சிந்தனைஒளி


பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல...
மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல.
நீ சுமக்கின்ற, நினைக்கின்ற நல்ல நம்பிக்கை,
நீ கீழே விழும் போது, உன்னை சுமக்கும்.
தவறுகள் செய்யும் போது, மனசுக்கு தெரிவதில்லை
தவறுகள் தெரியும் போது, மனசாட்சி விடுவதில்லை..!
வாழ்க்கை உனது... முடிவும் உனது...
                                                        அதன் பலனும் உனது...
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள்..
ஆனால்... முடிவை மட்டும் நீ எடு.


1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, May 18, 2013

    "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல."
    வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம்.வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம் ,மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம்[கோவணம்/அரைக்கச்சை மாதிரி ].எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்துதான் கட்டப்படுகிறது.ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம் .

    இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "சாறி" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது .அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றைத் தான் கட்டினார்கள்.தமது மானத்தை காக்க.உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல் "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே" என கூறுகிறார் .

    சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால் ,அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம்,தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி ] போடலாம் .ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது.இந்த பாவனைதான் பதவியை காட்டுகிறது.

    ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது.இப்பவும் இருக்கிறது.உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே .அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள் ."நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.-புறநானுறு 186"அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது.அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது .

    குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள் .காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள் .

    என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது , அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் ,அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது -ஒரு கிரீடம் போல் .

    இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும்-அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால் .

    ReplyDelete