எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04

இரு திணைப் பொருளையும் அவற்றின் நிலைகளையும் இயக்கங்களையும் ஒருவர் ஒருவருக்குப் புலப்படுத்த மக்களால் தோற்றுவிக்கப்பட்ட மொழி முதற்கண் செவிப்புலனாகும் ஒலிக்கூடங்களால் ஆக்கம் பெற்றதாகும். அதன் பின், பல்லாண்டுகட்குப் பின்னர் கட்புலனாக உருவாக்கப்பட்டதே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி முன்னிலை இடத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மட்டும் பயன்பட்ட நிலையிலிருந்து வளர்ந்து படர்க்கை இடத்திற்கும் [பிறரும்] எதிர்காலத்திற்கும் பயன்படவேண்டிச் சமைத்துக் கொள்ளப்பட்டது எழுத்துமொழியாகும் என்பர் அறிஞர்கள். தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்றான நறுந்தொகை "எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்",என்று எழுத்தின் முக்கியத்தை குறிக்கிறது. இது எழுத்துக்களை,கற்பித்த ஆசிரியன் கடவுள் ஆவான் என்கிறது. அது மட்டும் அல்ல, எழுத்து ஒரு மொழியில் முதலாகக் கற்பிக்க வேண்டுதலால், இங்கு கல்வியை எழுத்து என்றார். இது எழுத்தின் மகிமையை எடுத்து காட்டுகிறது. இன்றைக்கு எமக்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளாலும், முத்திரைகள் அல்லது வில்லைகளாலும் மற்றும் பண்டைய இலக்கியங்களாலும் வரிவடிவ எழுத்துகளைப் பற்றியும், அவை எழுதப் பெற்ற முறைகள் பற்றியும் எழுதப்பட்ட கருவிகள் பற்றியும் நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் எங்கும் நிரவி நிற்பது வீரமும் காதலுமே. அங்கே தமது
வீரத்தைக் காட்டி, உயிர் நீக்கும் வீரர்களுக்குக் கல் எடுத்து அவர்களது பெயரையும் பெருமையையும் எழுதும் செய்திகளை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.உதாரணமாக,

 "விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல்" --[ஐங்குறுநூறு  352] ; 

"செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் ,கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த" -- [மலைபடுகடாம்  394,395]; 

"மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து, இயைபுடன் நோக்கல் செல்லாது" --[அகநானூறு  297] ;

போன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரையும் அவர்கள் எதன் பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் எழுதினர் என்கிறது. இது    
போன்ற குறிப்புகள் அனைத்தும் சங்ககாலத்தில் எழுப்பப் பெற்ற நடுகற்களில் வரிவடிவ எழுத்துகள் [தமிழி அல்லது தமிழ்ப் பிராமி ] இருந்தன என்பதைப் ஐயமற புலப்படுத்துகின்றன. எனவே எழுத்தின் வரலாறு என்பது, வரி வடிவங்களின் மூலம் மொழியைக் குறிக்கும் முறை, இது, பல்வேறு நாகரிகங்களிலும் தோற்றம் பெற்று வளர்ந்தன. உண்மையான எழுத்து முறை மெசொப்பொத்தேமியா, எகிப்து, சிந்து வெளி அல்லது ஹரப்பா , சீனா, நடு அமெரிக்கா[மாயான்] ஆகிய நாகரிகப் பகுதிகளில் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. மிகவும் பிற்காலத்தில் தோன்றிய நடு அமெரிக்க எழுத்து முறையைத் தவிர்த்து, ஏனைய எழுத்து முறைகள் புதிய கற்காலத்தின் எழுத்துக்கு முற்பட்ட குறியீடுகளில் இருந்து, கிமு 4 ஆவது,3 ஆவது ஆயிரமாண்டு காலப் பகுதியில் நிலவிய தொடக்க வெண்கலக் காலத்தில்
வளர்ச்சியடைந்தவை யாகும். கிமு 4ஆம் ஆயிரமாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லா விட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக,2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ,கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்த ஆமையோடுகளில் செதுக்கப் பட்ட  சியாகு எழுத்துக்களும் (Jiahu Script), மற்றும் அதே போல,கி மு 5300 ஆண்டைச் சேர்ந்த ருமேனியாவில் உள்ள தார்த்தாரியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தார்த்தாரியா களிமண் வில்லைகள் [Tartaria clay Tablets] மூன்றில் ஒன்றும் இங்கு இணைக்கப் பட்டு உள்ளது. இவை முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைக்கு எடுத்து காட்டு ஆகும். இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது.

ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள்
தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை. தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு,அந்த மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை,  பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு, அக்குறித்த எழுத்து இன்னொரு வடிவமாக உருப்பெற்ற வரலாறுகளும் உண்டு. மாற்றங்கள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது.  ஆகவே நாம் எழுத்தின் தோற்றுவாய் பற்றிய கோட்பாடுகளை அலச முன்பு, நாம் சில அடிப்படை கேள்விகளுடன் தொடங்குவோம்.

• எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• எங்கு எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• எப்படி எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:05  தொடரும்

''Story or History of writing'/Part:04

Writing is considered as the physical manifestation of a spoken language and without the primary basis of this writing there will be no communication, history, record keeping, and art. Generally the history of writing traces the development of expressing language by letters or other marks /signs and also the study and description of these developments. It is generally agreed that true writing of language (not only numbers,which began long before the writing of language, for the purpose of record keeping) was independently conceived and developed first in ancient Sumer (in Mesopotamia) around 3100 BC. Independent writing systems also arose in Egypt around 3000 BC or there after ,In Indus valley or Harappa [the Indus script of the Bronze Age in Ancient India] around 2600 BC, in China around 1200 BC,and Mesoamerica [Mayans] by 300 BC.

Athivirarama Pandiyan [15th century],who ruled over a small territory wrote Naruntokai, like Avvaiyar's  Athisoodi, gave importance for writing and says:"Supreme is the one who declared  [or taught] writing"/"எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்".Also from Tamil sangam poems ,spanning from c. 700 BCE to 300 CE, we can come to know that writing existed in Tamil country even before Christ. For example:

"like writings on the memorial  stones of the dead, murdered by wasteland bandits whose arrows shot from their bow never miss their targets."/"விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல்"  [ஐங்குறுநூறு /Ainkurunuru  352] ,

"In the land where you are going, there are memorial stones with names etched for"/"செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் ,கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த" [மலைபடுகடாம் /Malaipadukadam  394,395] ,

"sharpen arrows and erode the sides of fierce, ancient memorial stones with names whose letters are not read by those who travel on the path,"/"மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து, இயைபுடன் நோக்கல் செல்லாது" [அகநானூறு /Akananuru  297]

Scholars make a reasonable distinction between prehistory and history of early writing, but have disagreed concerning when prehistory becomes history and when proto-writing became "true writing". Writing, in its most general terms, is a method of recording information and is composed of graphemes [individual letters and groups of letters that represent single phonemes,the speech sounds made by the mouth], which may in turn be composed of glyphs.The invention of writing was not a one-time event, but a gradual process initiated by the appearance of symbols, possibly first for cultic purposes. Example of the Jiahu symbols, writing-like markings, found on tortoise shells were dated around 6000 BCE and Clay amulet, one of the Tartaria Tablets, dated to ca. 5300 BCE are attached. However,Before we start "Theories of the Origins of Writing", I would like to start with the basic questions: 

• When was writing invented?
• Where was writing invented?
• Why was writing invented? 
• How was writing invented?  

                                                                             [Kandiah Thillaivinayagalingam]

Part:05 will follow 

தொழில்நுட்பம்:- வருங்காலதொலைநோக்கு,------------(பகுதி:01)

இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:
(இது எனது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)

