மகாவம்சத்தில் புதைந்துள்ள ....../ பகுதி 04

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம்  நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன  மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304), அவனால் கட்டப்பட்ட  குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாக காட்டுகிறது.

 

எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்பு தான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA]  46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்துஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயிலூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? பிராமண குருக்கள் இலங்கையில் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் இருந்தது என்பது உண்மையே, உதாரணமாக, ஒரு வரலாற்று கதையில், ரிஷிகள் என்று அழைக்கப்பட்ட, இரு கல்விமான்கள் வட இந்தியாவில் இருந்து, தென் திசை நோக்கி புறப்பட்டு இலங்கையை வந்து அடைந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அகஸ்தியர் [அகத்தியர்], புலஸ்தியர் ஆகும். புலஸ்தியர் அகத்தியரின் மாணவராகும். இதில் அகத்தியரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது. முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் புராணத்திலும் இதிகாசத்திலும் மட்டுமே  கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்லவேண்டும், முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய, அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேணியும் [குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது.  மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்தப்பட  முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மேலும் துரத்தப்பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப்பட்டதாகவும், அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்று கூறப்பப்டுகிறது

இதேபோலவே விஜயன் பிறந்ததும்கூட,  முறையற்ற சகோதரர்களுக்கு இடையிலான திருமணம் மூலம் தான் என்பதுவும்  குறிப்பிடத் தக்கது. இலங்கையில் விஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது தனக்கு பிறந்த பிள்ளை ஒன்றை கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது?


[Picture 05: மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட  கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும், அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக    Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள….(பகுதி 05)

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment