கணிணி ஒளி............தர்மராசா மிருஷன்


RAM வேகத்தை அதிகரிப்பது எப்படி?
இந்த விடயம் சிலருக்கு பழைய விடயமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்
அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்
01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.
02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)
03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.
04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.
05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்..
Torrent கோப்புக்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்ய..
இணையத்தளங்களிருந்து மென்பொருட்கள் போன்ற கோப்புக்களை Torrent கோப்புக்களாக தரவிறக்கம் செய்வதற்கு Bit Torrent எனும் மென்பொருள் பயன்படுகின்றது.

எனினும் தற்போது இம்மென்பொருளைத் தவிர கூகுள் குரோம் உலாவியினூடு நேரடியாக Torrent கோப்புக்களைத் தரவிறக்கம் செய்வதற்கென வசதியினை One Click for Chrome எனும் நீட்சி தருகின்றது.

இந்நீட்சியானது விண்டோஸ், லினக்ஸ், மக் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கணணி அடிக்கடி Restart ஆனால் என்ன செய்வது?
உங்களது கணணி அடிக்கடி Restart ஆவதற்கும், Hang ஆவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.
1. புதிதாக ஏதேனும் ஒரு வன்பொருளை உங்கள் கணணியில் நிறுவி இருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். அதன் பின் அந்த வன்பொருளின் Settings Check பண்ணவும்.
2. RAM Slot-ல் இருந்து RAM- எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க Pencil Eraser பயன்படுத்துவது சிறந்தது. இதனை பின்பு Mother Board-ல் இணைக்கும் போது கவனமாக இணைக்க வேண்டும்.
3. Mother Board-ல் Processor Heat Sink உடன் இணைந்திருக்கும் Cooling Fan இயங்குகிறதா என்று சரிபார்க்கவும். மேலும் அது Heat Sink உடன் ஒட்டி இருக்கும்படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.
4. கடைசியாக SMPS(Switch Mode Power Supply) Fan செயல்படுகிறதா என்று பார்க்கவும்.


உங்களுக்குதெரியுமா?


காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே...
பட்டினத்தார் என்று அழைக்கப்படும் பட்டினத்து சுவாமிகளின் வாழ்க்கைப் பாதையினை ஒரேயடியாக மாற்றிப் போட்ட அற்புத வார்த்தை இது. வணிகர் குலத்தில் பிறந்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்த இவரை இல்வாழ்வைத் துறந்த மெய்ஞ்ஞானியாய் மாறச்செய்த அபூர்வ சக்தி கொண்ட வார்த்தை இது. அப்படி இந்த வார்த்தையில் என்ன தான் கூறப்பட்டுள்ளது? இந்த வார்த்தையில் உள்ள சொற்களை மாற்றாமல் அப்படியே எடுத்துக்கொண்டால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும்.

"காது அறுந்துபோன தையல் ஊசி கூட ஒருவரின் மரணத்தறுவாயில் அவருடன் வராது"

இது உண்மைதான். எவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனாலும் அவர் இறந்தபின்னர் எதையும் தன்னுடன் கொண்டுசெல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை தானே. ஆனால் இப்போது சிக்கல் அப்பொருளில் இல்லை, அந்த வார்த்தையில் உள்ளது. ஏனென்றால், உலகமே அறிந்த இந்த உண்மையினை சிவபக்தர் ஆன பட்டினத்தார் அறிந்திருக்க மாட்டாரா?. திரைகடல் தாண்டிச் சென்று பொருளீட்டி வந்த அவரது மகன் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பேழைக்குள் ஒரு பனைஓலை இருந்தது என்றும் அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தையினை படித்த பின்னரே அவர் துறவியாக மாறினார் என்றும் கூறுகிறது பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு. நிச்சயம் அந்த ஓலையில் முன்னர் கண்ட வார்த்தை எழுதப்பட்டிருக்காது.

ஏனென்றால், ஊரே அறிந்த ஒரு உண்மையினை பனைஒலையில் கண்டுதான் பட்டினத்தார் ஞானம் பெறவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அதுமட்டுமின்றி எத்தனையோ நல்ல பொருட்கள் இருக்க மரணத்தறுவாயில் ஒருவர் ஏன் காதறுந்த ஊசியை உடன் கொண்டுசெல்ல வேண்டும்?. "ஒருவனது வாழ்நாள் முடிந்துவிட்டால் அவன் தன்னுடன் ஒரு ஊசியைக் கூட எடுத்துச் செல்லமுடியாது" என்னும் செய்தியைத் தெரிவிப்பதுதான் வார்த்தையின் நோக்கம் என்றால் வெறுமனே "ஊசி" என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். "காதற்ற ஊசி" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பனைஓலையில் எழுதப்பட்டிருந்த உண்மையான வார்த்தை இதுவல்ல என்பது தெளிவாகிறது.

