சிரிக்க சில நிமிடம்

நகைச்சுவை ஜோக்ஸ்



  காந்தியை கொன்றது யார்

 அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல்துறை அதிகாரி வேலைக்காக நேர்முகப் பரீட்சை தேர்வில் கலந்து கொண்டான்.

 அவரிடம் "காந்தியை சுட்டுக் கொன்றது யார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவனைப்  பார்த்துவிட்டு  "நீங்கள் போகலாம்" என்றனர்.

  வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன் "என்ன வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டான்.

 அதற்கு அவன் "நானும்  அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினார்கள்" என்றான்.

 

துன்பப்பட்ட நோயாளி

 நோயாளியை நன்கு சோதித்த டாக்டர் "உங்க உடம்பு ரொம்ப மோசமா இருக்கு. நீங்கள் நல்லாய் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டி கொடைக்கானலில் போய் இரண்டு மாதம் தங்கிட்டு வாங்க. பழங்கள் காய்கறிகள் நன்றாக சாப்பிடுங்கள். எக் காரணத்தைக் கொண்டும், ஒரு நாளைக்கு ஒரு கிளாசுக்கு மேல மது  அருந்தக்கூடாது." என்று சொன்னார்.

 இரண்டு மாதம் கழித்து டாக்டரிடம் வந்த அந்த நோயாளி.

 "இப்பொழுது எப்படி இருக்கிறது" என்று கேட்டார் டாக்டர்.

 "நன்றாக தேறிவிட்டேன் டாக்டர். ஆனால் நீங்கள் சொன்னதுல ஒன்றைச் செய்கிறது தான் எனக்கு ரொம்பத்  துன்பமாய் இருக்கிறது." என்றார்  நோயாளி.

"என்ன அது?" என க் கேட் டார் டாக்டர்.

"நாள்தோறும் ஒரு கிளாஸ் மது குடிக்க சொன்னீர்களே! என்னால முடியல! குமட்டிகிட்டு வருகிறது! எப்படியோ துன்பப்பட்டு துன்பப்பட்டுக்  குடிக்கிறன்"

 

நேர்மையான கடைக்காரர்

 ஒருவன் பொருட்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான். முடிவில் அவன் எங்கே குடையை வைத்து விட்டோம் என்பது அவனுக்கு மறந்து விட்டது.

 ஒவ்வொரு கடையாக குடையினைக் கேட்டு ஏறி இறங்கினான்.

கடைசியாக ஒரு கடைக்காரர் குடையை அவனிடம் கொடுத்தார்.

 "இந்த ஊரிலேயே நீங்கள் ஒருத்தர் தான் நேர்மையானவர். நீங்கள் மட்டும் என் குடையை திருப்பிக் கொடுத்துட்டீங்க. மற்றவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள்.  கேட்டபோது நான் குடையைக்  கடையில் விட்டு விட்டு போகவே இல்லை என்று சொன்னார்கள்" என்றான்.

 

தலை தப்பியது

 நண்பர் ஒருவர் பல் டாக்டரை சந்தித்தார். "மருத்துவமனைக்கு வாருங்கள்" என்ற டாக்டர், வந்தவுடன் அவர் கடவாய் பல்லை எடுத்துவிட்டார்.

 சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டாக்டர் வழியில் சந்தித்த அவர், "என் முன் பல் இரண்டும் வலிக்கின்றது" என்றார்.

டாக்டர் அந்த பற்களையும் எடுத்துவிட்டார்.

 அடுத்த முறை டாக்டரை சந்தித்தபோது அந்த நண்பர் ஓட ஆரம்பித்தார்,

 அவரை தடுத்து நிறுத்தி "எதற்காக என்னை கண்டதும் ஓடுகிறீர்" என்று டாக்டர் கேட்டார்.

 "இப்பொழுது பல் வலிக்கவில்லை. தலை வலிக்கிறது. அதனால் தான்". என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

 

எதற்காக வந்தார்?

 டாக்டர் ஒருவர் புதிதாக மருத்துவம் பார்க்க தொடங்கி இருந்தார். அவரைத்தேடி ஒருவர் வந்தார்.

 தான் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பவர் என்பதனை காட்ட விரும்பிய டாக்டர் டெலிபோனை காதில் வைத்து,

 "என்ன அவசரக் கேசா? நான் வீட்டுக்கு வந்து மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ரூபாய் 200 ரூபாய் ஆகும். என்ன சொல்லுகிறீர்கள்?

 இங்கே ஒரு நோயாளி வந்திருக்கிறார் அவரை பார்த்துவிட்டு இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.

 பிறகு வந்தவனை பார்த்து "உங்கள் உடம்புக்கு என்ன?" என்று கேட்டார்.

 "நான் உங்கள் டெலிபோனுக்கு தொடர்பு கொடுக்க தொலைபேசித்  துறையிலிருந்து வருகிறேன்" என்றார் வந்தவர்.

 

உனக்கும் அதே தானா

 ஒரு கடையில் பல்லி மிட்டாய் மேல் தட்டில் வைக்கப்பட்டிருந்தது.

அக்  கடைக்கு வந்த சிறுவன், "நாலு அணாவுக்கு பல்லி மிட்டாய்" என்று கேட்டான்.

கடைக்காரர் ஏணியில் ஏறி மிட்டாய் போத்திலை  கவனமாக கீழே கொண்டு வந்தார். அவனிடம் பல்லி  மிட்டாய் கொடுத்தார். மீண்டும் ஏணியில் ஏறி  பழைய இடத்தில் போத்திலை வைத்துவிட்டு  இறங்கி வந்தார்.

 சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்து "நாலு அணாவுக்கு பல்லி மிட்டாய்"  என்று கேட்டான்.

 கடைக்காரர் வழக்கம் போல் ஏறி, அவனுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு பின் ஏறி போத்திலை பழைய இடத்தில் வைத்து விட்டு வந்தார்.

 மூன்றாவது ஆக வந்த பையனும்   "நாலு அணாவுக்கு பல்லி மிட்டாய்"   என்று கேட்டான்.

 கடைக்காரர் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏணியில் ஏறி போத்திலை கீழே கொண்டுவந்தார்.மிட்டாய் கொடுத்தார்.ஆனால்  மீண்டும்  மேலே போத்தலை கொண்டு சென்று வைக்கவில்லை.

 சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்தான் கடைக்காரர்  அவனிடம், "உனக்கும் நாலு அணாவுக்கு பல்லி மிட்டாயா? என்று கேட்டார்.

 "இல்லை" என்று கூறினான் சிறுவன்.

 கடைக்காரர் ஏணியில் ஏறி அந்த மிட்டாய் போத்திலை பழைய இடத்தில் வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தார். பிறகு பையனை பார்த்து, "இப்போ உனக்கு என்ன வேணும்" என்று கேட்டார்.

 "எனக்கு 10 பைசாக்கு பல்லி  மி ட்டாய் வேண்டும்" என்றான்   அவன்.

தொகுப்பு செல்லத்துரை மனுவேந்தன்

0 comments:

Post a Comment