கடைசி வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?

 


   'குலு  குலு ' விமர்சனம்      [ Kulu Kulu Tamil Movie Review ]

ரத்னா குமார் இயக்கத்தில்  ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை படமான  இப்படத்தில் நடிகர் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மாறன், சாய் தீனா, டி எஸ் ஆர் என பலர் நடித்துள்ளனர்.

தனிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு சந்தானம்  செய்யும் உதவிகள் அவருக்கே பாதகமாக அமைந்துவிடுகின்றன. இப்படியிருக்கும் சூழலில், கடத்தப்பட்ட தன் நண்பனை மீட்டுத் தரக் கோரி 3 பேர் உதவி கேட்கின்றனர். அவர்களுடன் கைகோத்து நண்பனை மீட்க போராடும் கூகுள் இறுதியில் வெற்றிபெற்றாரா, இல்லையா என்பதை மேலும் சில கிளைக்கதைகளுடன் தொடர்புபடுத்தி சொல்லும்படம் தான் 'குலுகுலு'.

சிரித்து மகிழ ஒருமுறை பார்க்கலாம்.

 

தி லெஜெண்ட் விமர்சனம் [ The legend  Tamil Movie Review ]

ஜே.டி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள அறிவியல் புனைவு மற்றும் அதிரடி திரைப்படம்.  நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. லெஜெண்ட் சரவணன் (சரவணன் அருள்) தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.  மேலும் பிரபு, விஜயகுமார், விவேக், Urvashi Rautela, சுமன், நாசர், யோகி பாபு, மயில்சாமி, தம்பி ராமையா, தேவதர்ஷினி ,கோவை சரளா, லதா,மன்சூர் அலிகான்   என பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சர்க்கரை வியாதியால் இறந்த தன் நண்பனின் நிலை கண்டு, இந்த நோய்க்கான தீர்வை கண்டுபிடித்து இனி பிறக்கும் எந்த உயிருக்கும் சக்கரை வியாதி இருக்க கூடாது என்று முடிவெடுத்து தீவீர முயற்சியில் ஈடுபடும்   முயற்சியில் நாயகன் சரவணன் வெற்றி கண்டாரா? இல்லையா? அவருக்கு வந்த தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறி சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.. 

ரசிகர்களை மகிழ்விப்பதில் படம் தோல்வியென்றே கூறலாம்.(2.5/5)

 

'ஜோதி' விமர்சனம் [ Jothy   Tamil Movie Review ]

கிருஷ்ணா பரமாத்மா இயக்கத்தில் வெற்றி, ஷீலா, மைம் கோபி முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். ஹர்ஷா வரதன் இசையமைத்துள்ளார்.

மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்தும் கும்பல்வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை கடத்தும் பயங்கரமான கதையை படமாக்கி உள்ளனர். இப்படியொரு குற்றத்தை செய்த அந்த குற்றவாளி யார் என்பதை போலீஸ் அதிகாரியான -வெற்றி கண்டுபிடிப்பது தான் ஜோதி படத்தின் கதை.

சகித்துக் கொள்ள முடியாத கதை. (2.5/5)

'மஹா' விமர்சனம் [ Maha    Tamil Movie Review ]

யு ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்திருக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  ஹன்ஷிகாவின்   50 வது திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் ஹன்ஷிகாவுடன்  நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார், சிலம்பரசன், ஹன்ஷிகாவின் பிளாஷ் பேக் காதலராக நடிக்க  இவர்களுடன் கருணாகரன், மகத், தம்பி ராமையா, என பலர் நடித்துள்ளனர்.

நகரில் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலைகளில் ஈடுபடும் சைக்கோ கொலையாளியை பிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த். நாயகியான ஹன்சிகாவின் மகளும் திடீரென்று கடத்தப்பட, குற்றவாளி மற்றும் சிறுமியை போலீஸும், ஹன்சிகாவும் தேடுகின்றனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாளா? சைக்கோ சிக்கினானா? என்பது கதை.

ஏற்கனவே வந்த கதை.விறுவிப்பான நகர்வும் இல்லை,என்ற உணர்வோடு பார்க்கலாம்.(2.2/5)

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment