எந்தக் கடவுள் உண்மையானவர்?
உலகில் பல இனங்கள்; பல மதங்கள்; பல கடவுள்கள்!

ஒவ்வொருவரும் தாம் வணங்கும் கடவுள்தான் உண்மையானவர் என்றும்,ஏனைய கடவுள்கள் எல்லாம் போலியானவர்கள் என்றும்  வாக்கு வாதம் புரிந்து கொண்டே இருக்கின்றார்கள்.

எந்த ஒரு கடவுள் என்றாலும், உலகுக்கு நேரில் வந்து தனது உண்மைத் தன்மையை நிறுவி, நிலை நாட்டிச் சென்றதற்கான அறிகுறிகள் ஒன்றுமே இல்லை. பக்தர்கள்தான் ஒருவருக்கொருவர் தத்தம் கடவுள்களுக்காக அடிபட்டுக் கொள்ளுவார்கள்; கொல்லுவார்கள்!

மனிதர் எல்லாம் ஆளுக்கு ஆள் பல சமய நூல்களை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் கடவுள்தான் எழுதினார் என்று பறை சாற்றிக் கொண்டு, அவற்றைக் கையில் ஏந்தியவண்ணம், அவை எல்லாம்  'கடவுள் கூற்று' என்று கூவிக் காவித்  திரிகின்றார்கள்.

இந்த நூல்களிலோ என்றால், ஒன்றுக்கு கொன்று முரண்படுகின்ற பல விடயங்களை, இந்தக் கடவுள்மார்கள் மனிதனுக்கான வாழ்க்கை முறை என்று வழங்கி இருப்பதாக தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த முரண்பாடுகளில் சில:

***

இந்தக் கடவுள் சொல்கிறார்; (.)
ஒரு கடவுள் பல வடிவம், விரும்பிய உருவத்தில் வழிபடலாம் என்று.

அந்தக் கடவுள் சொல்கின்றார்;  (.)
இவைதான் உருவங்கள், இவற்றை மட்டும் வழிபட வேண்டும் என்று.

வேறு ஒரு கடவுள் சொல்கின்றார்; (வே.)
உருவமே இல்லை; ஒருவர் பிறந்த திசையில் தான் கடவுள் இருக்கின்றார்; அங்கு பார்த்து வழிபடு என்று.

***

 (.):
ஆன்மா அநாதியானது, அழிவில்லாதது, இறந்ததும் சொர்க்கம், நரகம் என்று சிறு காலம் இருந்து மீண்டும் பிறக்கும்.

(.):
ஆன்மாவுக்கு ஒரே ஒரு பிறப்பு; முடிவில் சொர்க்கம், நரகம்  சென்றடையும்.

(வே,):
எனது மக்களுக்கு மட்டும் தான் சொர்க்கம்; மற்றையோர் எல்லாம் நரகம் செல்வார்கள்.

***

(.):
பிரபஞ்சம் அநாதியானது. பூமியும் அநாதியானது. உயிர்களும் அநாதியானது.

(. .):
எல்லாவற்றையும் ஒரு நாளில் படைத்தார்.

(வே..):
ஆறு நாட்களில் படைத்தார், அதற்கு முதல் வெறுமையாய் இருந்தது. (?.) எழாம் நாளில் ஓய்வு எடுத்தார். (பாவம் களைத்துப் போய் விடடார்!)

***

(.):
ஆண் தெய்வம், பெண் தெய்வம் என்று இருக்கலாம். பெண் தெய்வத்திற்கு கூடிய சக்தியும் இருக்கும்.

(. .):
ஆண் மட்டும்தான். அந்த ஆணின் தாயும் தெய்வம் ஆகலாம்.

(வே..):
கடவுள் ஆணேதான். பெண் குறைந்த தரத்தில் உள்ளவள்; தூய்மை அற்றவள்; தெய்வம் ஆக இயலாது.

***

(.):
கடவுள் பாவிகளை வதம் செய்பவர் என்று உணர்த்த கைகளில் வாள், அம்பு, கத்தி முதலிய ஆயுதங்களுடன் சித்தரிக்கப் படுவார்.

(. .):
கடவுள் அன்பே வடிவானவர் என்று சாந்த முகத்துடன் காட்சி  அளிப்பார்.

(வே..):
மக்களே, தான் இயங்கித் துப்பாக்கிகள், மனித வெடி குண்டுகள் என்று ஆளுக்காள் ஏந்தி கொண்டு மாற்று சமயத்தினரைக் கொன்று திரியலாம் என்று கட்டளை  விடுவார்.

***

(.):
குற்றம், கொலை செய்தால் நிச்சயம் மறு பிறப்பில் (?!) தண்டனை உண்டு.

(. .):
குற்றம், கொலை செய்தால், கடவுளை வணங்கினால் மன்னிப்பும் வழங்கப் படலாம்.

(வே..):
குற்றம், கொலை செய்தால், அது சமயத்தைப் பரப்புவதற்காகச் செய்யப்பட்டால்  நிச்சயம் அதி விசேட சொர்க்கம் கிடைக்கும்.

***

(.):
பிற உயிர்களை உணவுக்காகக் கொல்வது பாவம்.

(. .):
பிற உயிர்கள் மனிதனுக்காகவே படைக்கப் பட்டுள்ளது.

(வே..):
பிற உயிர்களைக் கொல்லும்போது கடவுள் பெயரைச் சொல்லிக் கொன்றால் பாவமில்லை.

***

(.):
சில மிருகங்கள் வணங்கப்பட வேண்டியவை.

(. .):
சில மிருகங்கள் மதிக்கப் பட வேண்டியவை.

(வே..):
சில மிருகங்கள் அருவருக்கப்பட வேண்டியவை.

***

.):
வைன் போன்ற போதை பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

(. .):
வைன் என்பது வணக்க ஸ்தலத்திலேயே பரிமாறலாம்.

(வே..):
வைன் என்பது இங்கு உபயோகிக்கக் கூடாது. ஆனால், அதி விசேஷ சொர்க்கத்தில்  அருவியாய்க் கொட்டும். உற்பத்தி செய்து மற்றோர்களுக்கு அனுப்பலாம்.

***

(.):
பெண்கள் மாத சுகயீனம் போது ஆலயம் செல்லக் கூடாது. இறப்பு வீடு என்றால் எவரும் போகக் கூடாது.

(. .):
பெண்கள், ஆண்கள் எப்போதும் ஆலயம் செல்லலாம்.

(வே..):
பெண்கள் ஒருபோதுமே ஆலயம் செல்லக் கூடாது.

***

.):
ஒருவர் இறந்தால் ஓரிரு தினங்களில் வீட்டில் வைத்து கிரிகை செய்து, உடலை மயானத்தில் எரித்து விட வேண்டும். கோயில் பக்கம் கொண்டு செல்லத் தடை.

(. .):
உடலை ஆலயம் கொண்டு சென்று, கிரியை செய்து மயானத்தில் புதைத்து விட வேண்டும்.

(வே..):
உடலை ஒரு நாளுக்குள் புதைத்து விட வேண்டும்.

***

.):
மத போதகராக மணம் புரிந்த ஆண் இருக்கலாம்.

(. .):
போதகராக மணம் புரியாத ஆண் இருக்க வேண்டும்.

(வே..):
ஆண் போதகர்; எத்தனை மனைவியரையும் வைத்திருக்கலாம்.

***

(.):
முத்தியடைய பிராமச்சரியமே சிறந்த வழி.

(. .):
ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் உறு துணையாக இருந்து இன விருத்தி செய்ய வேண்டும்.

(வே..):
ஆண், எத்தனை மனைவியரையும் இளம் வயதிலேயே மணம் செய்து, பிள்ளைகளைக் கூடிய அளவில் பெற்று, உலகினை நிரப்பி விட வேண்டும்.

***

(.):
ஆகாயத்தில் இருந்து விமான, எறிகணைத் தாக்குதல்களில், ஆலயங்கள் உடைதல், கோபுரங்கள் சரிதல், களவுகள் முதலியவற்றில் இருந்து  தன்னையும், தான் இடத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்.

(. .):
பிரார்த்தனை நேரங்களில், எதிர் மத வாதிகளினால் குண்டுத் தாக்குதல் செய்யும்போதும், நெருப்பு பற்றி எரியும் போதும்  இறந்து போகும் ஆயிரக் கணக்கானவர்களைக் காப்பாற்ற முடியாதவர். தன சிலைகள் நொறுங்கி விழுவதையும் தடுக்க முடியாதவர்.

