அன்புள்ள மான் விழியே.....


அன்பை அள்ளி தந்த
இந்திரலோகத்தின் நாயகியே
அழகில் குறையாத
சந்திர வதனம் கொண்ட எந்தையே!

என்மனதில் காதல் விதை போட்டு
பூக்களாய் காதல் வாசம் வீசி
என் அருகில் வந்து
உன் வாச பூக்களில்
நேசம் கொள்ள வைத்து
என் மனதை சுடர்மிகு சுவையாக
பாட வைக்கிறாய்!

நீ என்ன காதலில் விளைந்த
கனி அமுதோ,
அல்லது காதலால்
உலகில் ஏற்றம் புரியவந்த
தேவதையோ!
✏✏✏✏✏காலையடி,அகிலன் 

0 comments:

Post a Comment