"தமிழர் சமயமும் அதன் வரலாறும்”/ பகுதி: 24

[ஒரு அலசல் தமிழிலும் ஆங்கிலத்திலும்]

 


"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்" என ஆதிரை பிச்சை இட்ட காதை:84-90 / மணி மேகலையும்

உறங்குவது போலுந் சாக்காடுறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் - 339) என குறளும் சுட்டி காட்டுகின்றது.

 

எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது. அதனால் அறம் செய்ய வேண்டும் என்பது அறிஞர்களின் தெளிந்த கருத்தாகும். இராமாயணத்தில் ஒரு கட்டத்தில், இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் கும்பகர்ணனிடம் மன்றாடுகிறான். கும்பகர்ணன் அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச் 

 

"நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;"

 

என்று சொல்கிறான். அதாவது, “நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப் பக்கம் போக மாட்டேன் ” என்கின்றான். இங்கு கம்பராமாயணம், நிலையாமையை மிக தெளிவாக "நீர்க்கோல வாழ்வை நச்சி / 7426"- என்று வர்ணிக்கிறது. நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதம புத்தர் கூறுகிறார். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்கிறார் சுந்தரர். ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்]. ஆனால் யாரும் அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது. அது மட்டும் அல்ல, புறநானூறு 192, இல் கணியன் பூங்குன்றன்

 

"சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;"

என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். மேலும் 

 

"நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன்

வந்தது வந்தது கூற்று"

 

என்று நாலடியார் 4 கூறுகிறது. வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். சுருக்கமாக, மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்கிறார். மாணிக்கவாசகர் கூறிய,“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி..." என்பதில் இருந்தும் உலக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கின்றன என்ற கருத்தை அறிகிறோம். எனினும் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார், இறந்தவர் பின் பிறப்பதில்லை என அடித்து சொல்கிறார்.

 

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,

விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,

இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே!"

 

அப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் "நாங்கள் நல்ல மனிடபிறவியை எடுத்துள்ளோம். அதை நாம் மதிப்போம்" என்று . "பிறவி பாவமானது அல்ல". "இது கடவுளால் தந்த கொடை."  "இந்த அருமையான மானிட பிறப்பை, நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான [எடுத்ததிற்கான], அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்" என்று மேலும் கூறுகிறார். மேலும் சித்தர்கள் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா [பட்டினத்தார்] என்றும்  "வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் எனவும் பாடியிருக்கிறார்கள்.    

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 25 தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 *அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்: மணி மேகலை,, நீர் மேல் கோலம், திருநாவுக்கரசு நாயனார், சிவவாக்கியர்.]

 

An analysis of history of Tamil religion – PART:24

 [In English and Tamil]

 

 

Manimekalai clearly says, “It is true, that death for those that are born and birth for those are dead are like sleeping and waking up" and Further Sundarar  "Thevaram" [Tamil  Saivite devotional poetry]  Also says, the birth is like waking up after sleep. Kural also confirm this as: "Death is like sleep, and birth Is the awakening from it." [Kural 339]. Death and Birth are like sleep and awakening; only the intervals are longer and the circumstances more poignant. Kamparamayanam clearly says about this Instability of man life as:"neerkkola vaazhvai nachen" [நீர்க்கோல வாழ்வை நச்சி / 7426],That is, It says, life is like decorating kolam, top of the water. Even Purananuru 192 clearly says: Dying is nothing new. We do not rejoice that life is sweet". Further more, in another poems Naaladiyar 4, also, says about Instability of man life as:

 

"Do your duty, knowing the instability of all things. Time flies! Death comes!

The things of which you said, ‘they stand, they stand,' stand not; mark this, and

perform what befits, yea! what befits, with all your power! Your days are gone, are

gone! and death close pressing on is come, is come!"

 

Life is ebbing day by day; the wrathful lord of Death ever pursuing; all wealth is fleeting. Realising this, one should hasten to do acts of charity, which will be of lasting value. Further, Poet :Civavakkiyar [சிவவாக்கியர்] in his Civavakkiyam 47, stressed that "There is no rebirth!" & hence, To attain true knowledge you have to extend your life as long as possible & So you should take care of your body.

 

Milk does not return to the udder,

nor butter to butter milk.

nor the life within the sea shell,

when it breaks, to its body.

The blown flower, fallen fruit

do not return to the tree.

The dead are not born,

never, never, never!”

 

Death and what happens after death are universal concerns for humanity; around the world different cultures and religions contemplate our existence, and try to make sense of both our place in the world and our deaths. "We got this good human birth. Let us respect it!"  Proclaims King of Tongue, Saint Appar [அப்பர்], "This birth is not sinful", "It is a gift given to us by God."  "This rare human birth should be used properly for which we should know his purpose of this birth." Furthermore, Siddhars [mostly Saivaite / saints] had said that  "this body is not a true one & it is like a air filled bag," meaning, the human body is just an illusion and it is just an air filled bag, empty and useless and "life is a delusion, Only Truth is death "

 

[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

 

Part 25 Will follow

 

[Pictures attached: Manimekalai, kolam, top of the water, Saint Appar, Civavakkiyar [சிவவாக்கியர்].

 

0 comments:

Post a Comment