தமிழுக்கு வைரஸ்......ஆக்கம்:அகிலன் தமிழன்


வாக்குக்கு இனிமை கொடுத்து 
நாவுக்கு வல்லமை சேர்க்கும் 
 இன்ப தேன் எம் தமிழ் மொழி -இன்று 
அந்நிய மொழி வந்து சேந்து
 கலப்பு மொழியாவது ஏன்

தமிழ் தாய்க்கு   உருவம் கொடுக்க  
புலவர்களுக்கு  புத்து உணர்வு கொடுத்து 
காப்பிய இலக்கிய குழந்தைகளை 
பிறக்க வைக்கும் வித்தகன் நீயே 

மனிதனுடன்  உறவை வளர்க்க 
அவனுடன் துணையாக இருக்க 
மொழிகளில் மூத்த குடியில் பிறந்து
எல்லா மொழிகளின் 
பரம்பலுக்கு துணையாக இருந்து
எல்லா திக்கும்   ஒளிர  
வானவில்லாக  திகழ்ந்த மதி நீயே
***********************8

2 comments:

  1. தலைப்பிலேயே ஆங்கிலம் இருக்குதே ஐயா! அதுவும் ஒரு வகைக் கிருமியோ?

    ReplyDelete