"அறிவியல் நோக்கில்....பகுதி-27C -"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


பகுதி: 27 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் ஏன் பதியவில்லை' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது]

 


வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை] மன்னர்களின் சத்திவாய்ந்த செல்வாக்கு இலங்கை மேல், கிருஸ்துக்கு முன்பே இருந்து கி பி 300 ஆண்டு வரை இருந்துள்ளது. அந்த கால பகுதியில் கேரள மக்கள் பேசிய மொழி தமிழாகும். பின்பு காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி, தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது. இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை பத்தினி தெய்வ வழிபாடு [ கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம் அலசுகிறார். மேலும் அவர் தாய் வழி அமைப்பு தெற்கு சிங்களவர்களிடமும் முன்பு இருந்து, ஆனால் பின்பு தந்தை வழி அமைப்பால் மாற்றம் செய்யப் பட்டது என்கிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system]. மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாட்டை கேரளத்து தமிழ் மொழி பேசும் புத்த சமய வர்த்தகர்களாலும் மற்றும் மற்றவர்களாலும், குறிப்பாக வஞ்சி [Tamil-speaking Kerala Buddhist traders and other immigrants from the Vanchi area] பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். குறிப்பாக இரண்டு கேரளா வர்த்தக குடும்பம், மெஹனாவரா மற்றும் அழகக்கோனார் அல்லது அழகக்கோன் குடும்பங்கள் இதில் ஈடுபட்டதாக கூறுகிறார். இதில் இன்று சிங்களவர்களில் காணப்படும் அழகக்கோன் குடும்பங்கள் இவர்களின் வாரிசு என்கிறார் [two trader families of Kerala origin, namely, the Mehenavara and the Alagakonara (the Alagakones of today are probably their descendents)], மேலும் பத்தினி தெய்வம் பற்றிய சிங்கள பாடலின் மூலம் தமிழ் என்கிறார் [Dr Obeysekere says that the Sinhala songs related to the Pattini cult were originally in Tamil].

 


சுருக்கமாக, விஜயன் முதல் துட்டகைமுனு வரை, எல்லாளன் உட்பட,  மொத்தம் 396 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் கற்பனையான மன்னர்கள் போலவே தோன்றுகிறது.  இக்காலத்தில் அரசர்கள் இல்லை என்பதல்ல. அரசர்கள் அல்லது தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களின் பெயர்கள், இலங்கை ஆட்சிக்கு ஒரு பௌத்த சாயலைக் கொடுப்பதற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். தேவநம்பிய திஸ்ஸா என்பது இந்தியப் பேரரசர் அசோகரின் பிரதி அல்லது நகல். அசோகனும் தேவநம்பிய திஸ்ஸ என்ற இரண்டாவது மகன். தேவநம்பிய திஸ்ஸ 40 வருடங்கள் ஆட்சி செய்ததாக இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது. அசோகர் இந்திய மரபுப்படி 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அசோகன் மாதிரி, ‘தேவானம்பிய’  என்ற அடைமொழியுடன், இலங்கையில் திஸ்ஸ மட்டுமே இடுந்தாரென இலங்கை நூல் கூறுகிறது. அசோகனுக்கும் திசாவுக்கும் இருந்ததாகக் கூறப்படும் நட்பு தமிழ்நாட்டில் இருந்த நட்பின் நகல் என்று இலகுவாகக் கூறலாம். அந்த நட்பு தமிழ்ப் புலவர் பிசிராந்தியாருக்கும்,  கிள்ளி என்ற பெயரால் அழைக்கப்பட்ட, தமிழ் மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையே இருந்தது போல, நேரில் காணாமலேயே நட்பு கொண்டனர். என்றாலும் அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் பதியவில்லை என்பதும், மற்றும் எந்த அசோகன் வாழ்ந்த மண்ணின் வரலாற்றில் அல்லது புராணத்திலோ குறிப்பிடவில்லை என்பது முக்கியமாகும். மாறாக சங்ககால நண்பர்களின் குறிப்பு சங்கப்பாடலில் உள்ளத்தையும் கவனிக்க.

 

முதுமையினால் ஏற்படும் துன்பம், வேதனை, அவமானம் இவைகளை மக்கள் விரும்பாமல் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அன்று இருந்தது; அதன்படி,  இறக்கும் வரை உணவைத் தவிர்த்து, சோழ மன்னன் இறக்க முடிவு செய்து மேலும் சிலருடன் வடக்கு நோக்கி அமர்ந்தான். மன்னர், தான் இறப்பதற்கு முன், தனது கவிஞர் நண்பர் தன்னைப் பார்க்க வருவார் என்று நம்பினார். கவிஞர் இதை உணர்ந்து அந்த இடத்திற்கு விரைந்தார், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மன்னர் தனது கவிஞர் நண்பரைக் காணாமல் இறந்துவிட்டார். பிசிராந்தையார் தனது உணர்ச்சிவசப்பட்ட அரச நண்பரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுக் கல்லைக் கண்டு, அங்கேயே வடக்கு நோக்கி அவரும் அமர்ந்து இறந்தார்.

 

 

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 28 தொடரும் / Will follow

 

 

0 comments:

Post a Comment