உணவின் செய்திகள்


வாழைப்பழம்   &   புளியங்கொட்டை   &   எலுமிச்சை   &   கிவி


வாழைப்பழம்:ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசிய அளவு இரத்த அழுத்த அளவை குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. இதேவேளை, வாயில் 24ற்கும் குறைவாக பற்கள் உள்ளவரை பக்கவாத நோய்தாக்குவதற்கு 60 சதவீத வாய்ப்பு அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.இதற்கு பல் ஈறில் ஏற்படும் நோய் தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் உள்ள பக்கவாத நோயாளிகளுக்கு பற்கள் குறைவாக இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்தது.. காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்றுதினம் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால், போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் இரத்தஉறைவை தடுக்கமுடியும் என பிரித்தானியாமற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர்.தினமும்1600 மில்லி கிராம் பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும்போது பக்கவாத வாய்ப்புகள் 5ல்ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பழச்சாறு:பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர்பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.இதன் முடிவு  உடலின் வளர்சி மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும், சாறில் சீனியின் அளவு அதிகரிக்கிறது.  அதாவது,1ரம்ளர் பழச்சாறில், 5 தேக் கரணடி அளவு சீனி உள்ளது. எனவே, பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.ஒரு ரம்ளர் பழச்சாறில்,4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள்தெரிவிக்கின்றன.

உப்பு:நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகரித்தால் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்று மருத்துவர்கள்

எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால்,உணவில் உப்பின் அளவு குறைந்தாலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு, மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறைந்த உப்பு மிகை இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தாது என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவர்கள் சங்க இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை சில நிபுணர்கள் மறுத்துள்ளனர். ‘அமெரிக்க மருத்துவர்கள் சங்கம்இரத்தக் கொதிப்பு, இருதய நோய், பக்கவாத நோய் தாக்காதவர்களிடம் ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது முடிவான ஆய்வு அல்ல` என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புளியங்கொட்டை:மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பர்க்கின்சன் போன்ற நரம்புசம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்தமுடியும் என்றும்அந்தக் குழு தெரிவித்தது.

எலுமிச்சை:மருத்துவ நோக்கில் இன்று எலுமிச்சை பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்லகுணம் தெரியும்.சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து

அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது.

காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும்.

தண்ணீர், வெந்நீர், தேன் பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில்  சேர்த்தும் அருந்தலாம்.

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

கிவி (KIWI): கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. பொதுவாக விட்டமின்சிஅதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!
நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும்ரேடிக்கிள்கள்தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.
முதுமைக் கால கண் நோய்களைத் தடுக்கும் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாரடைப்பைத் தடுக்கின்றது:
மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக  அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல்கிவிகனிக்கு இயற்கையாக உள்ளது.
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:
கிவி பழத்தில்ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.
இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.


0 comments:

Post a Comment