(வே..):
வழிபடுதல் போது, சுடப்பட்டு இறக்கும் போதும், இந்தக் கடவுளின் கொள்கைகளை உலகெங்கும் பரப்புவதற்கு ஆயுதம் ஏந்தி போர் புரிபவர்களை ஆயிரக்  கணக்கில் விமானங்கள் மூலம்  கொன்று ஒழிக்கும்போதும், இவரின் நாமத்தை எத்தனை தரம் சொல்லிக் கூவியும் இவருக்கு கேட்கவே இல்லை.

***

(.):
பெண்ணும், ஆணும் அளவோடு தாம்பத்திய சுகம் அடையலாம்.

(. .):
பெண்ணும், ஆணும் சமனாக சுகம் அடையலாம்.

(வே..):
பெண்ணுக்கு குழந்தைப் பருவத்திலேயே உறுப்பறுக்கப்பட்டு, அவளின் சுகம் மறுக்கப்பட்டு, ஆணுக்குத் தேவையான நேரம் எல்லாம் அவனின் இச்சையைத் தீர்ப்பது பெண்ணின் கடமை ஆகும்.

***

(.):
ஓரினச் சேர்க்கை பற்றி கடவுள்மாரிடமே பல கதைகள் உள்ளன.

(. .):
காலம் கருதி ஓரினச் சேர்க்கை அனுமதிக்கப் படுகின்றது.

(வே..):
ஓரினச் சேர்க்கை பெரும் குற்றம். ஆணையும், பெண்ணையும் படைத்த அதே கடவுள்தான் இந்த மூன்றாம் இனத்தையும்  படைத்தார் என்று அந்தக் கடவுளை நிந்திக்காது, அப்படியானவர்களை, எல்லோரும் கூடிச் சுற்றிவர நின்று கல்லால் அடித்துக் கொன்று கொக்கரிப்பார்கள்.

***

(.):
கடவுள் அவ்வப்போது பூமியில் அவதாரம் எடுப்பார்.

(. .):
கடவுள் தனது கடைசித் தூதனை பூமிக்கு இன்னமும் அனுப்பவில்லை..

(வே..):
கடவுளின் கடைசித் தூதன் இவர் மட்டும்தான்; இனி எவருமே வர மாட்டார்கள்..

***

(.):
எப்போதாவது ஆலயம் செல்லலாம்; வழிபடலாம்.

(. .):
தினசரி வழிபடவேண்டும்; ஒவ்வொரு கிழமையும் ஆலயம் செல்ல வேண்டும்.

(வே..):
நாளில் பல தடவைகள் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஆலயம் செல்ல வேண்டும்.

***

(.):
இங்கு பல காரணங்களுக்காக கடவுள்களே சண்டை போடுவார்கள்.

(. .):
அங்கு பல கடவுள்கள் இல்லை; சண்டையும் இல்லை.

(வே..):
அங்கு சண்டை இல்லை; ஆனால் இங்கு போர் புரியுமாறு மக்களை ஏவி விடுகின்றார்.

***
(.):இயற்கை அனர்த்தம்,மற்றும் போரினால் பாதிக்கப்படடவர்களை ஆலயத்தினுள் அனுமதியார்.உதவிகளும் செய்யார். ஆனால் ஆலயமும்,அதனைச் சார்ந்தவர்களும் மக்கள் மூலம் பல்வேறு வசதிகளில் வளர்ந்துகொண்டே இருப்பர். 

(.): பாதிக்கப்படடவர்கள் அனைவரினையும் மதவேறுபாடின்றி அணைத்துக்கொள்வர்.

(வே..): பாதிக்கப்படடவர்கள் இம் மதம் சம்பந்தமில்லாத வேறு நாடுகளுக்கு சென்றே உதவி பெறமுடியும்.


இப்படியாக, விதம் விதமான வாழ்க்கை முறைகளை ஒவ்வொரு கடவுளும் வழிகாட்டி இருக்கும்போது, இவற்றில் எவரைக்
கடவுள் சொல்வது சரி என்று எடுப்பது என்று தெரிய வில்லை.

உண்மையான கடவுள்களாய் இருந்தால் அவற்றில் ஓர் ஒருமைப்பாடு காணப்படும். ஆனால் அப்படி ஒன்றும் இல்லையே?

