அவள் மெல்லச் சிரித்தாள்

உலகம் உண்மையற்றது என்றா! -இல்லை,
பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா!!-இல்லை, 
கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா!!!-இல்லை, 
புண்ணிய மென்பது பூச்சாண்டி என்றா!!!!-இல்லை,
தம்பிக் காரன்  தன்னலத்தானென்றா!!!!!-இல்லை, 
 நம்பி  யேமாந்தவன் நான் என்றா!!!!!!
மரணப்படுக்கையி லுமவள்
மெல்லச் சிரித்தாள்.
-செல்லத்துரை,மனுவேந்தன் 
.

0 comments:

Post a Comment