இறுதியாக வந்த திரைப்படங்கள் எப்படி?


சுருக்கமான பார்வையில்....

''மை டியர் பூதம்'' விமர்சனம் My Dear Bootham Tamil movie Review

ராகவன் இயக்கத்தில், பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சம்யுக்த கார்த்திக் நடித்திருக்கும் இத்திரைப்பத்திற்கு  டி. இமான் இசையமைத்துள்ளார்.

 

முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திருநாவுக்கரசு செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

பட்டணத்துப்  பூதம் 1967 டன் ஒப்பிடுகையில் ஊஹூம்.இப் படம் முன்னேற்றம் இல்லை. குழந்தைகள் பார்க்கலாம். {2.5/5}

 📽📽📽📽

''கார்கி'' விமர்சனம் Tamil movie gargi Review

 கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம்நடிகர் சூர்யா, ஜோதிகா இணைந்து '2D என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்ககோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.

 

ஒருசிறுமிக்கு நடந்த, கூட்டு பாலியல் வன்கொடுமையில் சந்தேகப்ட்டு கைது செய்யப்பட்ட சாய் பல்லவியின் தந்தைநிரபராதி என்று உறுதியாக நம்பும் சாய்பல்லவி அவரை எப்படியாவது காப்பாற்ற சட்டரீதியாக போராடுகிறார். இந்தப் போராட்டத்தில் சாய்பல்லவி வெற்றி பெற்றாரா, இல்லையா? உண்மையான  குற்றவாளிகள்  யார்? என்ற கேள்விகளுக்கு விடை கூறும் திரைப்படம்.


நல்ல திருப்பங்களுடன் சுவாரசியமான கதை.{4/5}

  📽📽📽📽

''தி வாரியர்''விமர்சனம் Tamil movie The Warriorr Review

 லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா என தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம்ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

 

ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஒருவரை காப்பாற்றிய பின்னரும், அவர் அவர்களால் கொல்லப்படுவது கண்டு குமுறும்,   மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் சத்யா (ராம் பொத்தினேனிபோலீஸ் அதிகாரியாக திரும்பி வந்து, அந்த கொலைகாரனை, எப்படி வதம் செய்கிறார் என்பதும், மதுரையை அமைதிப் பூங்காவாக மாற்றுகிறார் என்பதும் கதை.

 

 திரைக்கதை, படத்துக்கு பலம் சேர்க்கத் தவறினாலும் ஆக்ஷன் பிரியர்கள் அதிகம் ரசிப்பார்கள்.{3/5}

  📽📽📽📽

''இரவின் நிழல்'' விமர்சனம்   Tamil movie   Iravin Nizhal Review

 நடிகர் பார்த்திபன் தானே இயக்கி, நாயகனாக நடித்திருக்க, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத் என பலர் நடித்துள்ளனர்இவருடன்  திரைப்படம்ஷங்கர் தாஸ் தயாரிக்க ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

பார்த்திபனிடம் கடன்பட்டு படம் எடுத்த இயக்குனர் நஷ்டமடைந்து மனைவியுடன் தற்கொலை செய்யகாரணமான பார்த்திபனை வெறுத்து பார்த்திபனின் மனைவி மகள் அவரை வெறுத்திட, தனது  நடந்து வந்த பாதையில் 1971ல் துவங்கும் கதையில், கணவனால் கொலைசெய்யப்பட்ட ரத்த சகதியில் கிடக்கும் தன்னுடைய தாயின் சடலத்தில் பால் குடிக்கும் கைக்குழந்தையாக அறிமுகமாகிறார் நந்து. இதை தொடர்ந்து 10 வயது, 17 வயது, 30 வயது, 40 வயது என தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களையும், காதல் கதையையும் கூறுகிறார். இந்த பயணத்தில் அவர் எப்படி இரவினுடைய நிழலில் சிக்கினார்.. அது அவரை எவ்வளவு தூரத்திற்கு துரத்தியது.. நந்துவிற்கு என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..  {3.75/5}

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment