆனவர்கள் தமக்கு எந்தவொரு மதமும் இல்லை என்று கூறி உள்ளனர். (மிகுதி 69% இல் , கடவுளே தேவை இல்லை என்று வாதிக்கும் என்னைப் போன்றவர்கள், நம் சமூக அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், நானும் இந்துதான் என்று குறித்தவர்களும்
பலர்
இருக்கலாம்!)
மேலும்,
ஓர்
ஆய்வின்
படி
25% மக்கள் கடவுள் நம்பிக்கையே இல்லை என்றும் கூறி உள்ளனர். ஆனால், 'கடவுள் என்பவர் உமக்கு முக்கியமோ?' என்ற கேள்விக்கு 67% மானவர்கள் 'இல்லை' என்றுதான் பதில் கூறியுள்ளனர். (ஒப்பீடு: டென்மார்க் = 83%, பாக்கிஸ்தான் = 4%; அப்போ, பாருங்களேன் வாழ்க்கைத் தரத்தின் வேறுபாட்டை!) அத்தோடு, பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்துள்ள நாடுகளில் வசிப்பவர்கள் தேவாலயம் போவது என்பது மிகவும் அரிதாகி விட்டது. ஒழுங்ககாகப் போய்க் கொண்டிருப்பவர்கள், பெரும்பாலும் ஆசிய நாட்டு வந்தேறு குடிகளும், உள்ளூர் பழுத்த கிழவர்க்களும்தான்!
இது
இப்படி
இருக்க,
இப்பவும்,
இன்னமும்
ஈழத்திலும்,
இந்தியாவிலும்
சில
மதம்
மாறிகள்,
வெள்ளைக்காரனின்
சமயம்
என்றால்
எதோ
உசத்தி
என்று
எண்ணிக்
கொண்டு
(அது
உண்மையில்
யூத
நாட்டினது),
அவர்களுக்கு
அவர்களின்
சமய
மேலிடம்
வழங்கும்
பண
ஊக்கம்,
மற்றும்
சலுகைகளைப்
பெற்றுக்கொண்டு,
சைவ
சமய
மக்கள்
பல
கஷ்டங்கள்
பட்டுக்கொண்டிருப்பதாகச்
சொல்லிக்
கண்ணீர்
விட்டு, இவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதாகக் கூறிக்கொண்டு,
இவர்களுக்கு
அற்ப,
சொற்ப
வசதிகள்
செய்து
தருவதாக
வாக்களித்து,
சமய
மாற்றம்
செய்வதில்
தீவரமாய்
இறங்கி
உள்ளார்கள்.
நானும் தெரியாமல்தான்
கேட்கின்றேன்;
அந்த
மதம்
மாறிகளில்
ஒருவர்
எனக்காக
இறைவனிடம்
மன்றாடும்
போது,
இறைவன்
திடீர்
என்று
முன்னே
தோன்றி
"பக்தா
உன்
வேண்டுகோளைச்
செவி
மடுத்தேன்.
இந்தா!
ஒரு
ஒரு
மில்லியன்
டொலர்.
நீ
அவரிடம்கொண்டு
போய்க்
கொடு!"
என்று
கொடுத்தால்
அதில்
ஒரு
ரூபாதன்னும்
என்னிடம்
தருவாரா?
சுத்த
புலுடா!
கடவுள்
என்று
சொல்லப்படுபவர்
ஒருபோதும்
கொடுக்கவே
மாட்டார்
என்று
நிச்சயமாகத்
தெரியும்
என்பதால்தான்
அவரும்
துணிந்து
கேட்கின்றார்,
எங்களுக்காக!.
ஒன்று
மட்டும்
ஒரு
பெரிய
உண்மை;
உலகத்தில்
எவரும்
மற்றவர்கள்
நன்றாய்
இருக்கவேண்டும்
என்று
ஓடித் அலைவது
இல்லை!
எல்லாம்
தங்கள்,
தங்கள்
சுய
நலத்தோடுதான்
செயற்படுவார்கள்.
அச்சுயநலம்
பொருளீட்டலாகவோ,
புகழீட்டலாகவோ
இருக்கலாம்.
சமய
மாற்றிகளே!
இங்கு
சைவச்
சனம்
கடவுள்
பற்றாக்
குறையினால்
ஒன்றும்
கஷ்டப்
படவில்லை.
ஏற்கனவே
பலவிதமான
நம்பிக்கைகளில்
புதைந்து
கிடக்கின்றனர்.
அவரவர்
மனப்
பக்குவத்திற்கேற்ப
கடவுள்
நம்பிக்கைகள்
பலவற்றைப்
பின்பற்றுகின்றனர்.
இவர்களுக்கு வணங்குவதற்கென்று பிறப்பிறப்பு என்று இல்லாத கடவுளும், பிறந்து, பிறந்து, இறக்கும் கடவுள்மார் என்றும் ஏற்கனவே நிறைந்து உள்ளனர். நீங்கள் சில காரணங்களுக்காக மாறினீர்கள். அதை உங்களோடேயே வைத்துக் கொள்ளுங்கள். இவர்களையும் சமயம் மாற்றி, இவர்களுக்கு இனி, புளிச்சுப்போன பழைய பொய்கள் பலவற்றை அவிழ்த்துவிட்டுப் பயமுறுத்தவேண்டாம். ஒழுங்காகக் கோவில் செல்லாவிட்டால் அவலச் சாவு, பாவ மன்னிப்பு இன்மை, புதைகுழிப் பேறின்மை, நரக வாழ்வு, அது, இது என்று இனிப் புதுப் புதுப் பூச்சாண்டிக் கதைகள் ஒன்றும் இவர்களுக்குத் தேவை இல்லை.
கொண்டு
வந்து
புகுத்தியவனே
அதைக்
கைவிட்டபின்
உங்களுக்கு
ஏன்
இந்த
அர்த்தமற்ற
வீண்
வேலை?.
சும்மா
விடுங்கள்! -அதுவே
போதும்
இவர்கள்
நிம்மதியாக
வாழ!
-மிகவும்
நன்றி!

























