தொழிநுட்ப செய்திகள்

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சாரதி இன்றி வீதியில் தானாகவே ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அதை தொடர்ந்து அக்கார்களை பக்கிங்காம் ஷிரில் உள்ள மில்டன் கியன்ஸ் தெருக்களில் ஓட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் ஓடுவதற்கு வசதியாக அகலமான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 100 கார்கள் தயார் நிலையில் உள்ளன.
இக்கார்கள் எதிர்வரும் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் ஓட தொடங்கும் இவற்றில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதனுடன் தேவையான பொருட்களையும் எடுத்து செல்ல முடியும்.
இக் காரின் கண்டுபிடிப்பு சம்பந்தமான செய்தி ஏற்கனவே தீபத்தில் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே.
இது மணிக்கு சுமார் 19 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும். அதற்கான கட்டணம் 2 பவுண்ட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு..!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments:

Post a Comment