"தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 24

"FOOD HABITS OF TAMILS" PART: 24 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]

 


கறியை பற்றி நாம் மேலதிகமான விபரங்களை தேடினால், கறியில் பல வடிவங்கள் இன்று இருப்பதை காண்கிறோம். உதாரணமாக, இந்திய கறி, தாய் சிவப்பு பச்சை கறி, மலேசியன் கறி, சீனா கறி, ஜப்பான் கறி, கரீபியன் கறி, இலங்கைக் கறி, மொரிஷியன் கறி, பங்களாதேஷி கறி , பாக்கிஸ்தான் பால்டி கறி, பர்மிய கறி இப்படி பல இன்று உள்ளன, ஏன்  பிரிட்டிஷ் கறி கூட இன்று உண்டு. அப்படி என்றால், எது உண்மையானது? இது ஒரு தீர்க்கமான வினாவாக இன்று காணப்படுகிறது. நீங்கள் ஆக்ஸ்போர்டு அகராதியை கொஞ்சம் பார்த்தீர்கள் என்றால், தமிழ் சொல் கறி, பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் நாட்டுக் குடிமக்கள் மூலம் ஆங்கில மொழிக்கு வந்தது தெரிய வருகிறது. அப்படியே கறி பிரியர்களின் இன்னும் ஒரு உணவின் ஆங்கில பெயரான பப்படமும் தமிழ் பெயரே, அதேபோல ஆங்கில பெயரான ரசம், கஞ்சி, மாங்காய் எல்லாம் தமிழ்ப் பெயரே.

 

தமிழர்கள் கருமிளகை தமது கறியை மசாலா ஆக்க பாவித்தார்கள். ரோமானியர்கள், கிரேக்கர்கள், சீனர்கள், அரேபியர்கள் [இவர்கள் எல்லோரையும் கூட்டாக ஜவனர்கள் என அழைக்கப் பட்டார்கள்] மற்றும் ஆபிரிக்கர்களுக்கு தமது மசாலா அல்லது நறுமணப் பொருள்களை கிருஸ்துக்கு முன்பே இருந்து பல நுறு ஆண்டுகளாக ஏற்றுமதி செய்தார்கள் என வரலாறு கூறுகிறது. மேலும் 520 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பிரதேசங்களுக்கு போர்த்துக்கேயர் மிளகாயை முதல் முதல் அறிமுகப்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியே பல 130 மரக்கறிகளையும், உதாரணமாக, கோதுமை, தக்காளி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், மற்றும் பூசணி போன்றவற்றையும் அறிமுகப் படுத்தினார்கள். சுருக்கமாக எத்தனை விதமான கறிகள் இருந்தாலும், மூல கறி - தமிழ் கறி ஆகும். அதைத்தான் நாம் பகுதி 23 இல்  2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல் மூலம் பார்த்தோம்   

 


அசைவ உணவுகளான -மீன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மான்கறி ,போன்ற உணவுகளின் குறிப்புகள் சங்க பாடல்களில் புதைந்து கிடைக்கின்றன. என்றாலும் நீரும் நிலமும் சேர்ந்து உண்டாக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தன. அதாவது சைவ உணவுகளான - சோறும் மற்றும் காய்கறி உணவுக்கும் ஆகும். எனினும் சைவ, அசைவ உணவுகளுக் கிடையில் வேறுபாடு ஒன்றும் பெரிதாக அங்கு எடுத்துக் காட்டப் படவில்லை. அது மட்டும் அல்ல, பெரும் பாலான குறிப்புகளில் இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிடுவதாகவே உள்ளன. இதை அங்கு கண்டு எடுக்கப் பட்ட புதிய கற்காலம், பெருங்கற்காலம் [Neolithic and megalithic] சார்ந்த தொல்பொருள் சான்றுகள் மேலும் உறுதிப் படுத்துகின்றன. அது மட்டும் அல்ல, வேட்டை யாடும் கருவிகள், இறைச்சி வாட்டப் பட்டதை உறுதிப்படுத்தும் கருகிய எலும்புகள், எலும்புகளிலுள்ள மச்சை [marrow] அகற்றப் பட்டதற்கான அடையாளமாக, வெட்டப் பட்ட காயங்கள் உள்ள எலும்புகள் போன்றவையும் அங்கு கண்டு எடுக்கப் பட்டன. இது சமயம் அவர்களின் உணவை கட்டுப் படுத்த வில்லை என்றும் அல்லது அவர்களின் உணவு பழக்கங்களில் சமயம் ஈடுபடவில்லை என்றும் காட்டுகிறது. தமிழர்கள் மாட்டிறைச்சியை ஒரு உணவாக சாப்பிட்டதில் இருந்து, மாட்டை [பசுவை] தெய்வமாக்கி அதன் இறைச்சியை சாப்பாட்டில் இருந்து தவிர்த்தது, பொதுவாக வரலாற்று இடைக் காலத்தில், தமிழரின் சமயம், இந்து சமயத்திற்குள் உள்வாங்கப் பட்டதை தொடர்ந்து மாறிய சூழ்நிலையில் ஏற்பட்டது ஆகும்.

