சிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது


ஆசிரியர்:டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"
மாணவன்:நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால நீங்க அடிமுட்டாள் சார்.
………………………………………………………………………
 மாணவன் வடிவேலு : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல.வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."
மாணவன் விவேக் : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் வடிவேலு கொடுத்துட்டு   வந்தேன்...
மாணவன் வடிவேலு : அடப்பாவி விவேக்கா, என்ன நீ  ஒரு விவேகமில்லாதவனா இருக்கே. ..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"
………………………………………………………………………………
மனைவி:ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ...உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது?
…………………………………………………………………………
மனைவி: "நான் சிம்கார்டுன்னா, நீங்க செல்போன் மாதிரிங்க"
கணவன்:"அப்படீன்னா உன்னோட தங்கச்சி ரீசார்ஜ் கார்டா?"
………………………………………………………………………
வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"
பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"
வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
……………………………………………………………………………
நீதிபதி மனைவியைப் பார்த்து:-  உன் கணவனை ஏன் கதிரையால் அடித்தாய்?
குற்றவாளிக் கூட்டில் நிற்கும் மனைவி:- ஐயா! மேசையைத்தூக்க என்னால் முடியவில்லை.
…………………………………………………………………………………………………………………………………………………….
போலிஸ்:ஒரே கடையிலை பலமுறை திருடியிருக்கிறியே!என்ன துணிச்சல் உனக்கு!
திருடன்:ஐயா!அந்தக் கடையில "நன்றி மீண்டும் வருக"என்று எழுதியிருந்தது ஐயா!
………………………………………………………………………………………………………………………..
மனைவி: ஏங்க!..இப்படியே நான் சமைச்சு போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?
கணவன்:.. என்னுடைய லைவ்  இன்சுரன்ஸ் பணம் வலு கெதியாய் கிடைக்கும்.
……………………………………………………………………………………………………………………….
நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?’’
“எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க
…………………………………………………………………………………………………………………..
ஏன் தினமும் சாப்பாட்ட பார்சல்ல வாங்கிட்டுப்போறிங்க?
ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்ன்னு டாக்டர் சொன்னார்.அதான்!
..............................................................................................................................
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

📽→ செய்திகள் 13-11-2019


பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக சவுதி அரேபியா

சவுதி அரேபியாவின் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றுவதற்காகவும்அந்நிய முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டத்து  இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு திட்டங்களை சவுதி அரேபியாவில் செயல்படுத்தி வருகிறார். இஸ்லாத்தின் மிகவும் மிதமான வடிவத்திற்கு அழுத்தம் கொடுத்து தேசியவாத உணர்வை ஊக்குவித்து வருகிறார்.சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார் மற்றும் சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு சவுதி அரேபியா 20 நாடுகள்  குழுவின் தலைவராக பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார்.சவுதி அரேபியாவின் அரசு பாதுகாப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பர வீடியோவில், பழமைவாத முஸ்லிம் அரசான சவுதி அரேபியா  சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும்வெளிநாட்டினரை ஈர்க்க முயன்றபோதும், "பெண்ணியம் பேசுதல், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம்" ஆகியவற்றை தீவிரவாத செயல்களாக வகைப்படுத்தி உள்ளது.

மாநில பாதுகாப்பு அதிகாரியின் அதிகாரப்பூர்வ  ட்விட்டரில் வெளியிடப்பட்ட அனிமேஷன் வீடியோவில்  "அனைத்து வகையான தீவிரவாதம் மற்றும் வக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறப்பட்டு உள்ளது. தக்ஃபீருடன் சேர்ந்து அந்தக் கருத்துக்களை பட்டியலிட்டு உள்ளது. தாய்நாட்டின் இழப்பில் அதிகமாகப் பெறுவது தீவிரவாதமாகத்தான் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்  என கூறப்பட்டு உள்ளது.யாழில் இருந்து சென்னைக்கு வணிக விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை 10ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு இவ்வாறு நாளாந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
→→→→→→→→→→→

ஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர் கோயிலுக்கே வழங்குகிறோம்: ஜாமியாத் உலீமா ஹிந்த் அமைப்பு