அப்படி என்றால் அந்தப் பனைஓலையில் உண்மையில் எழுதப்பட்டிருந்த வார்த்தை என்ன?. அதைத்தான் நாம் இங்கே காணப்போகிறோம். "காதற்ற ஊசி" என்னும் சொல்லுக்கு "பயனில்லாத ஊசி" என்பதே பொருள் ஆகும். தையல் ஊசிக்கு "காது" முழுமையாக மூடி இருந்தால் தான் அதைப் பயன்படுத்தி எதையும் தைக்கமுடியும். ஊசியின் காது அறுந்துவிட்டால் அதைவைத்துக் கொண்டு எதையும் தைக்க முடியாது. இதுதான் தையல் ஊசியின் தத்துவம்.

சரி, மரணத்தறுவாயில் உள்ள ஒருவனுக்கும் தையல் ஊசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. தையல் ஊசியைக் கொண்டு அவனை எதைத் தைக்கச் சொல்கிறார்?. மகனாக வந்து அந்தப் பனைஓலையை பட்டினத்தாருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றது இறைவன் அல்லவா?. எனவே அந்த வார்த்தைக்குள் மிகப்பெரிய தத்துவத்தை மறைத்து வைத்துள்ளார். இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு பிச்சைக்காரனின் கதையினைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரே ஒரு பிச்சைக்காரன் இருந்தான். ஊர்மக்கள் எல்லோரும் அவனுக்கு நல்ல உணவினை நாள்தோறும் பிச்சையாகப் போட்டதால் அவனும் நன்றாக உண்டு வளர்ந்து கொழுகொழு என்று இருந்தான். அதிகம் குண்டாகிப் போனதால் நடந்துசென்று பிச்சை எடுக்க முடியாத நிலை உருவானது. அதனால் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு அவ்வழியில் போவோர் வருவோரிடம் பிச்சை கேட்க ஆரம்பித்தான். ஒருமுறை அவ்வழியாக ஒரு தோல்பை வியாபாரி வந்தான். அவனிடம் பிச்சை கேட்க அவன் ஒரு கிழிந்த தோல்பையினையும் துருப்பிடித்த ஒரு தையல் ஊசியினையும் கொடுத்துவிட்டுச் சென்றான். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த அந்த பிச்சைக்காரன் பின்னர் அந்த தோல்பையினை ஊசியைக்கொண்டு தன்னிடம் இருந்த கயிற்றால் தைத்து பலூன் போல ஊதி விளையாடத் துவங்கினான். பலூன் பறக்கின்ற அழகில் தன்னையே மறந்தான் அவன்.

ஊசி ஏற்கெனவே துருப்பிடித்திருந்ததால் அவன் கைபட்டதும் அதன் காது அறுந்து போய் விட்டது. இதை அவன் கவனிக்கவில்லை. திடீரென்று அந்த பலூன் கீழே விழத் துவங்கியது. அதன் உள்ளே இருந்த காற்று சிறிது சிறிதாக வெளியேறத் துவங்கியது. இதுவரை பலூனின் பூரித்த அழகைக் கண்டு மெய்மறந்து ரசித்திருந்த பிச்சைக்காரன் இப்போது பலூனின் நிலையில் மாற்றம் உண்டாவதை உணர்ந்தான். பலூன் கீழே விழப் போவதைக் கண்டு வருந்தினான். காற்று வெளியேறி பலூன் சிறிதாவதைக் கண்டு பதைபதைத்தான். பலூனைத் தைத்து காற்று வெளியேறுவதைத் தடுக்கவேண்டும் என்று எண்ணி தையல் ஊசியைத் தேடினான். அது அவனுக்கு அருகிலேயே இருந்தது காது அறுந்துபோன நிலையில்.

அப்போது தான் அவன் தனது தவறை உணர்ந்தான். பலூனைத் தைப்பதற்கு உதவியாய் இருந்த ஊசியைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் அதை இழந்து விட்டோமே என்று வருந்தினான். என்ன வருந்தி என்ன பயன்?. காலம் கடந்து விட்டதே. தையல் ஊசி இருந்தும் பயனின்றிப் போய்விட்டதால் பலூனில் இருந்து காற்று வெளியேறுவதை அவனால் தடுக்க முடியவில்லை. காற்று முழுவதும் வெளியேறி கடைசியில் பலூன் கீழே விழுந்து விட்டது. அவன் இதுவரை கண்டு ரசித்திருந்த பலூனின் ஆட்டம் அடங்கிவிட்டது. இனி அந்தப் பலூனால் பயன் இல்லை என்று உணர்ந்தான். பலூனைப் போலவே தன்னுடைய ஆட்டமும் ஒருநாள் அடங்கிவிடும் என்று பயந்தான். இனி மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து உழைத்து வாழ்வது என்று முடிவுசெய்து ஊரை நோக்கி நடந்தான்.

