கனடாவில்........


ஈழத்தமிழ்த் திரைப்படத் துறையில் கனடியத் தமிழ்க் கலைஞர்களின் பங்களிப்பில்...

ஸ்ரார் 67
 Water sound picture இன் தயாரிப்பில்  30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று  கனடாவில் scarborough இல் உள்ள Cineplex தியேட்டரில் வெளியிடப்பட்டது ஸ்ரார் 67

     புலம்பெயர்ந்த எம்மவரிடையே பொதுவான பிரச்சனைகளில் ஒன்றே இலக்கமற்ற தொலைபேசி அழைப்புக்கள். இவ்விலக்கமற்ற தொலைபேசி அழைப்புககளினால் அல்லல்ப்படும் ஒரு குடும்பத்தின் கதையே ஸ்ரார் 67. முற்றுமுழுதாக கனடாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் அனைத்துலகத் திற்கும் பொதுவான பிரச்சனையை ஆழஊடுருவி நிற்பது மெச்சத்தக்கது. இதன்மூலம் எங்கள் சமூகத்தின் சர்வதேசப் பிரச்சனையை கையிலேடுத்து தீர்வுகண்டிருக்கும் கதி.செல்வக்குமார் மற்றும் றைடன் பாலசிங்கத்தின் சமூகபொறுப்புணர்வும் சமூகத்தின்மேல் கவிந்திருக்கும் அவர்களின் பரிந்துணர்வும்  வெளிப்படும் திரைப்படமே ஸ்ரார் 67

     கனடாவில் ஏறக்குறைய நாற்பது திரைப்படங்கள் எம்மவர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த போதும் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அம்சங்களை தாங்கிவந்தவை ஒருசிலவே. எனினும் அவைகளாலும் மக்களின் கவனத்தை கவரமுடியவில்லை. ஏனையவை குறுந் திரைப்படங்களாகவும் பரீட்சார்த்த முயற்ச்சிகளாகவுமே வெளி வந்திருந்தன. இந்நிலையில் ஒரு முழுமையான திரைப்படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் தாங்கி இன்றைய ஹொலிவூட்டின் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது ஸ்ரார் 67

    கனடாவில் எம்மவரின் திரைப்படவரலாறு குழந்தைப்பருவத்தைக் கடந்து டீன்ஏஜ் பருவத்தில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப இத்திரைப்படமும் இளமையின் கனவுகளுடனும் அதற்குரிய வேகத்துடனும் நகர்ந்து செல்கிறது. புலம்பெயர்ந்து புதியஇடத்தில் பதியம் வைக்கப்பட்ட எமது இளைஞர்கள் எப்படியாவது சாதித்து விடத்துடிப்பதை அப்பட்டமான கதைவசனங்களுடன் காட்சிப்படுத்தி இருக்கும் ஸ்ரார் 67 எம்மவர்  சிலரின் ஒருபக்க வாழ்க்கையை அப்படியே எங்களின் கண்முன்னே தருகின்றது.

இத்திரைப்படம் சமூகத்திற்கான படிப்பினையல்ல சமூகத்தின் மீதான ஒரு பார்வையே. தொடர்ந்தும் திரைப்படம் ஊடாக சாதிக்கத்துடிக்கும் கதி.செல்வக்குமாரின் தயாரிப்பில் வெளிவருகின்றது ஸ்ரார் 67

     கதி.செல்வக்குமார் இந்திய திரைப்படப்பாடலுக்கு அபிநயம் புரிந்த எம்மவரின் கனவுகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியவர். 1997இல் வெளிவந்த இவருடையமனோரஞ்சிதம்எனும் பாடல்களின் ஒளித்தொகுப்பு முழுக்கமுழுக்க இவரின் சொல்லாட்சியில் உருவான பாடல்களுடன் வெளிவந்திருந்தது. முற்றுமுழுதாக இந்தியதிரைப்பட பாடல்களை பிரதி செய்வதை தவிர்த்து பாடல் நடிப்பு ஒப்பனை ஒளிப்பதிவு இயக்கம் என்பவற்றுடன் இந்திய இசையை மட்டுமே இணைத்து அவ்விசையை ஆழம் பார்த்த அளவுகோலாகவேமனோரஞ்சிதம்பாடல்தொகுப்பு அன்று வெளிவந்திருந்தது. இந்தியஇசையின் உயரத்தை அளந்துகொண்டமனேரஞ்சிதம்பாடல்தொகுப்பின் பின் அதற்கும் சற்றும் குறையாததரத்துடன் வெளிவந்தது இவருடைய இரண்டாவது பாடல் தொகுப்பானமுதல்நாள்பாடல்கள் வெளியீடாகும். பாடல்கள் நடிப்பு ஒப்பனை இயக்கம் இவைகளுடன் எம்மவர்களின் இசையினையும் இணைத்து முழுமையான ஒருதொகுப்பாக வெளிவந்திருந்ததுமுதல்நாள்