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோயிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலிமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் இந்த அமைப்பும் முஸ்லிம்கள் தரப்பில் இருந்தது. இந்நிலையில் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் கூறும்போது, “பாபர் மசூதி நிலத்துக்காகவே சட்ட ரீதியாக வழக்காடினோம். வேறொரு நிலத்துக்காக அல்ல. வேறு எங்கும் மசூதிக்காக எந்த ஒரு நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. இந்த 5 ஏக்கர் நிலத்தையும் கூட ராமர் கோயிலுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
“நாங்கள் நிலம் வாங்கி அதில் மசூதிக் கட்டிக் கொள்ள முடியும். நாங்கள் எந்த ஒரு அரசையும் இதற்காக நம்பியில்லை. நீதிமன்றமோ, அரசோ எங்கள் உணர்வுகளை மட்டுப்படுத்த வெண்டும் என்று விரும்பினால் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிக்குள்ளேயே தர வேண்டும்” என்று மவுலானா ஜலால் அஷ்ரப் என்ற உள்ளூர் மதகுரு தெரிவித்தார்.
இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி என்பவர் கூறும்போது, “அவர்கள் எங்களுக்கு நிலம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், எங்கள் வசதிக்கேற்பவே அளிக்க வேண்டும். அதாவது அந்த 67 ஏக்கர் நிலப்பகுதியில்தான் அளிக்க வேண்டும்” என்றார்.
அயோத்தியில் உள்ள முஸ்லிம் சமூக ஆர்வலர் டாக்டர் யூசுப் கான், “எங்கள் சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அயோத்தியில் நிறைய மசூதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் சார்பாக தீர்ப்பளித்து விட்டதால் இனி இந்த விவகாரம் முடிந்த ஒன்று” என்றார்.
அனைத்திந்திய மில்லி கவுன்சில் அமைப்பின் பொதுச் செயலாளர் காலிக் அகமட் கான் கூறும்போது, “அரசு அந்த 67 ஏக்கர் நிலப்பகுதிக்குள் எங்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும். அதில் மொத்தம் 16 மனைகள் உள்ளன. இதில் முன்னாள் பாபர் மசூதி மற்றும் ஷிலன்யாஸ் ஆகியவை அடங்கும். இதில் இடுகாடு ஒன்றும் உள்ளது. நான்கு குவாநாதி மசூதி, 18-ம் நூற்றாண்டு சூஃபி புனிதர் காஸி குத்வா என்பாரது கல்லறை மாடம் ஆகியவையும் அடங்கும். இவற்றில் சில அழிக்கப்பட்டுவிட்டது” என்றார்.
அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஹாஜி ஆசாத் அகமட் கூறும்போது, “பாபர் மசூதிக்கு மாற்றாக எங்களுக்கு வேறு நிலம் தேவையில்லை. எங்களுக்கு நில நன்கொடை தேவையில்லை” என்றார்.
→→→→→→→→→→→

கொலம்பியாவில் ருசிகரம்: குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

 கொலம்பியாவில் ஒரு வயதே ஆன குழந்தையின் உயிரை ஒரு பூனை காப்பாற்றி ‘ஹீரோ’வாகி இருக்கிறது. தலைநகர் போகோடாவில் உள்ள ஒரு வீட்டில் அந்தக் குழந்தை அங்கும் இங்குமாக தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த குழந்தை தவழ்ந்து மாடி படிக்கட்டுக்கு அருகே சென்றது.

அப்போது அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த வீட்டின் செல்லப்பிராணியான பூனை பாய்ந்து வந்து, குழந்தையை பிடித்து தடுத்து நிறுத்தியது. மேலும் குழந்தையை எதிர்திசையில் வீட்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு மாடி படிக்கட்டு அருகிலேயே பூனை அமர்ந்துகொண்டது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

பூனையின் செயலை பாராட்டி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
                    tags:-Aishwarya Rajesh Sanchita Shetty                    Samantha  Oviya          Kalavani     Amy Jackson                 Chandini Tamilarasan                  
                    Srushti Dange               Taapsee Pannu             Hansika Motwani         Janani Iyer Pranitha    Nithya Menen              Shruti Haasan               
                    Rakul Preet Singh         Radhika Apte                Nandita Swetha                                Gayathrie   Varalaxmi Sarathkumar                    Mahima Nambiar        
                    Nazriya Nazim               Sri Divya     Catherine Tresa            Nikki Galrani                 Keerthy Suresh            
Aari             Atharvaa Murali           Arulnithi    Harish Kalyan                Vidharth     Vijay Sethupathi           Ashwin       Sivakarthikeyan                    Sri              
                    Udhayanidhi Stalin      Dinesh        Attakathi    Vijay Antony                 Vikram Prabhu             Gautham Karthik                    Ashok Selvan               
Bobby Simha                 Kathir         Madha Yaanai Koottam                  Naveen Chandra          Bramman   Koottam Kalaiyarasan
                    G. V. Prakash Kumar surya vijay karththik kamalhasan rajanikanth Srikanth suri vavelu
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,


சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பகுதி/13சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு

ஞானம்/C/தொடர்ச்சி
                  இந்த பூரண ஞானம் பெற்றவர்கள் உலகில் இயற்கையை ஆராய்ந்து, நமக்கு பல நல்லகருத்துகளை, ஞான மொழியாக கூறியுள்ளார்கள். இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே, உலகில் பிறக்கும் உயிர்கள், உயிர் வாழ தேவையான அனைத்து பொருட்களும் இயற்கையினால் படைக்கப்பட்டு, அதன் பிறகு தான் மனிதரும், விலங்கினமும், தாவரமும் தோன்றியது. உலக உயிர்கள் சுவாசிக்க காற்று, பசிக்கு தானியம், தாகத்திற்கு தண்ணீர், வெளிச்சம், நோய் தீர்க்கும் மூலிகைகள், தங்கம் வெள்ளி, வைரம், பாறை, மலை, என இன்னும் எவ்வளவோ படைக்கப்பட்டுவிட்டன. இவைகளை அடைந்து அனுபவிக்க உயிர்களுக்கு கை, கால், மூளை, அறிவு என சாரீரம் அமைந்துள்ளது. ஒரு மனிதன் தன் சரியான அறிவு, முயற்சி கொண்டு, இவைகளை எவ்வளவு வேண்டும் என்றாலும் அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம் இதற்கு எந்த தடையும் கிடையாது. இவைகள் ஒருவருக்காக படைக்கப்படவில்லை என்பதை உணர்தல் அவசியம். இதை விடுத்து கடவுளை வணங்கினால் எல்லாம் கிடைத்து விடும் என்று வாழ்வது அறியாமை, ஞானமற்ற மனித நிலையாகும். பூமி தோன்றிய போது இயற்கையால் படைக்கப்பட்ட பொருட்களை தவிர புதிதாக ஒரு பொருளை எந்த ஒரு சக்தியாலும் பூமியில் உருவாக்கமுடியாது என்பதை அறிதலே மூல ஞானம். நிர்ணயிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாது என்பதை அறிதலே ஞானம்.
                    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், வாழ்வும் எப்படி அமைந்துள்ளது. எதனை அடிப்படையாக கொண்டு பிறப்பு உண்டாகின்றது என்பதை என் குரு கூறுவதை கேளுங்கள்.

அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்

 அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
 எவரெவர்க் குதவினார் எவரெவர்க் குதவிலர்
 தகையவர் நினைவது தமையுணர் வதுவே.           என்று கூறுகின்றார்.         


                    இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும், முன்னோர்களால் வம்சத்தில் உண்டான பாவ, சாப, புண்ணியங்களை அனுபவித்து தீர்க்க, ஊழ்வினையை கழிக்க, இந்த பூமியில் பிறக்கின்றனர். அந்த ஊழ்வினைகளின் கணக்கின்படிதான், இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தடை, கஷ்டம், நோய் என, பலவிதமான அனுபவ நிகழ்வுகள் கொண்ட வாழ்க்கை அமைகின்றது. தன் ஊழ்வினையின்படியே பலன்களை வாழ்கையில் அனுபவித்து வருகின்றார்கள்.
                   எனவே இந்த பூமியில் பிறந்த ஒரு மனிதனோ, அல்லது தெய்வமோ, பூசை, ஹோமம், யாகம், மந்திரம், மணி வழிபாடு, விரதம், தானம், தர்மம், என எந்த ஒரு கிரியை செயல்களை செய்தாலும், இந்த ஊழ்வினை படி நாம் அனுபவிக்க வேண்டிய "பிராப்த விதியை" தடுத்து விடமுடியாது. பரிகாரம் என்ற பெயரில் செய்யும் சடங்கு, சம்பிரதாய, சாஸ்திர செயல்களால் ஊழ்வினை விதியை மாற்ற முடியாது. மற்ற எவரும் உதவி செய்து நம் ஊழ்வினையை மாற்ற முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஞானத்தினால் தன்னையறிந்து, ஞான நிலையுடன் வாழ்ந்தால் ஊழ்வினையை அறிந்து தடுத்துக் கொள்ள முடியும் "தன்னையறிதலே ஞானம்". இதுவே விதியை தடுக்கும் சக்தி.
                  ஒவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு முன்பே இந்த பிறவியில் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஊழ்வினையின் படி, விதி பயன் நிர்ணயித்த பின் தான் பிறக்கின்றான். இதனை "பிராப்த விதி" என்பார்கள். இந்த நிர்ணயித்த விதியை, தன்னை யறிந்தவன் தடுத்து நல் வாழ்வை அடைய முடியும். தன் விதியை தடுத்து கொள்ளும் வழியை அறிதலே ஞானம் என்கிறார்.