இந்தக் கதையில் தையல் ஊசி உணர்த்தும் பொருள் என்ன?. தையல் ஊசியாகவே இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைத்திருந்தால்தான் தேவையான நேரத்தில் உதவியாய் இருக்கும் என்பதே. இது பொதுவான பொருள் ஆகும். ஆன்மிகப் பார்வையில் இது உணர்த்தும் பொருள் வேறாகும். நமது உடல் என்னும் காற்றடைத்த பையினைத் தைக்க உதவும் ஊசி தான் அறிவு ஆகும். உடல் வலிமையாக உள்ளபோதே அறிவைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைக்கவேண்டும். தீய எண்ணங்களால் அறிவைத் துருப்பிடிக்க விட்டுவிட்டால் உடலில் இருந்து உயிர் பிரியும் நேரத்தில் அறிவினால் ஒரு பயனும் இல்லை. அறிவு துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருந்தால் உயிர் பிரிவதை தள்ளிப் போடமுடியும். இந்தக் கருத்தைத் தான் எல்லா சித்தர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கருத்தைத் தான் இறைவனும் பட்டினத்தாருக்கு உணர்த்த விரும்பினார்.

இதை உணர்ந்ததால் தான் பட்டினத்தாரும் இல்வாழ்வைத் துறந்தார். ஏனென்றால் இல்வாழ்வில் இருக்கும்வரை ஆசை, பந்தம், சொந்தம் என்று பல்வேறு இடையூறுகளால் அறிவு துருப்பிடிக்கும் என்று நினைத்தார். துறவு ஒன்றே அறிவைப் பக்குவப்படுத்த ஒரே வழி என்றும் அதை வாழ்வின் கடைசி காலத்தில் இல்லாமல் இளமையிலேயே செய்யவேண்டும் என்றும் துணிந்து துறவு மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது எண்ணத்தில் வெற்றியும் பெற்று இறைவனடி சேர்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறு.

சரி, இப்போது அந்த பனைஓலை வார்த்தைக்கு வருவோம். இதுவரை கண்டதில் இருந்து அந்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அந்த வார்த்தை இது தான்.

" காதற்ற ஊசியூட வாராதுகாண் கடைவழிக்கே"


சினிமா



ஆடி மாதத்தில் வந்த திரைப்படங்கள்
2012-08-06   மிரட்டல்
நடிகர்கள்:-வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன்.
கதை: - கொஞ்சம் வட்டாரம்,பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில்மிரட்டல்என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ்.
கருத்து: -. நகைச்சுவைக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்
புள்ளிகள்:-45
2012-08-02   மாலை பொழுதின் மயக்கத்திலே
நடிகர்கள்: -. ஆரி, சுபா, பஞ்சு சுப்பு, பாலாஜி,தேஜஸ்வினி, ஹரி,சேகர்,
கதை: - மழை பெய்யுற ஒரு மாலை நேரத்தில் ஒரு காபி ஷாப்ல ஒரு காபியை வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தா என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள்
கருத்து: -. இயல்பான உணர்வுகளுக்காகவே ரசிக்கலாம்.
புள்ளிகள்:-35
திரைஒளியின் பின்னால்..

நடிக்கத் தெரியாமல் வந்த என்னையும் நடிகனாக்கியவர் பாலச்சந்தர்: கமல்

நடிப்பு பற்றி எதுவுமே தெரியாமல் வந்த என்னையும் ஒரு நடிகனாக்கியவர் இயக்குனர் கே. பாலச்சந்தர் என்று கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் சந்தோஷம் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாசன் தனது குருவுக்கு அந்த விருதை வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியாதவது,
நடிப்பு பற்றி எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே திரையுலகிற்கு வந்தேன். எங்களுக்குள் இருந்த திறமையைப் பார்த்து அவர் எங்களை ஊக்குவித்தார் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் நாங்கள் திரையுலகிற்கு வந்தபோது நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. பாலச்சந்தர் தான் எங்களை எல்லாம் நடிகராக்கினார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்பது திரை உலகிற்கே விருது வழங்குவது போன்றாகும் என்றார்.
......................................................................................................................................................

3டி படத்தில் நயன்தாரா…!

