பச்சை பயறு தோசை- (ஆரோக்கியமான சமையல்)

ஆரோக்கியமான பச்சை பயறு தோசை செய்வது எப்படி?

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து  பாருங்கள்.  இந்த பச்சை பயறு தோசைக்காக மாவு தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். இந்த தோசை உடலுக்கு மிக ஆரோக்கியமானது.

தேவையான பொருட்கள்

[தோசை கல் , மிக்ஸி ஜார் ,பெரிய பவுல்]

𝌱2 கப் பச்சை பயறு

𝌱1/2 tsp மஞ்சள் தூள்

𝌱1 tsp சீரகம்

𝌱இஞ்சி தேவையான அளவு

𝌱பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப

𝌱கல் உப்பு

 

செய்முறை

🔥 முதலில் பச்சை பயிறு எடுத்து தண்ணீர் ஊற்றி ஒரு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின், ஒரு இரண்டு முறை நன்கு அலசி ஒரு எடுத்த பச்சை பயரை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 🔥 அரைத்து எடுத்த பச்சை பயறு மாவு, தோசை மாவின் பதத்தில் இருக்க வேண்டும். அரைத்து எடுத்த பயறு மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அலசி, மாவோடு சேர்த்து, கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  🔥மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை, மாவு அரைத்து எடுத்தவுடன் கல்லில் ஊற்றிச் சுட்டுச்  சாப்பிடலாம்.

 

இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் வெங்காயம், மல்லி இலையை தோசை மாவில் சாரல் மல்லி தூவி சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மாறாக எண்ணெய் பயமிலாதோர் தோசை  மேல் எண்ணெய் ஊற்றி கல்லில் இருந்து எடுத்தால் மொறு மொறு என பச்சைப் பயறு தோசையாக உண்ணலாம்.

நன்றி:Prem Kumar

0 comments:

Post a Comment