 

கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன் [கூத்தன்] ஒருவன் பரிசு பெற்று வந்தான். அவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும் வகையில் தனது அனுபவத்தை பகிருகையில், அந்த கவிஞன் வரைந்து காட்டுவது போல மிக நுணுக்கமாக ஒவ்வொரு விவரங்களையும் வரிசைக் கிரமமாக பாடினான். அதில், அவன் மாறுபட்ட இயற்கை வனப்புடைய நிலங்களுக் கூடாக காஞ்சிபுரத்தை நோக்கி போகையில், அந்த ஒவ்வொரு நிலத்திலும் வாழும் பண்டைய தமிழரின் வாழ்வை பற்றியும் அவர்களின் உணவு பழக்கங்கள் பற்றியும், தான் பாடிய சிறப்பு மிக்க பெரும்பாணாற்றுப்படையில் கூறிவைத்துள்ளான். இதில் சமையல் குறிப்புகளை அல்லது சேர்மனங்களைப் பற்றி விபரமாக கூறாவிட்டாலும், அந்த பண்டைய கால சமையல் பண்பாடு [கலாச்சாரம்] பற்றிய ஏராளமான தகவல்களை அங்கு அறியக் கூடியதாக உள்ளது.

 


விசாலமான காட்டு வழியினூடாக சங்க கால கவிஞன் போகும் போது அங்கு ஈந்தின் [ஈச்சஞ் செடி] இலையாலே வேயப்பட்ட கூரை குடிசைகளை காண்கிறான். ஈந்தின் இலை முள் போன்று இருக்கும். எனவே கூரையில் அணிலும் எலியும் ஓடாமல் இருக்க ஈந்துக் குரம்பை குடிசைகளை பாலை நிலத்தில் வாழும் வேடுவர் பயன் படுத்தினர் .[ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை-88]. இப்படிப் பட்ட குடிசையில் வாழும் வேட்டுவப் பெண்களின் அன்றாடச் செயல்களை அழகுற வருணிக்கும் கவிஞன், அவர்களின் செயல்களை கண்ணாற் காண்பது போல, வரிகள் 92-94, இல் சித்திரிக்கிறான். இரும்புப் பூண் பிடித்த வலிமையான பாரையால் நிலத்தை புழுதி பறக்கக் கிண்டி, அந்தக் கரம்பு நிலப் [பயிரிடப்படாத மேட்டு நிலப்] புழுதியை அளைந்து [துழாவி] அதில் கிடை க்கும் மென்மையான புல்லரிசியை [Grain of cluster grass] எடுத்து, பின்னர்க் குடிசைக்குத் திரும்பி, குடிசை முன்றிலில் விளாமர நிழலில் நிலத்திலேயே உள்ள பாறை உரலில் அந்த அரிசியை இட்டு, உலக்கையால் குற்றிக் கொழித்தெடுப்பர் என்கிறார். [உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி, நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றி யர், பார்வை யாத்த பறைதாள் விளவின், நீழல் முன்றில் நிலவுரல் பெய்து].


