விண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு
கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.
இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்டோஸ் 7 Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணணியை தொடங்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் Options திரையில் Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:windowssystem32sethc.exe c:
இப்பொழுது Sticky Keys கோப்பானது C: இல் கொப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe
Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.
இப்பொழுது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள். Login திரை தோன்றும் பொழுது Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)
Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.(பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச்சொல்லை(new password) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)
net user xxx newpassword
அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.
c:sethc.exe c:windowssystem32sethc.exe.
Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு விடும்.
இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.
இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:
1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.
இதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.
2. அக்கவுண்ட் எண்: மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.
3. தானாக தனி நபர் தகவல்: ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.
4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.
5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.
இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்களின் கவனத்திற்கு
இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.
1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.
2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.
4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
நீங்கள் சும்மா இருக்க, வீடுதேடி வந்து உங்களுக்கு லொத்தர் விழுந்திருக்கிறது, பரிசு வருகிறது, 100 மில்லியன் டொலர் பணம் அனுப்புகிறேன் என்று யாராவது சொன்னார் என்றால், அதனால் லாபம் அடையக்கூடியவர் நிச்சயமாக அவராய் இருப்பாரே ஒழிய நீங்கள் அல்ல. இந்த உலகில் தாமாகவே உங்களுக்குப் பணத்தை அள்ளித் தரக்கூடிய குணமுள்ள ஜீவன்கள் இதுவரை பிறக்கவில்லை!
ReplyDelete-சந்திரகாசன்