சிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
ஆசிரியர்: உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் சார்!
மாணவனின் தந்தை: அட! அப்படி மணி மணியா எழுதறானா?
ஆசிரியர்: பார்த்துக்கிட்டே இருக்கலாம்னுதான் நான் சொன்னேன்...! எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கமுடியும்...!

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
டாக்டர்என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
ஒருவர்பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?
மற்றவர்ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
போலீஸ்: காணாமல் போன உங்கள் வேலைக்காரியோட அடையாளம் சொல்ல முடியுமா?
வீட்டுக்காரர்: மார்பில் ஒரு மச்சம் இருக்கும் சார்.

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
திருடன: சார் அந்த கோடி வீட்டு குப்புசாமியைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்...
போலீஸ்: ஏம்ப்பா...?
திருடன்: அவர் வீட்டில திருடும் போது ரொம்பத் தொந்தரவு கொடுக்கிறார்..

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
போலீஸ்: என்னய்யா இது அநியாயம்... சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே...
வந்தவர்: என் மாமனாரும் மாமியாரும் வந்து ஆறு மாதம் ஆகிறது... வேறு என்ன செய்ய...?

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...? 

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...!!!!!

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரி
மனைவி:கேட்டியளேமகளுக்கு யாரையாவது ஏச வேணும்  அடிக்க வேணும்  போல இருக்குதாம்.
கணவன்:அடடே!அவளுக்கு கலியாணஆசை வந்திட்டுது எண்டு சொல்லிறாய்.

🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

1 comments: