அறிவியல்


பாம்புப்பு பால் ஊற்றுவது ஏன் தெரியுமா..??

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில்  இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

எறும்பும் - சக்கரையும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசிய தகவல்.!

குழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்ப
குழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்பவை. இந்த எறும்புகள் அங்குமிங்கும் சிதறி, உணவு தேடிக் கண்டு பிடிக்கும் பணி புரிபவை.
சர்க்கரை போன்ற உணவுப் பொருளைக் கண்டறிந்த எறும்பு உடன் தனது கூட்டிற்குத் திரும்பும். திரும்பும் போது தனது அடி வயிற்றிலிருந்து வாசனைப் பொருள் ஒன்றைத் தொடர்ந்து தரையில் விழச்செய்யும். இவ்வாசனைப் பொருளை நுகரும் பிற எறும்புகள் அவ்வழியே சென்று சர்க்கரை அல்லது உணவுப் பொருட்களைக் கண்டறிந்து கொள்கின்றன.

🐜🐜🐜🐜🐜🐜

பலாப்பழத்தில் உள்ள ஒரு பரம ரகசியம் : ஆச்சரியம் ஆச்சரியம்.!!

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.  "பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை." - கணக்கதிகாரம்-
சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்-விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

🎋🎋🎋🎋🎋🎋

புற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை

வண்டை விழுங்குவதனூடக புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறையொன்று பேரு நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

 பேரு நாட்டின் தலைநகரமான லிமாவில், ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் இவ் சிகிச்சை முறை முன்னெடுக்கப்படுகின்றது.

 ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

 இவ் வைத்திய முறையை அறிந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் பேரு நாட்டிற்கு படையெடுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

💖💖💖💖💖💖

மத மாற்றமும் மன மாற்றமும்


கிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் இலங்கை, இந்தியாவின் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்து மதமாற்றம் செய்கின்றன என்று சமூக வலைத் தளங்களில் செய்திகள் வருகின்றன. அவ்வாறு மதமாற்றம் செய்யும் சுயாதீன திருச்சபைகளுக்கு எதிராக விமர்சனங்கள் பலவாறு இந்துவாதிகளால் முன்வைக்கப்படுகின்றன.


மத மாற்று வாதிகள் மக்களின் எவ்விதமான பலவீனங்களை ,தங்களுக்குச் சாதகமாக உபயோகித்து மக்களை அணுகி மூளைச் சலவை செய்கிறார்கள் என உணர்ந்து  இந்துமதவாதிகள் அவற்றினைத்  தீர்ப்பார்களானால் இப்படியான மத மாற்றங்களுக்கு சூழ்நிலையே எழுந்திருக்காது, எழாது, என்பது எமது கருத்து.

 மத மாற்றங்களுக்கு அனுகூலமாக இருப்பது வறுமை , அறியாமை, சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பன என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

1.வறுமை :-தமது மக்களின் வறுமையையும் அறியாமையையும் இல்லாமல் செய்வதற்கு எத்தனை இந்து அறக்கட்டளைகள் நம் மத்தியில்  உண்டு? எத்தனை இந்து ஆலயங்கள் நம் மத்தியில்  உண்டு?

2.அறியாமை :-தமது மக்களை ஆன்மிகத்துறையில் வளர்த்தெடுக்க எந்த ஆலயம் முயற்சி எடுத்தது? மதமாற்ற வாதிகளின் முன் நிமிர்ந்து கதைக்கும் ,ஆன்மிக அறிவு வல்லமையினை எந்த ஆலயம் தம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது?

3.சாதி ஏற்றத்தாழ்வுகள்:-எல்லோரும் ஒருகுலம் என செயற்படும்  இந்து ஆலயங்கள் எங்கு உண்டு? சாதி காரணமாக வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுக்க எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு?

 குறிப்பிட மக்கள் ஆலயத்தினுள் பிரவேசிக்கக் கூடாது, தேர்வடத்தில் முட்டக்கூடாது என்ற அறிவித்தல்களினால்  ஏற்பட்ட முரண்பாடுகளினால் ஆலயங்கள் திருவிழாவின்றி மூடப்பட்டும் காணப்படுவது , இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் பல லட்ஷம் மக்கள் கொல்லப் பட்ட பின்னரும், இந்து ஆலயங்களின்  எண்ணங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலைக்குரிய செய்திகளாகவே மக்களால் கணிக்கப்படுகின்றன.

2009 யுத்த முடிவுக்குப் பின் இலங்கையின் தமிழ் பகுதிகளில் பழைய கோயில்கள் பெருப்பிக்கப்படுகின்றன. இடிந்த கோவில்கள் மீளக் கட்டி எழுப்பப்படுகின்றன. கோபுரங்கள் வான் வரை வளர்ந்து நிற்கின்றன. சிறிய பெரிய கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு புது வண்ணம் பூசப்பட்டு ஜொலித்துக் கொண்டு தெரிகின்றன. யுத்தத்தின் முன் புளிய மரத்தின் கீழ் இருந்த வைரவ சூலம் மட்டும் இருந்த வணக்கத்துக்குரிய பகுதிகூட இன்று ஆலயமாக வளர்ந்து நிற்கிறது. இவ்வாறு கோவில்களைக் கட்டுவதற்கு செலவழிக்கப்படும் பணம்  முழுவதும் தமிழர் புலம் பெயர் தேசங்களிலிருந்தே வருகிறது.