  தத்துவ குப்பையை தள்ளுங்கடி வேத

  சாத்திர பொத்தலை மூடுங்கடி
  முக்தி தருஞான வத்துவை வாவென்று
  மூட்டி கும்மியடி யுங்கடி.


                 தொடரும்.....
ஆரம்பத்திலிருந்து படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01..

🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖

இப்படியும் சில பெண்கள்

படம் : .
இசை : G.ராமநாதன்
குரல் : T.M.சௌந்தர்ராஜன்
வரிகள் : உடுமலை நாராயணகவி

தொகையறா:
கண்டால் கொல்லும் விஷமாம்
கட்டழகு மங்கையரை
நாம் கொண்டாடி திரியாமல்
குருடாவதெக்காலம்
பாடல் :
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே

வீண் பெருமை காட்டி சிறுமை காட்டும்
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே

மங்களம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
கேட்டு வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே ................
தொகையறா :
ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மாயமினுக்கும் பெண்டுகளை பார்த்திடானாம்
பாடல்:
கண்டவரோடு கண்ணால் பேசி
காமுறும் மாது
இந்த பூமியின் மீது
கொண்ட கணவன் தன்னை கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு ...
( பெண்களை நம்பாதே ........)
அனுப்பியவர்: Kandiah Thillaivinayagalingam

குடித்தாலும் ...short filmஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......

                                                                                                                                                                                                02.11.2019
அன்புள்ள அப்புவுக்கு,
நான் நலம்,அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
மேலும்,உங்கள் கடிதம் கிடைத்தது. புதினம் யாவையும் அறிந்தேன்.சந்தோசம்.
 அப்பு,சின்ன வயசில நான் ஊரில வாழ்ந்த காலத்திலை கோவிலின் இரவுத்திருவிழாக்களில், திருவிழா உபய காரருக்கிடையிலேயான போட்டிகள் காரணமாக ஒவ்வொரு இரவும் கூத்துக்கள் நடைபெறும்.அப்போதெல்லாம் "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்"என்று பழமொழி கூறுவீர்கள்.

ஆனால் இன்று கனடாவில் அது தலைகீழாகி விட்டது.இங்கு பல தமிழ் வானொலி(CTBC,CTR,GTR,CMR,ITC,KETHAVANY ,VANAKKAM FM,VTR), தொலைக்காட்சி (TVI,TAMIL ONE)சேவைகள் உள்ளன.வேறு நாட்டவர்களில் இல்லாதது போன்று  அவர்களிற்கு இடையில்  பகைமை உணர்வுகள் காணப்படுவது கவலைக்குரிய விடயமே.கோடை காலம் வந்துவிட்டால் இவர்கள் தனித்தனியே பெருந் திறந்தவெளியில் கலையரங்கும்,சிறுவர் விளையாட்டு திடல்களும்,கடைகளும் அமைத்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வாக பல வருடங்களாக நடந்துவருகிறது. ஆனால் அவர்களுக்கிடையில் காணப்படும் பகைமைப் போட்டி காரணமாக இவ்வருடம் அந்நிகழ்வுகளுக்கான அனுமதியினை ஒரு பகுதி இலவசமாக்கியதும் ஏனையோர்களும் தொடர ஆரம்பித்து விட்டார்கள். இது தமிழ் நுகர்வோர் பாடு கொண்டாட்டமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் சில பொது நோக்குடையோர் மத்தியில்  "அனுமதிக்கு சிறு கட்டணமாதல் அறவிட்டு அப்பணத்தினை பொதுச் சேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம்" என்ற கருத்தும் ஆங்காங்கே கேட்கக்கூடியதாக இருந்தது. 

