"அறிவியல் நோக்கில்....''பகுதி-30A-"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 



[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

 

பகுதி: 30 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பிராமணர் கோயில்களை இடிப்பது என்ற கருத்து மகாசேன மன்னரிடமிருந்து தொடங்கியதா?'

 


மகாவம்சத்தின் கடைசி அத்தியாயம் மகாசேனனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாசேனன் மன்னன், சங்கமித்ரர் தேரரின் ஆலோசனையின் பேரில், மகாவிகாரையின் பிக்குகளுக்கு எதிராகச் சென்றார், அதனால்,  அது ஒன்பது ஆண்டுகளாக  குடியிருப்பவர்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. 'மன்னர் நிலம்' என்ற கருத்து [Crown land concept] இவரது காலத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பின்னர் மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட  துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப் படுகிறது. அது மேலும்  'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு  துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth ']

ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. இதன் தொடர்ச்சியையே அல்லது நீட்சியே இன்றும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது.  

ஆனால், இந்த அரசன் பகலில் ஆட்களையும், இரவில் பேய்களையும் அமர்த்தி பல பெரிய செயல்களைச் செய்தான் என்று மகாவம்சத்திற்கு மாறாக இராசவலிய கதை கூறுகிறது. இன்றும் அதன் தொடர்ச்சியை வேறு ஒரு கோணத்தில் காணுகிறோம். அதாவது பேச்சில் நீதியும் சமாதானமும் காணப்படுகிறது, ஆனால் செயலில் அதற்குத் எதிராக தனியார் காணிகள் கூட வலிந்து எடுக்கப்படுகிறது. அன்பும் பண்பும் போதித்த புத்தரின் சிலைகள் அல்லது ஆலயங்கள் கூட அங்கு வலிந்து நிறுவப் படுகின்றன. அவர் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் (மற்ற இரண்டு நூல்களைப் போல இருபத்தி ஏழு அல்ல) மற்றும் அவரது திறமையான பணியின் காரணமாக தெய்வீக உலகத்திற்குச் [சொர்க்கத்துக்கு / divine world] சென்றார். மகாவம்சத்திற்கும் இராசவலியக்கும் இடையே எவ்வளவு  வித்தியாசம்?

ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம்  நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன  மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட  குளத்தின்  அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது.

இலங்கையில் மகாசேனன் காலம் முதல் சைவ கோவில்கள் இடித்து புத்த ஆலயங்கள் கட்டப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்றாலும்  இவை காலப்போக்கில் அதிகரித்தும், அரச ஆதரவு பெற்றும் இன்று வடக்கு கிழக்கில் பலவந்தமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. உதாரணமாக, வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தச் செயல் வகைகள் மாற்றப்பட்ட வடிவங்களில் தொடர்கின்றனகுறிப்பாக இனமத அடிப்படையிலான அதிகார நிலைப்பாடுகள், பௌத்தமயமாக்கல், மற்றும் பழமையான தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிகள் என அவையை பிரித்துக் கூறலாம். இந்தவகையில், அண்மைய எடுத்துக்காட்டாக முக்கியமான இரண்டைக் கூறலாம். முதலாவது நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆயுத படையினரின் உதவியுடன், அரச நிர்வாகத்தின் மறைமுக ஆதரவுடன் குருந்தூர்மலை, முல்லைத்தீவில் பலவந்தமாக கட்டப்பட்ட  புத்த விகாரை மற்றது யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில், எந்தவித அனுமதியும் இன்றி, மீண்டும் முன்னையபாணியிலேயே, காணி உரிமையாளர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் கட்டப்பட்ட  புத்த விகாரை ஆகும். இவ்வளவிற்கும் இந்த இரண்டு பகுதியும் முற்றிலும் தமிழர் வாழும் இடம் ஆகும்.

ஒன்று மட்டும் விளங்குகிறது. புத்த மதம் பற்றி பேசுபவர்கள் பலருக்கு புத்தரின் போதனைகளில் விளக்கம் அல்லது அறிவு இல்லை என்பதே, அது ஆகும், முக்கியமாக அதன் தலைவர்களுக்கும் குருமார்களுக்கும்! 

 

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...


💫💫💫💫💫💫💫💫💫

 

Part: 30 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did the concept of demolishing Brahminical temples begin with King Mahasena?'

 


The last chapter of the Mahavamsa is dedicated to Mahasena. The king Mahasena, on the advice of the thera Samghamitta, went against Bikkhus of the Mahavihara, and it was unoccupied for nine years. The Crown land concept came into effect during his time. The king later demolished three temples of the Brahminical (Hindu temples) gods, one at Gokanna (Trincomalee), and another at Erakaville, and the other at the Brahmin village Kalanda (Kanthalai). Mahasena seems to be busy with destroying the seven stories high Lohapasada, and later with demolishing the Brahminical temples as per the Mahavamsa. The Rajavaliya, in contrast with the Mahavamsa, says that this king did many great deeds by employing men in the daytime and demons in the night time. He reigned twenty-four years (not twenty-seven as in the other two chronicles) and went to the divine world because of his meritorious work, what a contrast between the Mahavamsa and the Rajavaliya.

 

 

நன்றி 

Thanks

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 30 B தொடரும் / Will follow

0 comments:

Post a Comment