சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்




-01-

மனைவி: வீட்டுல நீங்க சொல்றதுதான் நடக்குமா, இல்ல நான் சொல்றதுதான் நடக்குமா?

கணவன்: கண்டிப்பா நான் சொல்றதுதான் நடக்கும்.

மனைவி: (கோபமாக..குறுக்கிட்டு)) என்ன சொன்னீங்க?

கணவன்: " கண்டிப்பா நான் சொல்றதுதான் நடக்கும்"னு நீங்க   சொல்லணும்னு சொல்ல வந்தேன்!

 

-02-

மனைவி: ஏங்க, நம்ம கல்யாண மணவறை போட்டோவை ஏன் இவ்வளவு நேரமா பார்த்துட்டு இருக்கீங்க?

கணவன்: அந்த போட்டோவுல , மணவறைக்கு நீ வரமுதலில , மணவறையில இருக்கிற அந்த சிரிச்ச மூஞ்சிக்காரன் யாருன்னு யோசிச்சுட்டு இருக்கேன்!

 

-03-

மனைவி: என்னங்க, கல்யாணத்துக்கு முன்னாடி "உனக்காக ஆகாயத்துல இருந்து நிலவையே கொண்டு வருவேன்"னு சொன்னீங்களே?

கணவன்: இப்போ நிலவே என் வீட்டுக்குள்ள இருக்கும்போது, நான் எதுக்கு வெளிய போகணும்? (உஷார்!)

 

-04-

கணவன்: டாக்டர், என் மனைவிக்கு காது சுத்தமா கேட்கலைன்னு நினைக்கிறேன்.

டாக்டர்: டெஸ்ட் பண்ணலாம், அவங்க பின்னாடி போய் மெதுவா கூப்பிடுங்க.

கணவன்: (மனைவி பின்னால் போய்) "என்ன சமையல்?" (பதில் இல்லை. இன்னும் நெருங்கி போய்) "என்ன சமையல்?" (பதில் இல்லை. காதருகே போய்) "என்ன சமையல்?"

மனைவி: (கடுப்பாகி) மூணு தடவை "முட்டை குழம்பு"ன்னு சொல்லிட்டேன், உங்களுக்குத்தான் காது கேட்கலையா?

 

-05-

மனைவி: கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு, ஒரு தடவை கூட எனக்கு ஒரு தங்க நகை வாங்கித் தரலையே!

கணவன்: தங்கமான மனசு இருக்கிறவங்களுக்கு எதுக்குமா தங்கம்?

 

-06-

மனைவி: ஏங்க, பக்கத்து வீட்டுக்காரர் அவங்க மனைவியை எவ்வளவு அன்பா "கண்ணே, மணியே"னு கூப்பிடறாரு, நீங்க ஏன் அப்படி கூப்பிடறது இல்லை?

கணவன்: அட! அவங்க பேரு எனக்கு நீ இப்ப சொல்லும்வரை  தெரியாதுல்ல, அதான்!

 

-07-

மனைவி: நான் இன்னைக்கு சமைச்சது எப்படி இருக்கு?

கணவன்: சமையல் சூப்பரா இருக்கு, ஆனா இத சாப்பிட்டதுக்கப்புறம் நான் படுக்கையிலிருந்து உயிரோட நித்திரையால நாளைக்கு எழும்புவனோ என்று தான் பயமா இருக்கு!

 

-08-

கணவன்: எதுக்கு அழுதுட்டு இருக்க?

மனைவி: சீரியல்ல வர்ற ஹீரோயின் செத்துப்போயிட்டாங்க.

கணவன்: (முனகிக்கொண்டே) நிஜ ஹீரோ இங்க உயிரோடயே செத்துக்கிட்டு இருக்கான், இவளுக்கு அந்த கவலை இல்லை!

 

-09-

மனைவி: ஏங்க, நம்ம நாய் ஏன் இப்படி என்னைப் பார்த்தே குரைக்குது?

கணவன்: அதுக்கு உன்மேல எந்த தப்பும் இல்லை, அது நீ போட்டிருக்கிற மேக்கப்பைப் பார்த்து பயப்படுது!

 

-10-

மனைவி: ஏங்க, நான் அழகா இருக்கேனா?

