இரும்புச் சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா?

நம்மில் ஐந்தில் ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்கிறோம் என்றும், பத்தில் ஒருவர் நீடித்த அயர்ச்சியால் அவதிப்படுகிறோம் எனவும் 'தி ராயல் காலேஜ் ஆஃப் சைக்கார்ட்ரிஸ்ட்' குறிப்பிட்டுள்ளது. இது காரணமே இல்லாமல் சில நேரங்களில் ஏற்படுகிறது.


சோர்வுற்றதன்மைக்கும் களைப்புக்குமான காரணிகளை நாம் இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம் என்பது வியப்பளிக்கிறது. இதில் நம் உணவுப் பழக்க வழக்கங்கள் வகிக்கும் பங்கு பற்றிய சில வியப்பான உண்மைகளை இந்த புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.

 

இரும்புச்சத்து குறைபாடு உங்களை எவ்வாறு பாதிக்கும்?

உலகில் மிகவும் பொதுவாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு இரும்புச்சத்து குறைபாடே ஆகும். உலக சுகாதார அமைப்பின்படி, உலகிலுள்ள மக்கள்தொகையில் 30 சதவீதம் பேருக்கு ரத்த சோகை உள்ளது.

 

பிரிட்டனில் 11 முதல் 18 வயது வரை உள்ள இளம்பெண்களில் 48 சதவீதம், 19 முதல் 64 வயது வரை உள்ள பெண்களில் 27 சதவீதம், 11 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள், இளைஞர்களில் பத்தில் ஒருவர், குறைவான இரும்புச்சத்தை உட்கொள்கின்றனர் என்று அந்நாட்டு தேசிய உணவுப் பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு கண்டறிந்துள்ளது. இது உங்களின் ஆற்றல் அளவை எவ்வாறு பாதிக்கிறது?

 

உங்களுக்கு ரத்த சோகை இல்லையெனில், உங்களின் இரும்புச்சத்தை அதிகரிப்பதன் மூலம் தீர்வு காண முடியுமா?

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

 

இது, ரத்த சோகை ஏற்படக்கூடிய அளவுக்கு உங்களின் ஹீமோக்ளோபின் இருந்தாலும் அதிகரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

ரத்த சோகை உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை விட ரத்த சோகை இல்லாத இரும்புச்சத்து குறைபாடு மனிதர்களை மூன்று மடங்கு பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு களைப்புக்கான காரணிகளில் இதை குறைந்து மதிப்பிடப்பட்டது, குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள கூடிய வயதில் உள்ள பெண்களுக்கிடைய இது நிலவுகிறது என்று பிரிட்டனின் மருத்துவ இதழும், அந்நாட்டு தேசிய சுகாதாரச் சேவையும் ஒப்புக்கொண்டுள்ளது.

 

இந்த சிக்கலை மேலும் தெளிவுற விளக்க, 15 முதல் 18 வயது வரை உள்ள இளம்பெண்களில் 5 சதவீத பேருக்கு இரும்புச்சத்து குறைபாடுள்ள ரத்த சோகை உள்ளது; ஆனால், இதில் 24 சதவீத பேருக்கு குறைவான இரும்புச்சத்து உள்ளது. 35 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில், 4.8 சதவீத பேருக்கு இரும்புச்சத்து குறைபாடுள்ள ரத்த சோகை உள்ளது; ஆனால், 12.5 சதவீத பேருக்கு குறைவான இரும்புச்சத்து உள்ளது. ரத்த சோகையும் குறைந்த இரும்புச்சத்து சேகரிப்பும் இளைஞர்களிடமும், 64 வயதிற்கும் கீழ் உள்ள ஆண்களிடமும் காணப்படுவது அரிது. ஆனால், 65 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு குறிப்பிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

 

அப்படியெனில், நீங்கள் சோர்வாக இருக்கும்போது, இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களின் மருத்துவரை அணுகி, தேவையான ஆலோசனைகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

 

பிற சத்து குறைபாடுகளும் களைப்பை ஏற்படுத்துமா?

நம்மில் பலரும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துள்ள மாத்திரைகளை உட்கொள்வோம். ஆனால், இரும்புச்சத்து தவிர்த்து மற்ற வைட்டமின் அல்லது தாதுச்சத்து குறைபாடுகள் காரணமாக சோர்வு ஏற்படுவது பொதுவானதா?

 

வைட்டமின் டி: பிரிட்டனின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது. அதன் அறிகுறிகள் களைப்பு ஆகியவையாகும். சூரிய ஒளி மற்றும் மாத்திரைகள் மூலம் வைட்டமின் ’டி’யை பெறலாம்.

 

வைட்டமின் பி12: அனைத்து வயதினருக்கும் குறைந்த வைட்டமின் பி12 உள்ளது. பி12 குறைபாட்டின் அறிகுறியாக சோர்வு அல்லது உயிர்ச்சத்து ரத்தச்சோகை இருக்கலாம். ஆனால், பொதுவாக உறிஞ்சும் சக்தி தொடர்பான சிக்கல்கள் ஏற்படும்.

 

துத்தநாகம்: 11 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த துத்தநாகம் உள்ளது. ஆனால், இது தொடர்பான குறைபாடு மிகவும் அரிது. மாத்திரைகள் உட்கொள்ளும் போது கவனமாக இருங்கள். ஏனெனில், அளவுக்கு அதிகமான துத்தநாகம் ரத்த சோகையை ஏற்படுத்தலாம்.

 

வைட்டமின் ஏ: 11 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வைட்டமின் ஏ-வின் அளவில் பரித்துரைக்கப்பட்டதை விட குறைந்த அளவே எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த குறைபாட்டின் அறிகுறி தெரியும் அளவுக்கு இருப்பது அரிது.

 

எப்போதும் மருத்துவரை அணுகுங்கள்

நீங்கள் எப்போதும் சோர்வாக இருந்தால் மிகவும் முக்கியமான மருத்துவப் பாதிப்புகள் இருப்பதன் சாத்தியங்களை நிராகரிக்க, மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும். சில வைட்டமின்களையும் தாது சத்துக்களையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் உங்களின் மருத்துவரிடம் பேசுங்கள்.

நன்றி:பி பி சி தமிழ் /ஃபியோனா ஹண்டர்/ஊட்டச்சத்து நிபுணர்/

0 comments:

Post a Comment