பின்னர் பாலை நில மகளிர், கிணற்றில் ஊறியிருக்கின்ற உவர்நீரை எடுத்து வந்து, பழைய விளிம்பு உடைந்து போன வாயை உடைய பானையில் ஊற்றி, உடைந்த அடுப்பில் வைத்து, அரியாது சமைத்த சோற்றை, காய்ந்த மாமிசத்துடன் சேர்த்து உண்பர் என்கிறார். [குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல், 97-100]. நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அவன் செந் நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன், நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம். என்று சொன்னாலே போதுமானது. நீங்கள் தெய்வத்திற்குப் பலியிடுமாறு போலத் தேக்கிலையிலே மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள் என்று மேலும் கவிஞன் அறிவுரை வழங்கினான். [செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்,பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்,103-105 ].

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 25 தொடரும்

 👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக-soon 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:  

 

"FOOD HABITS OF TAMILS" PART: 24

"Food Habits of Ancient Sangam Tamils continuing"

 


If you go more details about curry,  there are many versions now available in the market and the curry lovers are confused. It began as Indian Curry and then we have Thai red and green curries, Malaysian Curry, Chinese Curry, Japanese Curry, Caribbean Curry, Sri Lankan Curry, Mauritian Curry, Bangladeshi Curry, Pakistan Balti Curry, Burmese Curry to name a few. And we now have the British Curry too. So, Which one is authentic? A  billion dollars question!. A quick check in the Oxford dictionary shows that the ‘Tamil’ word curry came into the English language via Portuguese in the 16th century.  Another popular item with curry lovers, Poppadom is a Tamil word too. Rasam, Congee [கஞ்சி], and Mango are all Tamil words in the English language too. An article “How India changed the English language” appeared on the culture section of BBC’s website on the 22nd of June 2015, had confirmed this fact as well.

 

The Tamils were using black pepper to spice up their curry and the Romans, Greek, Chinese, Arabs (collectively referred to as Yavanas in these ancient Tamil works of literature) and Africans were trading with the Tamils for the spices for a long. However nearly 520 years ago, in 1498, just after the medieval period, the Portuguese came to these Tamils with chili. The Portuguese who brought chilies, also introduced at least 130 other vegetables and plants including wheat, tomatoes, potatoes, cassava, beetroot, and pumpkins to name a few. While there are so many versions of curries from different countries, the mother of all is the Tamil Curry. It is the traditional heritage of the Tamils for more than 2000 years as mentioned in part 22.

 

Eating of fish, mutton, beef, venison, meat in general is found in many references in the ancient Tamil literature. Though, emphasis has been given for food produced with the combination of water and earth and thus, rice eating or vegetarian food. It is evident that a differentiation between vegetarian and non - vegetarian food was not made in those days. Surprisingly, there have been many references which reveal about mixing of both vegetarian and non - vegetarian food together and taking by the ancient Tamils. There are many archaeological evidences found at Neolithic and megalithic burials prove the mixed food habit of the ancient Tamils. Also found different hunting implements, charred bone showing roasting of meat, cut marks on the bones proving the extraction of marrow from them etc. This again goes to prove that religious restriction was not there or religion did not play any role in the food habits. The transition from beef - eating to cow deification leading to banning of the former must have taken place during the complete change over of the social factors with the strong religious and political conditions and compulsions during the Medieval period, when, the society should have been conducive and favourable enough to accept such change.

 

In one of the Sangam poem  Perumpanattuppadai [பெரும்பாணாற்றுப்படை], the poet gives graphic details about the life of ancient Tamils and their food habits as the bards travel through various landscapes on the way to the capital city Kanchipuram. There are no detailed recipes in these poems, but they provide abundant information of the culinary culture of the time. As the bards go through the spacious forest paths, there are huts with roofs made of thatched leaves of eenthu (dates) palms [ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குர ம்பை]. The women of these huts dig the ground with spades with caps of iron and raise the dust of black - soiled barren lands and take out the soft rice grains stored in the ground [உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி, நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்]. They pound this rice with ulakkai (pestles) short and strong in urals (mortars) made in the ground. They draw water from the wells and add to the un-sifted rice along with white meat in an old pot with a broken rim on a broken stove [நீழல் முன்றில் நில உரல் பெய்து, குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்]. The minstrel advices the panars [minstrel] that if they say they are the subjects of the lord of the hills who wears war anklets on his legs, the forest women will feed them abundant food served on teak leaves [செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும், பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்].

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 25 WILL FOLLOW

0 comments:

Post a Comment