இனியவை நாற்பது/05/இனிது,இனிது இவை இனிது

[இனியவைநாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர்இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன்இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இவரது காலம் கி.பி. 725-750 எனப்பட்டது.

 இனியவை நாற்பது இனிதே தொடர்கிறது...

வெண்பா 21.

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே

அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே

மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்

திறந்தெரிந்து வாழ்தல் இனிது.       

 

விளக்கம்: பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை

இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

 

வெண்பா 22.

வருவா யறிந்து வழங்கல் இனிதே

ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே

பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்

திரிபின்றி வாழ்தல் இனிது.   

 

விளக்கம்: தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய

யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல்

இனிது.

 

வெண்பா 23.

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே

ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே

பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்

சூதரைச் சோர்தல் இனிது.     

 

விளக்கம்: சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது.

பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.

 

வெண்பா 24.

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே

ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே

இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்

செய்வது செய்தல் இனிது.    

 

விளக்கம்:மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும்

ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

 

வெண்பா 25.

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே

கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே

நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்

புல்லா விடுதல் இனிது.

 

விளக்கம்:  ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும்

கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.

 

இனியவை நாற்பது

பகுதி: 6 வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது/06/இனிது,இனிது இவை இனிது:  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, வாழ்தல், இனிதே, இனியது, இலக்கியங்கள், விடுதல், கீழ்க்கணக்கு, நாற்பது, பதினெண், இனியவை, சங்க, முன்இனிதே, இல்லாத, கொடுத்தல்

0 comments:

Post a Comment