மேலும்,இன்னொரு கவலைக்குரிய விடையம் என்னவெனில் வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் டொலர் செலவழித்து கலைஞர்களை இறக்குமதி செய்யும் இவர்கள், இலவசமாக இதுவரை அவர்களுக்கு கலைநிகழ்ச்சிகளை வழங்கி வந்த உள்நாட்டு கலைஞர்களை உதறியுள்ளதேயாகும்.

இதில் நகைப்புக்கிடமான விடயம் என்னவெனில்,கலைநிகழ்வுகள் நடக்கும் மேடைகளுக்கு முன்னால் ஒன்பது கதிரையை ஒரு பெண் பிடித்து வைத்துக் கொண்டு ஏனையோரை இருக்கவும் விடாது அவர் வருவார்,இவர் வருவார் என துஷ்பிரயோகம் செய்வதுதான் பல பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தது. நானும் ஒருமுறை என் 5 வயது மகனுக்கு உணவினை வாங்கி அவன் அதை உண்பதற்காக ஒரு கதிரையில் உட்கார செல்கையில் பக்கத்தில் இருந்த பெண் "அவர் வருவார்" எனக்கூறியதால் அந்த வெறும் கதிரையின் பக்கத்தில் என் மகன் நின்ற நிலையில் உணவை சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிந்த நாம் அவ்விடத்தினை விட்டு விலகும்போதும்  அந்த அம்மாவின், அந்த அவர் வரவேயில்லை. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இவ்வாறு எங்கள் சனங்கள் எவ்வளவு அநாகரிகமாக  இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

அப்பு, எங்கள் தாய்மொழி உணர்வினை பாவித்து உயர்ந்த தமிழர் பலர். ஆனால் சிலரிடம்  மொழிப்பற்று எந்தளவில் என்பதற்கு சில சம்பவங்களினை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

சில காலம் நானும் இணைந்து வெளியிட்ட ஒரு இலவச சஞ்சிகையினை நான் சந்தித்த இரு தமிழ் போதிக்கும் ஆசிரியர்களிடம் நீட்டினேன். அவர்கள் தாம் வாசிப்பதில்லை என்று முறித்துக் கூறிவிட்டனர்.

அடுத்து நான் குறிப்பிடுவதுவும் தமிழ்க்கல்வி பற்றியதே! எங்கள் ராமுவுக்கு ஒரே ஒரு பெண்பிள்ளை.ஆனால் அவன் மனைவி தமிழே அறியாத வேற்று நாட்டவள்.எனவே அவன் பிள்ளைக்கு தமிழ் கற்றுக் கொடுக்கச் சிந்தித்ததேயில்லை.ஆனால் அப்பிள்ளை அப்பாவின் மொழி படிக்கப்போறேன் என்று அப்பாவுக்குக் கொடுத்த தொந்தரவால் ராமுவும்  அவளை தமிழ் கல்லூரியில் சேர்த்து விட்டான்.ஆனால் நடந்ததோ வேறு.

அவளுடன் ஆங்கிலம் பேச கூச்சப்பட்ட தமிழாசிரியை அவளை முழுமையாகப் புறக்கணித்ததுடன்  "தமிழ் தெரியாத இந்தப்பிள்ளை ஏன் இங்கை வருகிறது" என்று பலமுறையும் தமிழில் நச்சரிக்க அதனை மற்றைய பிள்ளைகள் அவளிடம் எடுத்துச் சொல்ல அப்பிள்ளை மிகவும் கவலையுடன் தமிழ்க் கல்வியினை நிறுத்திக்கொண்டாள்.

தமிழ் வாசிக்க மனமில்லாதவர்கள் எப்படி பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்க முடிகிறது என்பதுவும், கற்பிக்க முடியாதவர்கள் தமிழை தாம் வளர்ப்பதாக மேடைகளில் முழங்குவதும் எனக்குப் புரியவில்லை.

அப்பு, இங்கு நடக்கும் ஏனைய புதினங்களுடன் அடுத்த கடிதத்தில் உங்களைச் சந்திப்பேன்.உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் எழுதுங்கள்.

வணக்கம்.
இப்படிக்கு
அன்பின் மகன்
செ.மனுவேந்தன்