தாய்மை ஏக்கம்


தாய்மைவரம் 
தேடும் விழிகளின்
தவிப்புகளின்
தேடல் ஓயவில்லை
எதனைக் கொண்டு நிரப்புவது
என் உணர்ச்சியை
வெளிப்படுத்தவும் இயலவில்லை
இருண்ட வாழ்வென
இரந்து யாரும்
பார்க்கவில்லை
இறைவனின்  அலட்சியமும்
இதயத்தில் வேதனை
குறையவில்லை
காத்திருக்கும் கனவுகளோ
கண்ணில் நீராக போகவில்லை 
அவலம் தரும் சமூகம்
அருகிலிருக்க வேதனையை
கூறமுடியவில்லை
பிறரோடு
பேசவும் மனமில்லை
பிள்ளை ஆசையை
 தடுக்கவும் முடியவில்லை
வாழும் காரணமும்
 நான் அறியேன்
வந்த நோக்கமும்
புரியவில்லை
எனை
 ஆட்டுவிக்கும் ஆசையும்
என்னை பிரியவில்லை
மயக்கமும்
இன்னும் குறையவில்லை!

✎✎✎✎✎காலையடி,அகிலன் 

0 comments:

Post a Comment