“புத்தாண்டே”

 

 


"இழிவூட்டும் இன்னல்களை நேற்றோடு அகற்றி

இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் அளித்து

இதழோடு முத்தமிட்டு அன்பாக அணைத்து

இனிதாய் வாராயோ மலரும் புத்தாண்டே !"

 

மலரும் 2022 இல் மகிழ்வாக இருக்க

அலறும் கோவிட்டே விலகி போகாயோ ?

நிலவின் ஒளியில் இன்பம் பொழிய

புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ ?”

 

"கழனி எங்கும் கதிர்கள் ஆட   

கயவர் கூட்டம் உளறுவதை நிறுத்த

கருத்து சுதந்திரம் பாது காக்க

கடந்த ஆண்டு அனுபவமாக மாறட்டும்!"

 

"பட்டிதொட்டி எல்லாம் மங்களம் ஒலிக்க

மட்டு மரியாதையுடன் மேள தாளத்துடன்

வாட்டசாட்டமாக புது ஆடை உடுத்து

பட்டாசு வெடிக்க வருக புத்தாண்டே!"  

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

புத்தாண்டு புதுமைகள் படைக்கட்டும்வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்டிருக்கிறான்.

விஞ்ஞானம் எப்படி மனிதனுக்கு நன்மைகள் விதைத்தாலும் ,மறுபக்கத்தில் தீமைகளையும் இணையாக விதைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

 அதேபோலவே மனிதனும் காலச்சக்கரத்தில் மனிதத்ததை மேம்படுத்தியவர்கள் ஒருபுறம் இருந்தாலும் , அதே மனிதத்தை இழந்தவர்களும் இன்னொருபுறம் மலிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வெவ்வேறு வடிவங்களில் திரிப்படைந்து இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்,மாறிவரும்  மாபெரும் விஞ்ஞானப் புரட்சிக்கே பெரும் சவாலாக அமைந்துவிட்டது.

எனவே, இடம்,காலம்,சுற்றாடல் புரிந்து ,நடந்து பிறக்கும் ஆண்டில் கொள்ளை நோய்கள், ஏமாற்றங்கள்கவலைகள் அற்ற ஆண்டாக அனைவருக்கும் கிடைக்க நாம் வாழ்த்தி வணங்குகிறோம்.
அதேவேளையில் தீபம் சஞ்சிகையும்  தரமான ,ஆரோக்கியமான ஆக்கங்களுடன்  பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சந்திக்கவைத்த தீபம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் , தீபம்  தனது 11வது ஆண்டு நிறைவினை க்கடந்து கடந்து அதன் வளர்ச்சிப்பாதையில் மேலும் தமிழுக்கும், சமுதாயத்திற்கும் எம் பணி தொடரும் என்பதில் பெருமை கொள்கிறோம். நன்றி 
 
www.ttamil.com✍←தீபம்→✍www.theebam.com


தமிழ்நாடு,இலங்கை- சுனாமி...! -நினைவு நாள்


26 டிசம்பர் 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத் ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின
தமிழர் கண்ட கொடுமையான நாட்கள் பல. அதில்  இது கொடுமையிலும் கொடுமை.
கரையைத் தாண்டி வந்த கடலே...


     
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
கரையைத் தாண்டி வந்த கடலே, நம்
ஊரை  அண்டியதும்  முறையோ
யாரைத் தேடி நீ வந்தாய் பாரிலுன்
பேரைக் கெடுத்து நீயும் சென்றாய்.

🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊🏊
விழுங்கிய குமரிக் கண்டத்தினுள்
விளைந்து வளர்ந்தவளடி நீயும்
அழுகிய இனவாதப் பேய்களுடன்
பழகியதால் வந்த பழக்கமோ யிது

🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
பண்  பாடிய புலவரெலாம் உன்னை
பெண் என்றார் ,தெய்வம் என்றார்
விண் தொட்டு நீ எழுந்தனையோ
கண்கெட்டு நீ நடந்தனையோ

⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵
உப்பாய் நீ உவர்ந்தபோதும் கூட
தப்பாயுனை  எடைபோட் ட தில்லை
உரக்க நீ விரைந்து வந்தெம்மில்
அரக்கத்தனமாடி  அழித்தனையோ

😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵
கஞ்சி கொடு தெய்வமே  யென
கிள்ளியே வாழ்ந்தோம் உன்னில்
வஞ்சித்துவிட்ட  வஞ்சகியே யெம்மை
அள்ளியே சென்ற அரக்கியடி நீ

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
வேலி கடந்து வந்து என் தாயோர்
தாலியறுத்து நீ காவிச் சென்றாய்
காலி செய் தே யவர்கள் வாழ்வினை
கேள்வி யாக்கியப் பேரலை நீ


 🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
துணையாள் எந்தன் காதலிபோல்
மனையுடன் இழுத்து மங்கைகள்
இணையற்ற வாழ்வொழிய எமனா
துணை நின்ற துரோக்கியடி நீ

🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼
பழகிய தம் உறவுகளைக் காணாது
குழறியழவும் தெரியாது மிரளும்
அழுகிய குழவிகளை உன் கரையில்
அனாதைகளாக்கி விட்ட ஆழியடி நீ

💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑
ஓடி ஒளித்தும்  எங்கள் மண்ணில்
கூடி வாழ்ந்த குடும்பங்களை நாடி
தேடி மொத்தமாய்க் கொன்றொழித்த
கோடிமடங்கு கொடுமைக்கா ரியடி நீ

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அழுது அழுது அலுத்தவர் நாம்
விழுந்து விழுந்து எழுந்தவர் நாம்
முழு முயற்சியில் முன்னேறுவோம்
வலுவான தமிழராய் வளர்ந்திடுவோம்


↫ 2004 இல் இலங்கையை தாக்கிய சுனாமி நினைவாக உதயன் பத்திரிகையில்   வெளிவந்த  கவி. ↬

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமிமூளைக்குப் பயிற்சி- 01-வினாவுக்குரிய பதில்கள் -01

[[புதிர்பகுதிக்கு செல்ல இங்கே அழுத்துக 👉Theebam.com: மூளைக்குப் பயிற்சி:]கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0025]:விடை

விடை:13வட்டங்கள்

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0024]:விடை
அதாவது விடை: வோ , ழெள, ளோ,  ழொ 

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0023]:விடை

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0022]:விடை
ஒவ்வொரு நாளும் 2 மீற்றர் எறியபின் 1 மீற்றர் வழுக்கியது என தரவில் குறிக்கப்பட்டிருந்ததால் விடை 4 நாட்கள் என்பதே சரியாகும்.(ஏறும்பொழுது வழுக்குகிறது என்று குறிப்பிட்டிருந்தால் விடையினை சரியான அளவில் கூறியிருக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.)

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0021]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0020]:விடை
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0019]:விடை
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0018]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் புதிர் இலக்கம் 0017]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0016]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0015]:விடை[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0014]:விடை
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0013]:விடை


[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0012]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0011]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]
கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0010]: விடை[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0009]: விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0008]:விடை


 
[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0007]:விடை


[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0006]:விடை

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0005]-விடை
[குத்தூசி, கடிகாரம், உலக்கை, ஆட்டுக்கல், அம்மி, உரல், கடிதம், உழவாரம், மத்து, அரிவாள், சுளகு, கடகம், துலா, துலாப்பட்டை, செம்பு, காம்புச்சத்தகம், கலப்பை.]

[புதிர்களை அறிய கீழே செல்லுங்கள்]

கண்டுபிடியுங்கள் [புதிர் இலக்கம் 0004]-விடை

மூளைக்குப் பயிற்சி-புதிர்-01

இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, நினைவாற்றலலை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்கம். ஒரு திறமையினைக் கற்பது கடினம் ஆனால் அவற்றினை மறப்பது சுலபம். எனவே அவற்றினை தவிர்த்து இணைந்தே முன்னேறுவோம். உங்கள் வருகைக்கு நன்றி.[riddle in tamil][விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-]


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0025]:

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0024]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0023]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0022]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0021]:கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0020]:

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0020]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0019]:

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0018]:கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0017]:கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0016]:


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0015]:கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0014]:


கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0013]கண்டு பிடியுங்கள் : [புதிர் இலக்கம் 0012]


கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0011] -பின்வரும் படத்தில் இறுதியாகத் தவறிய இலக்கங்கள் எவை?

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0010]
கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0009]


கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0008]


[விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-]

👌👌👌👌👌👌👌👌👌

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0007]

பின்வரும் பொதுஅறிவு வினாக்களுக்குரிய சரியான விடையினைத் தெரிவு செய்க,[விடைகளை அறிய கீழே செல்லுங்கள்-] 

👌👌👌👌👌👌👌👌👌

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0006]

கீழே தரப்படுள்ள A ,B ஆகியவற்றில் தவற விடப்பட்ட இலக்கங்கள் எவை?

[விடைகளை அறிய கீழே செல்லுங்கள்] 

👌👌👌👌👌👌👌👌👌

கண்டு பிடியுங்கள் :[புதிர் இலக்கம் 0005]

நவீன உலகில் தொலைந்துபோன [உறி ,திருகணி போன்றனவற்றை தவிர] பொருட்கள் நேர்கோட்டில் மறைந்து காணப்படுகின்றன. அவை எவை?