     கோடம்பாக்கத்தின் உயரத்தைத் தொட்ட இவ்விசைத் தொகுப்புகள் தந்த அனுபவத்துடன் இவரும் தனது அடுத்தபயணத்தினை ஆரம்பித்தார். குறுந்திரைப்படங்களில் காலடிவைத்த இவர் உபசாந்தி நிறங்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் என பதினாறு குறுந்திரைப் படங்களினை இவ்விடைக் காலத்தில் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இவ்வாறு பதினாறும் பெற்று பெருமையுடன் வாழ்ந்த இவரின் நீண்டநாள் கனவின் வெளிப்பாடாக தயாராகி வெளிவருவதுதான் ஸ்ரார் 67.

    தொட்டுவிட்ட சிகரங்களை தூரத்தில் விட்டுவிட்டு புதியபுதிய சிகரங்களை தேடும் இவரின் திரைப்படகனவுகளிற்கு வானமும் எல்லையில்லை. அதற்கு அப்பாலும் பிரபஞ்சத்தை கடந்தும்......ஏதோ ஒன்று? இந்த நிலையிலேயே ஹொலிவூட் சினிமாவின் தொழில்நுட்பங்களுடன் இவரின் பரந்துவிரிந்த கனவினையும் எம்கண்களின் முன்னால் கொண்டுவருகின்றது ஸ்ரார்67.

    இத்திரைப்படத்தின் திரைக்கதை இயக்கம் என்பவற்றை கதி.செல்வக்குமாருடன் இணைந்து உருவாக்கியவர்றைடன்வி. பாலசிங்கம் ஆவார். இலங்கையில் MTV எனப்படும் மகாராஜா தொலைக்காட்சி மற்றும் NEWS1 என்பவற்றில் எடிட்டராக கடமையாற்றிய இவரே ஸ்ரார்67 திரைப்படத்தின் படத்தொகுப்பபு மற்றும் E.S.P எனும் சலனப்பொறியியலி னையும் முழுமையாக கையாண்டுள்ளார். இவரிடம் கைவரப்பெற்ற புதியபுதிய தொழில்நுட்பங்கள் இத்திரைப்படத்தினை முழுமையாக்குவதில் பெரும்பங்கை வகிக்கின்றன. கதி.செல்வக்குமாரும் இவரும் இணைந்தது புலம்பெயர் சினிமாக்களிற்கு மட்டுமன்றி தமிழகசினிமாக்களிற்கும் சவாலாகியுள்ளதை   உலகம் உணர்ந்துகொள்ள வெளிவரும் திரைப்படமே ஸ்ரார் 67.

      புதினெட்டு நடிகநடிகையர் குறிப்பாக இமான் கண்ணன் ஹமில்ட்டன்சத்தப்பணகாய்ரமேஸ், கணபதி, இரவீந்திரன், மலர்விழி, யசோதா என கனடாவின் புகழ்பெற்ற திரைமுகங்கள் போட்டிபோட்டு நடித்திருக்கும் அற்புதமான திரைப்படம் ஸ்ரார் 67.

     இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் பார்ப்பவரின் மனங்களில் பதியுமாறு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளராக கடமையாற்றி உள்ள திரு.குகேந்திரன். கனடாவில் பாடகராக அறிமுகமாகி எல்லோரின் நெஞ்சங்களையும் தொட்டஉணர்ச்சிப்பாடகர்செந்தூரன் அழகையா இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கும் களமாக காட்சிதர வருகின்றது ஸ்ரார் 67.

    கதி.செல்வக்குமாரின் முந்தைய படைப்புக்கள் அனைத்தும்அன்னபூரணாஸ்தயாரிப்புகளாகவே வெளிவந்திருந்தன. எங்களின் பிறந்தகமானவல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் குளேஸ்ரெர் வரைவந்தஅன்னபூரணிஅம்மாள்என்ற பாய்க்கப்பலின் பெயரினைத்தழுவி உருவாக்கப்பட்டதுதான்அன்னபூரணாஸ்தயாரிப்பு நிறுவனம் ஆகும். காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.

ஆம் உங்களின் பார்வைக்கானது எங்களின் ஸ்ரார் 67
  தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்

0 comments:

Post a Comment