சிரிக்க,,,நகைச்சுவை.

""பரீட்சைக்கும் விஷப் பரீட்சைக்கும்
என்ன வித்தியாசம்?''
""என்கிட்டே கேட்காதே... சாதாரண பரீட்சையே எனக்கு ஒரு விஷப் பரீட்சைதான்''
***********************
கணவன்: ""உனக்கு வாக்கப்பட்டிருப்பதைவிட, ஒரு கழுதைக்கு வாக்கப்பட்டிருக்கலாம்..?''
மனைவி: ""நேற்று வரைக்கும் என்னை "ஏய் கழுதை'ன்னுதானே சொன்னீங்க..!
கணவன்: ""?!..?!..?!''
**********************
""வெயில் வாட்டி எடுக்கிறது. அடிக்கடி குடை வாங்க வேண்டியிருக்கிறது.''
""ஏன் ஒரு தடவை வாங்கினால் போதாதா?''
""நான் இரவல் வாங்குவதைப் பற்றிச் சொன்னேன்!''
**********************
மனைவி:""என் ஜாதகப்படி எனக்கு அறிவு அதிகமாம்.''
கணவன்:""இப்பப் புரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்பறதில்லைனு!''
**********************
""தலைவர் ஏன் சாக்கடையில் விழுந்துட்டேன், சாக்கடையில் விழுந்துட்டேன்னு புலம்பறார்?''
""அவர் அரசியலில் இறங்கியதற்காக வருத்தப்படறார்.''
**********************
மாமியார்: நேற்று, நான் போன சினிமாவைப் பார்த்து, "சிரிச்சு சிரிச்சு' பாதி உயிர் போயிடுச்சு!'
மருமகள்: ""அப்படியா அத்தை! அந்தப் படத்தை, இன்னிக்கும் ஒரு தடவைபோய் கண்டிப்பாகப் பார்த்துட்டு வாங்க..!
**********************
""சார், மணி பன்னிரண்டு ஆவுது... கடையைச் சாத்தலாமா?''
""சரி, சரி... எதுக்கும் குவிஞ்சு கிடக்கிற அந்தப் புடவைக் குவியலுக்குள்ளே லேடீஸ் யாராவது மாட்டிக்கிட்டிருக்காங்களான்னு ஒரு தரம் நல்லாப் பார்த்துடு!''
**********************
மனைவி: ட்ரெயின் கிளம்பிடுச்சு... ஏங்க... அந்த ராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா?
கணவன்: நாம போறதோ ஹனிமூன்... எதுக்கு ராமாயண புத்தகம்?
மனைவி: அதுலதான் ட்ரெயின் டிக்கட்டை வச்சிருந்தேன்.
*********************
பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதைப் பார்த்தார்.
ஆசிரியர்: உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
மாணவன்: நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பணுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
*********************
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
*************************
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"
மற்றவள்: "ஏன் கேட்குறே?"
முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
********************
"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு வில்லி"
"
எப்படி?"
"
பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை சமயத்தில வில்லி"
********************
ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"
மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளைவெறுப்பேத்துவேன்."
*******************

நண்பன்       :    சத்து   குறைஞ்சுடுச்சுனு  டாக்டரிடம்  போனேண்டா
 .நண்பன்   :    என்னாச்சுடா 
நண்பன்       :    சொத்து   குறைஞ்ச்சுடுச்சுடா .


******************************

0 comments:

Post a Comment