குறளோடு கவி ,"சமாதானம்"



குறளோடு கவிபாடு / குறள் 472"

 

"செய்ய முடிந்தது எதுவென அறிந்து

பாதை சரியாக தெரிந்து எடுத்து

வலிமை கொண்ட நோக்கம் இருந்தால்

சவால்கள் ஒன்றும் பெரிதாக இருக்காது

உறுதி கொண்டவருக்கு தடையும் இருக்காது!"

 

"சந்தேகம் சச்சரவு முகத்தில் தோன்றின்

தடைகள் எழலாம் சாதிப்பு குறையலாம்

பாதை தெளிவாகி பார்வை வலிமையானால்

வழியில் என்ன குறுக்கீடு வந்தாலும்

உயரத்தை அடைந்து உலகைக் கவரலாம்!"

⇔⇔⇔⇔⇔⇔⇔ 

 

"சமாதானம்"

[அந்தாதிக் கவிதை]

 

"சமாதானம் தொலைத்த புத்தரின் பக்தர்களே

பத்தர்கள் என்பது காவி உடுப்பதுவா?

உடுத்த காவியின் பொருள் தெரியமா?

தெரியாத உண்மைகளை தேடி உணராமல்

உணர்ந்த மக்களை போற்றி வாழ்த்தாமல்

வாழ்த்து பாடி மக்களை ஏமாற்றாதே?

ஏமாற்றி குழப்பி துவேசம் பரப்பி

பரப்பிய பொய்யில் மனிதத்தைக்  கொல்லாதே!

கொல்லாமல் இருப்பதுவே புத்தனின் சமாதானம்"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment