இந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:

இந்தியா! மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு! உலகின் புதிய ஒரு வல்லரசாக வந்துவிடுமோ என்று இதர நாடுகளை அச்சப்பட வைக்கும் அதன் வேகமான வளர்ச்சி! அந்நிய ஆக்கிரமிப்பினால் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அதன் ஆற்றல், சுதந்திரம் கிடைத்தபின்னர் வெளி உலகத்தினாரால் வியந்து போற்றப்படுகின்றது. இந்தச் சுதந்திரத்தை அடைவதற்காக எத்தனையோ தியாகிகள் தங்கள் உயிர்களையே அர்ப்பணித்தார்கள் என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மைதான்.
File:SungaEmpireMap.jpgஆனால், அன்னியர் வரும் முன்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த அரசியல் சூழ்நிலைகளை ஆழமாக நோக்கிப் பார்த்தோமானால், இந்த 'இந்தியா' என்றொரு நாடு 'இந்தியா' வாகக் கிடைக்க, நமக்கு வெள்ளையர்கள்தான் உதவினார்கள் என்ற ஒரு உரைக்கபடாத ஓர் உண்மையை எடுத்துக் கூறினால், மகாத்மா காந்தி முதலியோரை அவமதிக்கும் ஒரு நாட்டுப் பற்று அற்றவன் என்று கோபம் கொள்பவர்கள்தான் அதிகமாகக் காணலாம்.
File:Kharavela-Kingdom.GIFதேனீக்கள் தம் அயராத உழைப்பால் பல இடங்களிலும் சென்று, பல பூக்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கூட்டில் சேர்த்து வைத்த தேனை, நாம் சென்று மிகவும் இலகுவாகவே எடுத்தபின்பு   நாம்தான் தேனைச் சேர்த்தோம் என்று சொல்லலாமா?
இன்னமும் கூடிய கடினமான உழைப்புதான் இந்தியா என்ற நாட்டை உருவாக்குவதற்கு வெள்ளையர்கள் செய்யவேண்டி இருந்தது. அவர்கள், போர் புரிந்து, உயிர் இழந்து சேர்த்து வைத்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் நாம் அவர்களிடமிருந்து இலகுவாகப் பெற்றுக்கொண்டுவிட்டோம்.
File:Kushanmap.jpgகி.பி. 1500 இலிருந்து இந்திய உப கண்டத்தின் அரசியல் வரலாறுகளை நோக்கினால், இப்பிரதேசம் எந்த ஒரு காலத்திலும் தனி ஒரு அரசனின் கீழ் இருந்ததே கிடையாது. பல,பெரிய, சிறிய இராச்சியங்கள், பலம் வாய்ந்த, பலம் குன்றிய அரசர்கள், மாறுபடும் அரசு எல்லைகள், போர் தொடுத்து இன்னொரு நாட்டைக் கைப்பற்றுதல், சரணடைதல், கப்பம் கட்டும் குறுநில மன்னராக இருத்தல் என்றவாறு அரசியல் நாளாந்தம் மாறியபடியே இருந்திருக்கின்றன. 
16 ஆம் நூற்றாண்டில், முதலில் உஸ்பெகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த மொகலாய மன்னர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா (தெற்கு நீங்கலாக) கொண்ட நிலப்பகுதியை ஆண்டனர். பின்னர் ஆட்சி இந்து + ஆப்கானியர்பால் சென்று, மீண்டும் நடுப்பகுதியில் அக்பர் முதலிய மொகலாயரிடம் வந்தது. 
17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மராட்டிய மன்னர்களிடம் மொகலாயர் படிப்படியாகத் தங்கள் பிரதேசங்களை இழக்கத் தொடங்கி, 19 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் முற்றாகச் செயல் இழந்தனர். 
File:Devapala.jpgமராட்ட்டிய அரசு காலங்களில் ஆங்காங்கு வேறு பல அரசர்கள் இருந்தனர். இவர்களில் நிசாம், நவாப், டரனி, குர்க்கா, சீக்கிய, மைசூர், தஞ்சாவூர், சுல்தான் எனப் பல வரிசையில் வந்த சிறிய மற்றும் பெரிய அரசர்கள் அடிக்கடி போர் புரிந்தபடி இருந்தனர்.
முதலில், 1617 இல் முகலாய மன்னனால் பிரித்தானிய கிழகிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் வியாபாரம் செய்துகொள்ள உரிமை அளிக்கப் பட்டது. அதன் பின்னால், படிப்படியாக பிரித்தானியா தன்னுடைய வர்த்தக உரிமை என்ற போர்வையில், இன்னொரு நாட்டுக்கும், இராச்சியத்திற்கும் எதிராகச் சண்டையிட  உதவிப் பல இராச்சியங்களைத் தன கைவசம் போட்டுக் கொண்டது.
இந்திய மன்னர்களிடம் எந்தவித நவீன ஆயுதங்கள் இருக்கவில்லை. அவர்களின் வில்லும், வாளும் ஐரோப்பியர்களின் பீரங்கிக்  குண்டுகளுக்கு முன் நீண்ட காலம் நிற்க முடிய வில்லை. இதன் காரணமாய், பிரித்தானியர்களுக்கு பல இராச்சியங்களையும் இலகுவாகக் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. 
அவர்கள் தாங்கள் பிடித்த எல்லா இடங்களையும், தங்கள் நிர்வாக வசதிக்காக ஒரு குடையின் கீழ் வைத்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, எங்கோ 1500 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்தமான் முதலிய தீவுகளையும் கைப்பற்றித் தங்கள் வசம் கொண்டுவந்து இந்தியாவோடு இணைத்தார்கள். (அந்தமான் தீவுகள் முன்னர் சோழர் ஆதிக்கத்திலும், பின்னர் மராட்டியர்களிடமும் இருந்துள்ளது). இவர்கள் இப்படி பல நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்து  வைக்காது விட்டிருந்தால், 'இந்தியா' என்று அழைக்கப்படும் இந்த நிலப்பரப்பபினுள் நூற்றுக்கணக்கான நாடுகள் இன்னமும் ஒன்றோடொன்று போர் புரிந்து கொண்டுதான் இருந்திருக்கும்.

ஆதலால், 'இந்தியா', 'இந்தியா' வாகக் கிடைத்தது எந்தவொரு இந்திய மன்னனாலோ அல்லது குடிமகனாலோ அல்ல; அது உண்மையில் ஆங்கிலேயரர்களால்  தான்! 

இது இலங்கை மற்றும் பல நாடுகளுக்கும் பொருந்தும். வல்லவன் ஒருவன் தன் படைபலத்தால்  வெவ்வேறு மொழி, கலாச்சாரம் கொண்ட இராச்சியங்களைப் பிடித்து ஒன்றாக்கிப் பெரும்பான்மை சமூகத்திடம் விட்டுச் சென்றுவிட்டான்! ஒன்றாக்கப்பட்ட இந்த நாடுகளைப் பழைய நிலைக்குப் பிரிக்க முயல்வது ஒரு சர்வதேச குற்றச் செயலாகக் கணிக்கப்படுகிறது.
ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்

1 comments:

  1. ஜெகநாதன்Friday, March 04, 2016

    பல நாடுகளை ஒன்றாய் இணைக்கவும், அல்லது ஒரு நாட்டைத் துண்டு போட்டுப் பிரிக்கவும் ஆயுத பலம் கொண்ட பெரும் நாடுகளால்தான் முடியும். அப்படிச் செய்துதான் அன்று அவன் நாடுகளை உருவாக்கி, தமிழ் இனத்தை வேறு இனங்களின்கீழ் நிரந்தர அடிமையாய் இருக்கும்படி ஜனநாயக அரசியல் முறையை ஏற்படுத்திவிட்டுச் சென்று விட்டான்.
    துர் அதிஷ்டவசமாக, செழிப்பான பிரதேசங்களில் இருந்தெல்லாம் வரண்டு, காய்ந்துபோன இடங்களுக்குள் ஒதுக்கப்பட்டு, தொடர்ந்து பெரும்பான்மைகளின் இரக்கத்தை எதிர்பார்த்து வாழும் நிலைமைதான் தற்போது எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது!

    ReplyDelete