எலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்உடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது, ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுவே எலும்பு தேய்மானத்திற்கும் முக்கிய காரணம் ஆகும்.
உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. வயது மற்றும் உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு, சரியான உணவு முறையை கடைபிடித்தால் எலும்பு தேய்மானத்தை குணப்படுத்த முடியும்.
எலும்பு தேய்மானம் அறிகுறி மற்றும் அதன் காரணங்கள் என்ன?
பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதாவது பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் எடை அதிகம் இருத்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

எலும்பு தேய்மானம் குணமாக கால்சியம் மிகவும் அவசியம்:-
இந்த கால்சியம் சத்துக்கள் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளில், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளில் மற்றும் இறைச்சி உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது.

எலும்பு தேய்மானம் குணமாக காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி உணவுகள்:-
உளுத்தம் பருப்பு, கொள்ளு, ராகி, முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் கீரை வகைகளில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இவை அனைத்து எலும்பும் வலுவடைய உதவும் மற்றும் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும்.
பெண்களுக்கு மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகின்றனர்.
அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும்.
மெனோபாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.

எலும்பு தேய்மானம் குணமாக சித்த வைத்தியம் – வெந்தயம்:-
இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கு (osteoporosis treatment in tamil) வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

எலும்பு தேய்மானம் குணமாக சித்த வைத்தியம் வெந்தயக் கீரை பௌடர்:
வெந்தயக் கீரை, மாதுளை ஓடு, வில்வ ஓடு மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு தேய்மானத்தை குணப்படுத்திவிடலாம்.

எலும்பு தேய்மானம் குணமாக சித்த வைத்திய பொடி:
இந்த எலும்பு தேய்மானம் குணமாக (osteoporosis treatment in tamil) ஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடிசெய்து, இதனுடன் குங்கிலியம் பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து இவற்றை தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிடு வர இந்த எலும்பு தேய்மானம் சரியாகும்.

எலும்பு தேய்மானம் சரியாக சித்த வைத்தியம்:
இந்த எலும்பு தேய்மானம் சரியாக (osteoporosis treatment in tamil) ஆல மர மொட்டுக்களை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் எலும்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

எலும்பு தேய்மானம் சரியாக சித்த வைத்தியம்:
இந்த எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

எலும்பு தேய்மானம் குணமாக சித்த வைத்தியம்:
அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.

எலும்பு தேய்மானம் சரியாக சித்த வைத்தியம்:
அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.

எலும்பு தேய்மானம் குணமாக சித்த வைத்தியம்:
அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.

எலும்பு தேய்மானம் சரியாக சித்த வைத்தியம்:
அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

0 comments:

Post a Comment