கணவன்: (பேப்பர் படித்துக்கொண்டே) ஆமா!

மனைவி: பார்க்காமலேயே எப்படிச் சொல்றீங்க?

கணவன்: பார்த்துட்டு சொன்னா அப்புறம் பொய் சொல்ல முடியாதுல்ல!

 

-11-

நிருபர்: நீங்க ஏன் கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்க?

அரசியல்வாதி: ஒரே இடத்துல இருந்தா பாசி பிடிச்சுடும்ல, அதான் 'சுழற்சி முறை'யைக் கடைபிடிக்கிறேன்!

 

-12-

அரசியல்வாதி: நான் செத்த பிறகு என் உடலைத் தானம் பண்ணிடலாம்னு இருக்கேன்.

நண்பர்: ரொம்ப நல்ல விஷயம், ஆனா உங்க 'நாக்கை' மட்டும் யாருக்கும் கொடுத்திடாதீங்க, அது பாவம் நிறைய பொய் பேசிப் பழகிடுச்சு!

 

-13-

பையன்: அப்பா, அரசியல்வாதிக்கும் சாதாரண மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?

அப்பா: சாதாரண மனுஷன் தப்பு பண்ணா, சட்டம் அவனை ஜெயிலுக்கு அனுப்பும், , அரசியல்வாதி தப்பு பண்ணா சட்டம் ஜெயிலுக்குப் போயிடும்!

 

-14-

தொண்டர்: தலைவரே, எதிர் கட்சியினர் நம்ம ஊழலைப் பத்தி பேசுறாங்க.

தலைவர்: அவங்களுக்கெல்லாம் 'பகிர்ந்து' கொடுக்கலையான்னு கேளு!

 

-15-

வாக்காளர்: உங்களுக்கு ஓட்டு போட்டா எங்களுக்கு என்ன கிடைக்கும்?

அரசியல்வாதி: அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை என்னைப் பார்க்குற 'பாக்கியம்' உங்களுக்கு கிடைக்கும்!

 

-16-

மனைவி: ஏன் தூக்கத்துல கத்திட்டு இருக்கீங்க?

கணவன்: கனவுல நான் ஒரு நேர்மையான அரசியல்வாதியா இருந்தேன், அந்த அதிர்ச்சியிலதான் கத்துறேன்!

 

-17-

ஆசிரியர்: உலகத்துலேயே ரொம்பப் பழமையான விலங்கு எது?

மாணவர்: 'வரிக்குதிரை' சார். ஏன்னா அது இன்னும் கருப்பு,வெள்ளை யாகவேதான் இருக்கு!

 

-18-

நேர்காணல் செய்பவர்: எங்க கம்பெனிக்கு ஏன் வர விரும்புறீங்க?

வேலை தேடுபவர்: ஏன்னா, உங்க கம்பெனி வாசல் கதவுல "ஆட்கள் தேவை"ன்னு போட்டுருந்தது, அதான் வந்தேன்!

 

-19-

கைபேசியில் டாக்டர்: ஒரு மாதம் முன் நான் சொன்ன மாதிரி தினமும் காலையில 5 மைல் ஓடுறீங்களா?

கைபேசியில் நோயாளி: ஆமா டாக்டர், இப்போ நான் வீட்டுல இருந்து 150 மைல் தள்ளி இருக்கேன். இனிமே எப்படி வீட்டுக்குத் திரும்புறதுன்னு தான் தெரியல!

 

-20-

ஊழியர்: சார், எனக்குச் சம்பளம் பத்தல, கொஞ்சம் ஏத்திக் கொடுங்க.

முதலாளி: இப்போதான் உனக்குக் கல்யாணம் ஆச்சுன்னு சொன்னாங்க?

ஊழியர்: ஆமா சார்.

முதலாளி: ஆபீஸ்ல நடந்த விபத்துக்கு நாங்க நஷ்ட ஈடு கொடுப்போம், ஆனா வீட்டுல நடந்த விபத்துக்கு (கல்யாணம்) நாங்க பொறுப்பில்லை!

 

 

 

தொகுப்பு : செ .மனுவேந்தன்/ theebam.com / ttamil.com / dheebam / theebam web

0 comments:

Post a Comment