௦0.10  முகப்பு:
வணக்கம்.  நான் பலவிதமான தொழில்நுட்ப விடயங்களிஸ் ஆர்வம் உடையவன். என் பொதுவான சம்பாஷனைகளில் இனி வருங்காலத்தில் மனிதகுலத்தில்  நடக்ககூடிய சில நம்பமுடியாத கற்பனை செய்ய முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத பலவிதமான தொழில்நுட்ப கொள்கைகளையும், தத்துவங்களையும் உமிழ்வது வழக்கம். இவைகள் எல்லாம் வரும் 500 வருடங்களில் கட்டாயம் நடக்கும் என்பது  என்னுடைய   அசைக்க யாத வாதம். தற்காலத்தில் வெளிவரும் ஆக்கங்கள் பெரும்பாலும் அரைத்த மாவை அரைப்பதாகவே தோன்றுகின்றன.  நான் ஒரு வித்தியாசமான முறையில் புதிய ஒரு கோணத்தில் பகுத்தறிவுடன்  ஆராய்ந்து எழுதும் இவ்வாக்கம் ஆவணப்படுத்தி வைத்தால் பிற்கால சந்ததியினர் எனது தொழில்நுட்ப ஜோசியம் சரியென  உணரும்போது எனது கற்பனைத் திறனை வியக்க மாட்டார்களா என்ன?

நான் ஒரு விஞ்ஞானி அல்ல. என்னுள் இருக்கும் சில உணர்வுகள், மனிதர் தற்சமயம் இயற்கை, வழக்கம் என்று எண்ணியிருக்கும் பல கொள்கைகளை உடைத்து எறிந்து, அறிவுபூர்வ அணுகுமுறையுடன் சிந்தனை செய்து புதிய பல 'இயற்கை','வழக்கம்'போன்ற விடயங்களை உங்களுடன் பகிர முனைந்தேன். இயற்கை என்று சொல்லப்படும்போது அது ஒரு பூமியைச் சார்ந்த மனிதனின்  சார்பான ஒரு சொல்லாகும். ஆனால் வேற்றுலக உயிர்களுக்கோ வருங்கால மனிதனுக்கோ இயற்கை என்றல் முற்றாக வேறு கருத்துடையதாக இருக்கும். இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் இவனுக்குப் பைத்தியம் என்றும் நகைக்கக் கூடும். பரவாய் இல்லை. இப்படிப் பல தத்துவ ஞானிகள்கூட ஏற்கனவே பெயர் எடுத்து விட்டார்கள். விஞ்ஞான வளர்ச்சியை நம்புவோர் இதை மிக வியப்புடனும், மற்றயோர் இதை ஒரு கற்பனை நாவல் என்றும் எடுதுக்கொள்ளட்டுமே!

௦0.20  புகுமுன்:
இந்த தொழில்நுட்ப அலசல் முக்கியமான ஆறு பகுதிகளைக் கொண்டு இருக்கும்.
1. சக்தி ஆக்கம்
2. வாகனம் - பொழுதுபோக்கு 
3. சுற்றாடல் - இயற்கை - உணவு - வீடமைப்பு
4. மனித அறிவாண்மை
5. அண்டவெளி
6 . தெய்வ நம்பிக்கை   

இந்த அறிவுடை தொலை நோக்கல் இப்போது இருக்கும் சாதனங்களை விளங்கப்படுத்தவோ அல்லது இனி சொல்லப்போகும் விடயங்களை ஆய்வு செய்யும் நிறுவல் கொள்கைகளையோ நிச்சயமாகக் கொண்டு இருக்காது. ஏனென்றல், தற்போதைய மனிதனின் அறிவு அவற்றைக் கிரகித்து, விளங்கி, நிறுவும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.


இவையெல்லாம் இனி நடக்கும் என்று நான் நினைப்பவற்றில் ஒரு சில பகுதியே ஆகும். 
[2010 இல் தீபத்தில் வெளிவந்த கட்டுரை.]
--ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன் -----------------  தொடரும்

சும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா?

                                                                                             

நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பயன்படுத்தும் ஒரு சொல்சும்மாஎன்பதாகும். இது பற்றி ஒரு சிறு விளக்கம்!

"சும்மா இருப்பதே சுகம்!" இச்சொல் "திருமந்திரம்" என்ற நூலில், திருமூலரால் எடுத்தாளப்படுகிறது. "சும்மா" என்பதற்கு "அமைதியாய் இருப்பதே சுகம்" என்று பொருள். ஞானிகள், முனிவர்கள், தவசிகள் தங்கள் வாழ்வைத் துறந்து அமைதியாய் ஓரிடத்தில் தவம் செய்வதையே இச்சொல் குறிப்பதாக அமைந்தது.

வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் குழந்தையிடம், அம்மா, "சும்மா நிற்காதே; எனக்கு உதவிசெய்!" என்பாள். இதில் வரும் "சும்மா" என்ற சொல்லுக்கு "வேலை ஒன்றும் செய்யாமல், நிற்காதே" என்று பொருள்.

சில இடங்களில் நல்ல மாமரமோ, தென்னை மரமோ வளர்ந்திருப்பதைக் காணலாம். அப்பொழுது ஒருவர் "யாரும் தண்ணீர் ஊற்றாமல் இம்மரம் சும்மா வளர்ந்திருக்கிறதே!" என்று கூறுவார். இவ்விடத்தில் "சும்மா" என்பதற்கு, எவ்வித உதவியும் இன்றித் தன்னந்தானே இயற்கையாக வளர்கிறது" என்று பொருள்.

"என் அன்னையின் நினைவு "சும்மா சும்மா" வந்து என்னை வாட்டியதுஎன்கிறார் ஒருவர். இதில் வரும்சும்மா சும்மாஎன்பதற்குஅடிக்கடிஎன்று பொருள்.

சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திஎன்ற பாடல். கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் எழுதியதாகும். இதில் வரும்சும்மாஎன்பதற்குத்தரிசாக- விளைச்சல் இல்லாமல்என்று பொருள்.

புவியரசன் சோற்றைச் சும்மா சாப்பிட்டான். சோறு உண்ணும் பொழுது நமக்கு வேண்டிய காய்கறிகள். கறிவகைகளை வைத்துக் கொண்டு உண்போம். இவனுக்கு மிகுந்த பசியாக இருந்ததனால் மற்ற கறிகளைச் சேர்த்துக் கொள்ளாமல் வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான். ஆதலால் இங்கு வரும்சும்மாஎன்ற சொல் வெறும் சோற்றை மட்டும் உண்டான் என்பதைக் குறித்து நின்றது.

வீட்டில் சிறு பிள்ளைகள் குளித்து விட்டு, ஆடையின்றிக் காட்சியளிப்பார்கள். அதை நாம், குழந்தைசும்மா நிற்கிறதுஎன்று சொல்வோம். இங்குக் குறிக்கப்படும்சும்மாஎன்பதற்கு ஆடையணி எதுவுமில்லாமல் நிர்வாணமாக நிற்கிறது என்பதே பொருளாகும்.

நான் உன்னைக் கொன்று விடுவேன்’’ என முல்லையிடம்சும்மாசொன்னதை அவள் தவறாக நினைத்து விட்டாள்!’’ இதில் வரும்சும்மாஎன்பதற்குவிளையாட்டாக ஒரு பேச்சுக்குச் சொன்னதைஎன்று பொருள் கொள்ள வேண்டும்.

சிலர், விலையுயர்ந்த ஆடைகளையும், அழகான ஆடைகளையும் அணிவது அணிவது இயற்கை. அப்படி அணியும் ஒருவனைப் பார்த்துஉன் ஆடை அழகாக இருக்கிறதே! எப்போது தைத்தாய்?’’ என்று கேட்டால்சும்மா இருக்கும் போது’’ என்று விடை வரும். இங்கேசும்மாஎன்பதற்குஓய்வாக இருக்கும் போது’’ என்று பொருளாகும்.

அன்பரசன், ‘’தன் குடும்பத்தைச் சீரழித்தவரைச் சும்மா விடப் போவதில்லை’’ என்று கூறினான் இதில் வரும் ‘’சும்மா விடப்போவதில்லை’’ என்பதற்குப்பழிவாங்காமல் விடுவதில்லை’’ என்பதே பொருளாகும்.

தற்போது அனைத்து வீடுகளிலும் கைப்பேசி உள்ளது. சிலர் எப்பொழுதும் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பர். இதனால் வெளியிலிருந்து வரும் செய்திகள் தடைப்படும். இதனால் அன்னை ஆத்திரமுற்று இவ்வாறு கூறுவார்: “சும்மா வெட்டிப் பேச்சுப் பேசியது போதும் கைப்பேசியைக் கீழேவை. இதில் வரும்சும்மாஎன்பதற்குஅனாவசியமாகஎன்று பொருள்.

