எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகுமா?

கன்னியாகுமரி (കന്യാകുമാരി/ Kanyakumari), -இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒர் பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது.
இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ் சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133-அடி திருவள்ளுவர் சிலை ஆகியவை புகழ்பெற்றவை. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய சாம்பல் (அஸ்தி) கரைக்கப்பட்டது. காந்தியடிகள், காமராஜரின் நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.
தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் 5 நிலங்களில் குறிஞ்சி(மலை),முல்லை (காடு),மருதம்(வயல்),நெய்தல்(கடல்) ஆகிய 4 நிலப்பகுதியும் கன்னியாகுமரி பகுதியில் உள்ளன.

வரலாறு
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியின் பழைய பெயர் "ஆயுத்யா நாடு"(Ayuthya Nadu) எனவும், கொரிய இளவரசி Heo Hwang Ok(செம்பவளம்)யின் பிறந்த இடம் இதுதான் எனவும் ஒரு கருத்து உள்ளது. பண்டைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி இருந்து வந்தது.பிற்காலத்தில் கேரள மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபின் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது மார்ஷல் நேசமணி அவர்களின் தலைமையில் நடந்த கடும் போராட்டத்துக்குப்பின் தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்தது.

சுற்றுலா இடங்கள்
விவேகானந்தர் நினைவு மண்டபமும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையும்

கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் இடங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது. ஐந்து நாட்களில், 4273 கிலோ மீட்டர், பயணிக்கும் இந்தியாவின் மிக நீண்ட தூரம் மற்றும் நேர ரயிலான விவேக் விரைவு ரயில், கன்னியாகுமரியையும் திப்ரூகர் (அசாம்) இணைக்கிறது.
மேலும் , கன்யாகுமாரி வரலாறு  அறிந்துகொள்ள காணொளியினை அழுத்துங்கள் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

0 comments:

Post a Comment