அதேசமயம் இலங்கையின்  உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களாக விதவைகள், அனாதைப் பிள்ளைகள் ஊனமுற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் நெருக்கடியுள் வாழ்ந்திருந்தும்  அவர்களுக்கு எந்த விதமான உதவிகளும், சில தனிப்பட்ட அமைப்புகளைத் தவிர  இந்து அமைப்புகளாலோ அல்லது இந்துஆலய சபைகளினாலோ கிடைப்பதில்லை என்ற கருத்துக்களும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

எனவே , வறுமை , அறியாமை, சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பன நீக்கி மக்கள் சேவை மகேசன் சேவை என மன மாற்றம் ஏற்படும் வரை ,விமர்சனத்துக்குரியவர்களாக நாம் இருந்துகொண்டு மதமாற்ற முயற்சிகளை எதிர்ப்பதில் பயனில்லை.
⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪செ .மனுவேந்தன்



"கருப்பு பூனை குறுக்கே பாய"


"கருப்பு பூனை குறுக்கே பாய 
கருப்பாயி கலங்கி பயணம் நிறுத்த 
மருண்டு அருண்டு எலி  பதுங்க 
வெருண்டு பூனை வெறுக்குது பார்க்குது!" 

"கருப்பு காகம் முற்றத்தில் கரைய 
கருப்பாயி வாசல் கதவு பார்க்க 
கருப்பன் வரும்  நம்பிக்கை துளிர 
நெருப்பு  மனது எரியுது  தவிக்குது !"

"கருப்பு விழிக்கு விக்கல் வர 
கருப்பன் இவள் நினைவோ என 
வருடி அழுத்தி நெஞ்சை இளக்க  
இருந்த விக்கல்  மறையுது போகுது!"    
  
"கருப்பு பல்லி தலையில் விழ 
கருப்பாயி நெஞ்சம் பதைத்து துடிக்க 
கருப்பன்  என்ன ஏதோ என 
ஒரு தீபம் காட்டுது முட்டுது!" 

"கருப்பு மேகம் இடி முழங்க 
கருப்பன் புது கடை திறக்க 
கருமம் இன்று வெள்ளி 13
விரும்பு  இதயம் வலிக்குது வெடிக்குது!" 


"கருப்பு புகை விளக்கு கக்க  
பெருத்த ஆந்தை இரவில் அலற 
கருப்பன் பாயில் படுத்து கிடக்க 
தருணி   நெஞ்சம்   துடிக்குது கலங்குது!"

"கருப்பு இருட்டில்  சென்ற கருப்பன் 
வெருண்டு அலைந்து  வீடு திரும்ப 
குருட்டு  பிசாசு பிடித்ததோ என 
திருட்டு  வேலணை சொல்லுது கூப்பிடுது!" 

"கருத்து அற்ற மூட நம்பிக்கை 
அரும்பி உள்ளம் நிரம்பி வழிய  
கருப்பாயி படும் பாடு கண்டு 
கருப்பன் மனது  ஏங்குது சிரிக்குது!" 

✍-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா


செய்வன திருந்தச் செய் சேரிடம் அறிந்து சேர் 
என்று மூதாட்டி ஔவையார் ஆத்தி சூடியில் கூறியுள்ள அறிவுரைகளை மனதில் கொண்டு நாம் எந்நாளும் நமது கடமைகளை முறையாக, நேர்மையான வழியில் முழுமையாகச் செய்தல் வேண்டும். நல்லவர்களுடன் மட்டுமே சேர்ந்து பழக வேண்டும். அவ்வாறு நடந்தால் வாழ்வில் நமக்கு இடையூறுகள் வாரா. 
தற்கால உலகில் நல்லவர்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது, காரணம் பொருள் ஒன்றையே பெரிதாகக் கருதி, அப்பொருளையும் அதனால் கிடைத்திடும் சுகவாழ்வுக்கும் ஆசை மிகக்கொண்டு தன்மானத்தையும் நற்கொள்கைகளையும் இழக்கவும் தயங்காத கேடு கெட்ட சுபாவம் மனிதனைத் தொற்றிக் கொண்டதேயாகும். 

செலவுகளைக் குறைத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் துர்நோக்கத்துடன் ஆற்று நீர் அனைத்திலும் ஆலைக் கழிவுகளைக் கலந்து வெளியேற்றும் பல தொழிற்சாலைகள் லஞ்ச லாவண்யத்தின் மூலம் அரசின் அனுமதியுடன் தொடர்ந்து நடத்தப்படுவதால் ஆற்று நீருடன் நிலத்தடி நீரும் விஷமாகிறது. 

இதன் காரணமாக ஏற்பட்ட சீரழிவு ஏதெனில், மக்களுக்குக் குடி நீர் கிடைக்காமல் இன்று திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பங்குபெறுவோர் முதல் தினசரி ஒவ்வொரு வீட்டிலும் குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்கும் முரண்பாடான நிலை நிலவுகிறது. இத்தகைய நிலை தொடர்ந்தால் உலகில் மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்கள் எவையும் வாழ இயலாத கேடு விரைவில் ஏற்படும். அப்பொழுது இது போல் குறுக்கு வழியில் பணத்தைத் தேடியவர்களும் இந்த அவல நிலைக்குட்பட்டு மடிவது உறுதி. 

நேர்மையற்ற வழியில் பணத்தைத் தேடுவோர் இன்றைய சமுதாயத்துக்கு விளைவிக்கும் கேடுகள் எண்ணற்றவை. "குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம்" என்ற கூற்றுப்படி இவர்கள் பிறரை அழிவுப்பாதையில் தள்ளுவதுடன் தானும் அவர்களுடன் சேர்ந்து மடிய நேரும் என்பதை அறியாது தவறு செய்கின்றனர். அத்தகைய சுயநலவாதிகளை நீக்கி, நாட்டை நல்லோர் பொறுப்பேற்று நடத்த வழி காண்பது மிகவும் அவசியம். 
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா 
படம்: மஹாதேவி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1957
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
ஓ... ஓ.. ஓ..
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
ஆ.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ
☂️☂️☂️☂️☂️☂️☂️