அடுத்தடுத்த காதல் கலாட்டாக்களால், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தன் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கியுள்ளார். தற்போது, அஜீத்துடன் ஒரு படத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீராட் இயக்கும், “அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம், “3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். “மம்மூட்டி, பிருத்விராஜ், நயன்தாராவா… காம்பினேஷன் கலக்கலா இருக்கே! என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மலையாள ரசிகர்கள்.
...................................................................................................................................................

‘சிவாஜியின் பேரன்’ சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்!

காதலை பல கோணங்களில் கோடம்பாக்கத்துக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். இன்றைய கால கட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்…என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.
இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற மையக்கருவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் என்சி ஷியாமளன். ஏ வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.
சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட சிவாஜி தேவ்தான் படத்தின் நாயகன். செவாலியே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் புதல்வர். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுள்ளார்.
சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவர், இப்போது அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். நந்தனம் தன்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு நல்ல இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார் நம்பிக்கையுடன்.
காவலன் நாயகி மித்ரா குரியன் ‘காவலனு’க்குப் பிறகு நடிக்கும் படம் இது.
படத்தின் முக்கிய வேடத்தில் சன் டிவியில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி நடத்தும் ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன்.
முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய சங்கர்தாசின் தயாரிப்பு மேற்பார்வையில் நந்தனம் வேகமாக வளர்ந்து வருகிறது.
..........................................................................................................................

"ரீமிக்ஸ் பண்ணுவது கற்பழிப்பதற்கு சமம்" எம்.எஸ்.விஸ்வநாதன் காட்டம்

சென்னை, ஆக.11 (டிஎன்எஸ்)700க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 6000க்கும் மேலான பாடல்கள் என்று 60 வருடகங்களாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று அனைத்து மொழிகளிலும் இசையமைத்திருக்கும் இந்த மெல்லிசை மன்னருடன் ஜெயா டிவி இணைந்து 'நினைத்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் உருவான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை முழுக்க முழுக்க லைவ் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் பிரபல பின்னணி பாடகர்கள் எம்.எஸ்.வி யுடன் இணைந்து பாடப்போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நேற்று (ஆகஸ்ட் 10) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இப்போது உங்கள் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறார்கள் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்று கேட்டதற்கு, "ரீ மிக்ஸ் என்பது தப்பான காரியம் தான் அதை செய்ய தைரியம் வேணும். தைரியம்
இருப்பவர்கள் அதை செய்கிறார்கள். அதைப் பற்றி பேச வேண்டாம்." என்றவரிடம், ஒரு நிருபர், "ரீமிக்ஸ் செய்வது நல்லதா? என்று கேட்டதற்கு, "ரீ மிக்ஸ் செய்வது கற்பழிப்பதற்கு சமமானது. அப்படி இருக்க அதை செய்யலமா? அவர் அவருக்கு என்ன தெரியுமோ அதைதான் செய்ய வேண்டும். புதுசாக எதையாவது செய்யுங்கள் அதை விட்டுவிட்டு மற்றவர்களின் பாடல்களை ரீ மிக்ஸ் செய்வது தவறானதாகும்." என்று எம்.எஸ்.விஸ்வநாதன் காட்டமாக பதிலளித்தார்.
.........................................................................................................................................................
ஹீரோவாகிறார் வடிவேல் மகன் 

நடிகர் வடிவேலுவுவின் மூத்த மகன் சுப்பிரமணிக்கு 23 வயது ஆகிறது.   பிளஸ்-2' படித்து முடித்த இவர், இப்போது `கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன்' கற்று வருகிறார். 

இவரை நடிக்க வைப்பதற்கு பல டைரக்டர்கள் முயற்சி செய்தார்கள். அதற்கு வடிவேல் முதலில் சம்மதிக்கவில்லை. ``நேரம் வரட்டும்...அப்புறம் பார்க்கலாம்'' என்று வடிவேல் கூறிவந்தார்.
இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதாக கருதி, வடிவேல் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.
மகனுக்காக, வடிவேல் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்ததும், மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர்,  ‘என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு பொருந்துகிற மாதிரி ஒரு கதையை தேடி வருகிறேன். இதுவரை மூன்று டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன். அதில், ஒரு டைரக்டர் சொன்ன கதை சுப்பிரமணிக்கு பொருந்துகிற மாதிரி இருக்கிறது.
என்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆவான்.
அவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, `பிஸி'யாக முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும்.
என் `மார்க்கெட்' நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்கள் வசம் ஒப்படைப்பதில், பெருமைப்படுகிறேன்’’என்று கூறியுள்ளார்.
......................................................................................................................