நம் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு அருந்துவார்கள், அப்போது நாம், “சும்மா அருந்துங்கள் இது நம்ம வீடு மாதிரி’’ என்று சொல்வோம், இங்கு வரும்சும்மாஎன்பதற்குவெட்கப்படாமல் உண்ணுங்கள்என்று பொருளாகும்.
-தகவல்:கயல்விழி           ஆக்கம் :-முனைவர். மா. தியாகராஜன்.

பாரதி கண்ட புதுமைப்பெண் ஆக...?

பாரதி கண்ட புதுமை
 பெண்ணை பாராட்டி வாழ்த்துவோம் வாரீர்

 சமூகத்தை அடிமை படுத்தும் 
மூட நம்பிக்கை விழுமியங்களில் விழுந்து விடாமல் 
சுய சிந்தனைக்கு வடிவம் கொடுத்து 
பாரதி கண்ட பெண்ணாக உயர
 வளர்த்திட   வாரீர்!

யார் வந்து காதல் வலை வீசினாலும்
 விழுந்திடுவோம் 
ஆனால் எமை அடிமை கொள்ள நினைத்தால்
 கொன்றுவிடுவோம்!

காதல்   வேசம் போட்டு எமை 
காம இச்சையில் வீழ்த்தும்
 கயவர்களை அழித்துவிட 
பாரதி கண்ட புதுமை பெண்ணாக 
பொங்கி எழுவோம் வாரீர்!

சமூகத்துக்கு வெளிச்சம் கொடுக்கும்
 சுடராக ஒளிர்ந்திடுவோம் 
எம்மை இழிவு படுத்தி 
அணைக்க நினைத்தால் 
சுட்டு எரித்திடுவோம்!

ஆண் காலில் வீழ்ந்து விடாமல்
அவன் துணை இன்றி 
சாதித்து சரித்திரம் படைப்பாய் எனின் 
நீ பாரதி கண்ட புதுமை ப்பெண்  ஆவாய்

காலையடி அகிலன்

எந்த ஊர் போனாலும் நம்மதமிழன் ஊர் தூத்துக்குடி போலாகுமா?

தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன

வரலாற்றுக் குறிப்புகள்

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

ஆங்கிலேயர் காலத்து துறைமுகம் 
கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும்

கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.

இப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரஞ்சு படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரஞ்சுகாரர்கள் பாளையக்காரர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. காளக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தான். 1783-ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர்.

இன்று துறைமுகம் 
1785-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1797-ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910-ஆம் ஆண்டிற்கு பிறகு இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986-ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி கடற்கரையோரப் பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது.

சிறப்புப் பெயர்கள்

 தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.

திருமந்திர நகர்

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு. இந்தக் கடற்கரை மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில் கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திர நகர் என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.

முத்துநகர்

தூத்துக்குடி பரதவர்கள் கடலில் ஆண்டுக்கு ஒரு முறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம். பாண்டிய நாட்டின் ஆளுகை உடைய பரதவர்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால் இது முத்துக்குளித்துறை என்று பெயர் பெற்றது. பின்னாட்களில் முத்து நகர் என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயிலுக்கு முத்து நகர் எக்ஸ்பிரஸ் என்று பெயர்.

துறைமுகம்

இன்றைய துறைமுகத்தில் விசைப் படகுகள் 
ஆங்கிலேயர் ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், 1913இல்
மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது.தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு ஆண்ட பரதவர்களின் ஜாதி தலைவருக்கு சொந்தமான பாண்டியன் தீவில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

அனல்மின் நிலையம் 
1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம்
ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.
உப்பளங்கள்.
ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை.
தூத்துக்குடி அல்காலி ரசாயன நிறுவனம்.
தேங்காய் எண்ணை ஆலைகள்.
கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்

பொழுதுபோக்கு இடங்கள்
ரோச் பூங்கா.
துறைமுக கடற்கரை.
நேரு பூங்கா.

பெயர்க் காரணம்
நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில் இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள்
தூத்துக்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதிகள்.

சிறப்புகள்
இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.
இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது.
புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.

                                        தொகுப்பு:கயல்விழி