திருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க

 உதவும் புதிய தொழில்நுட்பம்வாகன டெலிமாடிக்ஸ்
ஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர்இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல்.
இது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் இதை இன்ஸ்டால் செய்திருக்கின்றன. இதன் மூலம் வாடகை காலம் முடிந்து நீங்கள் காரை ரிட்டர்ன் செய்யாமல் இருந்தால் உங்கள் எஞ்சினை நிறுத்த இயலும். அதன் மூலம் அன்ஹ காரை எங்கிருக்கிறது என்றூ ஜிபிஎஸ் மூலம் கண்கானித்து உடனே காரை மீட்டு கொள்வார்கள். இதை இன்ஸ்டால்மென்ட்டுக்கு கார் வாங்கினால் கூட அந்த ஃபைனான்ஸ் கம்பெனி செய்கிறது
இது எப்படி சாத்தியமாகிறது? என்று தெரிந்து கொள்ல ஆசையா? ஒவ்வொரு கார் தயாரிக்கும் போதே இந்த வசதியை மைக்ரோபிராசஸர் மூலம் இந்த டெக்னாலஜியை இஞ்செக்ட் செய்து விடுவதால், கார் ரிஜிஸ்டர் ஆகும் போது அந்த ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட்டின் டீட்டெயில் போலீஸிடம் இருக்கும். இதனால் தவறு செய்யும் கார்களை போலீஸ் ஜி பி எஸ் மூலம் ரிமோட் லொகேஷனில் இந்த காரை நிறுத்த இயலும்.
அது சரி..நம்பர் பிளேட்டை மாத்திட்டு போன என்ன பண்ணுவாங்கன்னு போலீஸ்கிட்ட கேட்டா அதுக்கு வழி இருக்கு, போலீஸ் ரேடாரில் இந்த மாதிரி நிக்காமல் போகும் தறிகெட்ட கார்கள் ஜிபிஎஸ்ரேடார் மூலம் கூட நம்பர் பிளேட் இல்லாமலே கண்டுபிடித்து நிறுத்த இயலும்.



பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு!

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்
டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட. 

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம். 

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்! 

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள். 

11. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். 

12. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்! 

13. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம். 

14. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்! 

15. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

16. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க
படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்! 

17. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள். 

18. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy" 

19. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம். 

20. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. 

21. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

22. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

23. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல! 

எந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகுமா!!!

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே பலாலி விமானத்தளமும், கிழக்கே வயாவிளான், தென்கிழக்கே புன்னாலைக்கட்டுவன், தெற்கே குப்பிளான், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. இப்பகுதி தொன்றுதொட்டு மயிலிட்டி தெற்கு என வழங்கப்பட்டது.
 இக் கிராமம் 1987 இல் சுமார் 730 குடும்பங்களை கொண்டிருந்தது.
கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில்
செல்வர்,
கைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தம் கடின ௨ழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வந்தது

