விடியல் தேடும் விழிகள்


விடியலைத் தேடும் விழிகள்
விருப்பம் கொண்டு உழைத்துவிட்டால்.
விடுதலைக்கு ஏது தடை இங்கே.
விரைவாக உயர்வுபெற.
விருப்பம் கொண்டு நடந்துவிடு.
உன் வசமாகும் வெற்றி..
வாழ்க்கை வட்டம் சுழல்கையில்.
வந்து போகும் மணித்துளிகள்
நமக்கானது.
செயல் கொண்டு  பாதம் வணங்கினால்.
வெற்றிக்கனி பறித்து  விடலாம்.
உண்மை உணர்ந்து அறிந்து கொள்வோம்.
பற்றற்று நின்றால்   வெற்றி கொள்ளாது.
வான்மழை தேடும் பூமி போல.
வாட்டம் இன்றி வாழ்வு வாழ்ந்துவிடவே.
உழைப்பை தேடி உயர்வு கொள்ள.
விழிகள் விழித்தால் விடியலை தொடலாம்!

✍✍✍✍✍✍-காலையடி,அகிலன் 

0 comments:

Post a Comment