தொன்மையான சமயங்கள் ஓரளவுக்கு தற்கால மனிதனுக்கு ஏற்புடையாக இருக்கும்போது, பிந்திய இளம் சமயத்தினர்தான் பல அறிவு பூர்வமற்ற, பிற்போக்கு வாத, வெறும் முடடாள் கொள்கைகளை பிடித்து வைத்துக் கொண்டு திரிகின்றார்கள்.

சரி, ஒரு கடவுள்தான் உண்மையானவர்; மற்றையோர் எல்லாம் போலியானவர்கள் என்று வைத்துக்கொண்டால், அந்த உண்மையான கடவுளுக்கு ஒரு சக்தியோ, பலமோ இல்லையா அந்தப் போலிக் கடவுள்கள் எல்லோரையும் ஒழித்துக் கட்டுவதற்கு? இந்தப் பெரிய பிரபஞ்சத்தையே படைத்து விடடாராம், இந்தப் போலிகள் எல்லாவற்றையும் எரித்துப் பஸ்பம் ஆக்காமல் ஏன்தான் மனிதனையும், மனிதனையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்? அதிலும் சந்தோசம் கொண்டு வெகுமதியும் கொடுக்கிறார்? இது ஒரு கையால் ஆகாத செயல் என்று புரியவில்லையா?

தற்போதைய மனிதன் தானே சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அவனுக்கு, எது நல்லது, எது கேட்ட்து என்று நன்றாகவே தெரியும். இதைச் சொல்லித்தர ஒரு கடவுளோ கடவுள் தூதனோ, கடவுள் அவதாரமோ தேவை இல்லை.

அந்தக் காலத்தில், மனிதனின் தேவையைக் கருதித்தான், காட்டு மிராண்டிகளாக இருந்த மனிதனைப் பண்படுத்தத்தான், அந்தக் கடவுள்மார் எல்லாவற்றையும் மனிதன் படைத்தான். - ஆம்; மனிதன் படைத்தான்! - இப்போது அவர்களது தேவை அவசியம் இல்லை. மனிதன், மனிதனாக வாழவேண்டும் என்றால், இந்தக் கடவுள்மாருக்கு ஒரு குட் பை சொல்லி, அனுப்பி வைத்தால்தான் இந்த உலகம் உருப்படும். சண்டைகள், கொலைகள் இல்லாது ஒழியும். தேவை இல்லாமல் கடவுள்மாருக்குச் செய்யும் செலவும் மிச்சம் ஆகும்.

டவுள் அற்ற நாடுகளை பாருங்கள்; உலகின் முதல் தரமான நிலையை அடைந்துவிட்டன. கடவுளையே கட்டி அழுபவர்கள் எல்லாம் பஞ்சத்தில் வாடுகின்றார்களே, காணவில்லையா?

அப்படித்தான் கடவுள் இருக்கின்றார் என்று நம்பினீர்கள் என்றால்,
"அவர் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே; அவருக்குத் தெரியாதா யாருக்கு, எப்போது எவ்வளவு செய்ய வேண்டும் என்று? நீங்கள் கேட்டால் தானா  அவருக்குத் தெரிய வரும்? அவர் அவ்வளவுக்கு முட்டாளா? அறிவிலியா? மோடனா?

ஏன்தான் மாற்றுச் சமயத்தினரை மதம் மாற வற்புறுத்திக்கிறீர்கள்? அவர்கள் மற்றச் சமயத்தில் இருந்து நரகம்தான் போகட்டுமே; உங்களுக்கு அதனால் என்ன நஷ்டம் வந்தது?

யோசியுங்கள். கடவுள் மயக்கத்தில் இருக்காதீர்கள்.உங்களுக்கு இங்கு தேவையானவற்றுக்கு நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும். கடவுள் ஒன்றும் செய்து தர மாட்டார்முதலில், இங்கு சொர்க்கத்தை உருவாக்குங்கள்! இறந்தபின்னர், அந்த என்னவோ ஒன்றுக்கு என்ன நடப்பது என்பது எங்களுக்கு அவசியம் அற்ற ஒன்று!

கடவுள் எல்லாம் உங்களுக்கு செய்வார் என்று நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அதற்குப் பெயர் "தட்டிக் கழித்தல் " (Escapism )!

சிந்தியுங்கள்! உண்மை என்னவென்று!

உங்கு எங்கும் உண்மையான கடவுளும் இல்லை; கடவுள் உண்மையும் இல்லை

🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽-செல்வதுரை,சந்திரகாசன் 

0 comments:

Post a Comment