 விநாயகர் ஆலயம் சார்ந்த ஒரு சிறு காணி குரும்பசிட்டி எனப் பெயர் பெற்றிருந்ததுஇங்கு குறும்பர் என்று ஒரு இனத்தவர் பாளையம் அமைத்து வாழ்தனர் என்றும் . அதனாலே இப்பெயர் வந்தது என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு, குறும்பயிட்டி, குறும்பசிட்டி, குரும்பசிட்டி என்று இப்பெயர் மருவிவந்ததாகவும் சொல்லப்படுகிறதுஇன்று குரும்பசிட்டியிலுள்ள ஏனைய குறிச்சிப் பெயர்கள் வவுணத்தம்பை, வளப்புலம், மயிலியகலட்டி, மாயெளு பயிற்றிக்கலட்டி,சத்தியகலட்டி, தேவசூரி, கொக்கன், வள்ளுவன்காடு, பரத்தைப்புலம், வேளான்புலம், இடையாம்புலம் போன்றனவாகும்.
செம்மண்னின் செழுமையும் கிணற்று நீரும் இங்கு விவசாயக்குடியிருப்புகள் தோன்றக்காரணமாயின. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரையும் ஏன் அதற்கு பின்பும் விவசாயமே முக்கியதொழிலாக விளங்கிவந்தது. இவ் விவசாயியற்கு 19ம் நூற்றாண்டு வரை கல்வியறிவு கிட்டவில்லை என்று தெரிகிறது. குன்றும் குழிகளும் நிரம்பிய கல் ஒழுங்கைகளும் பற்றைக்காடுகளும் மண்குடிசைகளும் கொண்ட ஒரு பிந்தங்கிய கிராமமாக எமது ஊர்  விளங்கிவந்ததுசமூக அமைப்பை நோக்கின் காணிகளினதும், விவசாய
நிலங்களினதும் உடைமையாளர்களாக உயர் வகுப்பினர் விளங்க, அவர்களது குடிமக்களாக, நிலபுலமற்ற, அடிப்படை வாழ்க்கை வசதிகளற்ற நாளாந்தக் கூலிகளாகச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வந்தனர்.
யாழ்ப்பாண அரசுக்காலத்திலிருந்து கிராமிய மட்டத்தில் நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள உடையார், முதலியார் போன்ற பதவிகள் இருந்து வந்தன போதுக்கேயர்ஒல்லாந்தர்கள் இக்கிராமிய நிர்வாக அமைப்பை ஏற்றுச் சுதேசமொழிகளின் மூலம் நிர்வாகம் நடத்தினர். இன்நிர்வாகப்பரைம்பரைகள் தொடர்ந்தன. 1979ல் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபோதும் உடையர், முதலியார் பரம்பரையினர் காணப்பட்டனர். சமூகத்தில் மேற்தட்டு வர்க்கட்தினராக வாழ்ந்த இவர்களது குடும்ப உறவுகள் பெரும்பாலும் ஏனைய கிராமங்களில் உள்ள இவ்வர்க்கங்களுடனேயே இருந்துள்ளன எனலாம். இறுக்கமான வர்ணப்பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவாம்.
               இம்  மேற்தட்டு வர்க்கத்தினர் சைவசமயப்பற்றுமிக்கவர்களாக விளங்கினர். திண்னைப்பள்ளிகளை  அமைத்தோ அல்லது அவற்றுக்கு ஆதரவளித்தோ நிர்வாகக்கடமைகளைச் செய்யக்கூடிய அளவுக்குக் கல்வியறிவு உடையவர்களானார்கள், இவ்வாறான ஒரு முதலியார் பரம்பரை குரும்பசிட்டியிலும் காணப்பட்டுவந்தது.
19ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 
1.கிராமிய நிர்வாகக்கடமைகளை மேற்கொண்ட முதலியார் பரம்பரை
2.  நிலபுலமுடைய உயர்சாதி விவசாயிகள்
3.  விவசயக்கூலிகளாகவேலைசெய்யும் குடிமக்கள் என
இனம் காணக்கூடிய சமூக அமைப்பு குரும்பசிட்டியில் காணப்பட்டுள்ளது. 1833இல் ஆங்கிலேயர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கியதும் நிர்வாகக்கடமைகளைச் செய்வதற்கோ அல்லது அரச பதவிகளைப்பெறுவதற்கோ ஆங்கில அறிவு இன்றியமயாததாகியது. எனவே திண்ணைப்பள்ளிகளில் தமிழ்கற்ற  மேற்தட்டு வர்க்கத்தினரில் ஒரு சாரார் ஆங்கிலம் கற்கத்தலைப்பட்டனர். குரும்பசிட்டியில் 1850களில் பிறக்கிறாசி சின்னக்குட்டி, சிறாப்பர் கனகசபாபதி, கச்சேரி லிகிதர் மேவின் முருகேசு, முதலித்தம்பி முதலானோர் அரிவுடைய்வர்களாகக் காணப்பட்டனர்எமதூரைச் சேர்ந்த எஸ். ஆர் முத்துக்குமாரு முதலியாரும்  அவரது தம்பியார் வி.எம். முத்துக்குமாரு முதலியாரும் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூறியில் பதிதொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறந்த ஆங்கிலப்புலமையுடய முதன்மயான மாணவர்களாகத்தன்னுடன் கற்றனர் என நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 23.08. 1942 ல் ஈழகேசரியில் கட்டுரை வரைந்துள்ளார். எஸ்.ஆர். முதுக்குமாரு பற்றி மேலும் அவர் குறிப்பிடுவதாவது "சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, தொகுக்கப்பட்டபோது அதற்கு துணை ஆசிரியராக விளங்கினார். சுமார் 23,000 ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ப்பதங்கள் தேடியெடுத்து ஆங்கில தமிழ் அகராதியொன்றை தொகுக்கும்படி தன்னிடம் வழங்கினார். என்கிறார். 1890களில் ஆர். ஆர்.நல்லையா சகோதரர்கள் யாழ்.மத்தியகல்லூரியில் ஆங்கிலக்கல்வி பெற்றுப் புகழ் பூத்தமாணவர்களாக விளங்கியுள்ளர். ஆங்கிலக்கல்வி பெற்று அரசாங்க உத்தியோகம் நாடிய இத்தகயவர்களை விட மறு பிரிவினர் திண்ணைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்துள்ளனர். சோமனாதமுதலியார் வழிவந்து 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நன்னித்தம்பியின் புதல்வராக 1861ல் பிறந்த சின்னத்தம்பி ( சின்னச்சட்டம்பி ) தமிழ் கற்றுச் சிலகாலம் தமிழ் ஆசிரியராக விளங்கியுள்ளார். இவரது உறவினரான பொன்பரமானந்தர் தமிழ் கல்வி பெற்று 1890இல் ( 11வயதிலேவீமன்காமம் சென்று கல்வி கற்றுள்ளார் இவற்றிலிருந்து 19ஆம் நூற்றாண்டில்  முதலியார் பரம்பரையினரின் சூழலில் திண்னைப்பள்ளிகூடம் செயற்பட்டதனை ஊகிக்க முடிகிறது. இவர்களில் வேறொரு சாரார் ஆங்கிலக்கல்வியை பெறவிரும்பினர். எனினும் கிறிஸ்தவப்பாடசாலைகளுக்குச் செல்ல விரும்பவில்லை. அத்தகயவர்கள் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி,(1910இன் பின்மகாஜனாக்கல்லூரி, யாழ்.இந்துக்கல்லூரி போன்ற சைவப்பாடசாலைகலுக்குச் செல்லலாயினர்.
 மேற்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டும் கல்வி என்றிருந்தநிலைபொன்பரமானந்தர் அவர்களது பாடசாலை 1900இல் ஆரம்பித்ததும் பெருமாற்றம் கண்டது. விவசாயிகள், தொழிலாளிகளுடைய பிள்ளைகள் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இது குரும்பசிட்டியைப் பொறுத்தவரை ஒரு அறிவுப்புரட்சியாகியது. பல தமிழ் ஆசிரியர்களை உருவாக்கியது. அயற்கிராமமான கட்டுவனில் 1922இலும் சைவப்பாடசாலை தோன்றின. எனவே கல்விச்செயற்பாடுகளில் இவ் அயற்கிராமங்கள் எமது கிராமத்தைவிட சுமார் 20 ஆண்டு இடைவெளியை சந்தித்தமை காண்கிறோம்.
எமது மக்கள் சமூகநாட்டமுடையவர்களாக, கிராம அபிமானமுடைய்வர்களாக திகழ்தனர்.இதன் பேறாக எமது கிராமம் பல்வளமும் நிறைந்த ஒரு சிறு நகராக வெகுவிரைவில் உயர்ச்சி பெற்றது. எம் மக்கள் எங்கு சென்றாலும் நன்மதிப்பைப் பெறக்கூடிய ஒரு பண்பாடு உருவாகியது.
-நன்றி,குரும்பசிட்டி