ஆராய்ச்சியாளரின் செய்திகள்


2029ல் கணணிகள் மனிதர்களை மிஞ்சிவிடும்
இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.
 இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
 அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.
 இது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.
 அந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.
 எல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.
 இதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.
 அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.
அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் :
டீன்ஏஜ் இளைஞர்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் போதும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழுவினர் தூக்கம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தினர். தினமும் 7 மணி நேரம் தூங்கும் டீன்ஏஜ் பருவத்தினர் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 1,724 பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எரிக் கூறுகையில்: 16 வயதுள்ள ஒருவருக்கு 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று முன்பு நம்பப்பட்டது. அவர்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவு என்றார். தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
எல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும். செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படும். சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு.

கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
அல்ட்ரா சவுண்ட் மூலம் புதிய முறையிலான கருத்தடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அல்ட்ரா சவுண்ட் மூலம் உடல் உள் உறுப்புகளை படம் பிடிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இதே அல்ட்ரா சவுண்ட் மூலம் கருத்தடை செய்யலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கருத்தடைக்கு பல்வேறு முறைகள் உள்ளன.ஆனால் அவற்றில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.வேறு சிலவற்றால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை.எனவே கருத்தடை முறைகள் இன்னும் முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை.

இப்போது கண்டுபிடித்துள்ள அல்ட்ரா சவுண்ட் கருத்தடை முறை முழுமையான வெற்றி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அல்ட்ரா சவுண்ட் அலைகளை உயிரணுப்பையில் தாக்க செய்து அதை செயலிழக்க செய்வது புதிய முறை கருத்தடையாகும். இந்தமுறை மூலம் உயிரணுவின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிடும்.
இதனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு முற்றிலும் நின்றுவிடும்.15 நிமிடத்தில் சிகிச்சை முடிந்துவிடும். இன்னும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா?
. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.
இதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறதுஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.
மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.
இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.
குழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம்:
 குழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று  நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 குறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு வரத்தொடங்கும் வயதிலேயே அதிபருமன் உடலுள்ளவர்களாக அவர்கள் ஆவதைத் தடுக்க முடியும். மழலையர் பள்ளிகளுக்கும் இதில் பங்குண்டு என்று ஆய்வில் ஈடுபட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஏதென்ஸ் ஹார்கோப்பியோ பல்கலைகழகத்தின் துணைப் பேராசிரியர். "உடல் உழைப்புக்கு வாய்ப்பில்லா நடத்தை முறைகள், குறிப்பாக, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை உடற்பருமன் அதிகரிப்பதற்கு வழி கோலுகின்றன"
ஸ்பெய்னில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை அடைவதற்கு முன்பே 40 சத குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகள் அதிபருமனாகிவிடுகிறார்கள் என்றும், ப்ரிட்டனின் ஐந்தில் ஒரு குழந்தை இக்குறைப்பாட்டைக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
'கடவுள்' இருப்பது உண்மை தான்!!
கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள்.

அதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம் (/editor-speaks/2010/03/31-atom-smasher-achieves-big-bang-collisions.html) ஆகிய கட்டுரைகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).
கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.
அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:
ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.
இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.
இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.
இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!


0 comments:

Post a Comment