"தமிழரின் உணவு பழக்கங்கள்"-பகுதி: 22

 / "FOOD HABITS OF TAMILS" PART: 22 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" [தமிழிலும் ஆங்கிலத்திலும்  / In English and Tamil]

 


கரிய சட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சங்க காலத்தில் சுடப்பட்ட நிகழ்வை பெரும்பாணாற்றுப்படை, வரிகள், 377-378 மூலம் நாம் அறிகிறோம். "கூவியர் பாகொடு பிடித்த, இழை சூழ் வட்டம் பால் கலந்த வை போல்" என்ற வரிகள் அதை விளக்குகின்றன. உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா [Dr K.T. Achaya] தனது  "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food (all published by Oxford University Press, India)" என்ற புத்தகங்களில் தோசை, வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார். எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்கிறார். கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே [Sivakoti Acharya's Vaddaradhane] என்னும் பழமையான சமஸ்கிருத, கன்னட நூலில், இட்டலியைஇட்டலிகே' ['iddalige'] என குறிக்கப் பட்டுள்ளது. அதில் இருந்தே இட்டலி என்ற சொல் பிறந்தது என்கிறார். ஆனால், இந்த  இட்டலிகே, உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப் பட்டவை ஆகும். மேலும் இது புளிக்க வைக்கப் படவில்லை. மேலும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்ற ஒரு பிரமச்சாரிக்கு உபசாரம் செய்த 18 உணவுகளில் ஒன்றாக இது குறிக்கப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து கி பி 1130 இல் எழுதப்பட்ட மற்றொரு சமஸ்கிருத, கன்னட நூலான, மனசொல்லசாவில் (Manasollasa)  'இட்டரிக்க' என குறிக்கப் பட்டுள்ளது. இதுவும் உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப் பட்டவை ஆகும்இது சிறு உருண்டைகளாக, மிளகு தூள், சீரகத் தூள், பெருங்காயம் போன்றவற்றால் வாசனைப்  படுத்தப் பட்டன என்கிறது. என்றாலும் இன்று இட்டலி செய்யும் முறைகளான உளுந்துடன் தீட்டப் படாத அரிசி, நீண்ட நேரத்திற்கு கலவையை புளிக்க வைத்தல், நீராவியில் முழுமையாக அவித்தல் ஆகிய இந்த மூன்று முறையும் அங்கு காணப் படவில்லை. கி பி 1250 இற்கு பின்பு தான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடை முறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார்.


சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளருமான  மற்றும் சீன காலவரிசையாளருமான சுவான்சாங் [யுவான் சுவாங் / Xuang Zang], கி பி 700 ஆண்டு வரை, இந்தியர்  நீராவி சமையலை அறிந்து இருக்க வில்லை என்று மிக அழுத்தம் திருத்தமாக குறிப் பிட்டுள்ளார். கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த யுவான் சுவாங் காஷ்மீரம், பாடலி புத்திரம் முதலான முக்கிய பௌத்தத் தலங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக் கழகத்திலும் தங்கிப் பயின்றுள்ளார். பின்னர் அவர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று நாம் எல்லோரும் உண்ணும் இட்டலி உண்மையில் இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும், அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த தென் இந்தியா அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது, இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையை உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா [Dr K.T. Achaya]  முன் வைக்கிறார். மேலும் இது இந்தோனேஷியாவில் கேட்லி [Kedli ] என அப்போது அழைக்கப் பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் சங்க காலத்தில் செய்யப்பட்ட தோசை அதிகமாக அரிசியை மட்டுமே பாவிக்கப் பட்டதாக இருந்ததாகவும், அது கள்ளு முதலியவற்றால் புளிக்க வைக்கப் பட்டது என்றும், கட்டாயம் உளுந்து பாவிக்கப் படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். மேலும் சுவாரசியமான விடயம் என்ன வென்றால், மனசொல்லசாவில் குறிக்கப் பட்ட தோசக [“dhosaka”], முற்றிலும் உளுந்தில் செய்யப் பட்டது. அரிசி அங்கு பாவிக்கப் படவே இல்லை. இந்த தோசையானது தோன்றிய இடம் தோராயமாக  கர்நாடக மாநிலம் மைசூர் தான் என்றும் அதுவும் உடுப்பியில் என்றே கருதப் படுகிறது. இடியப்பமும் அப்பமும் காழியர்,கூவியர்களால் [காழியர் = பிட்டு வாணிகர். கூவியர் = அப்பம் சுடு வோர். பாசவர் = வெற்றிலை விற்பவர்] கடற்கரை வீதிகளில் விற்கப் பட்டதாக கூறுகிறார். இது பிந்திய சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலையில் விவரிக்கப்பட்டுள்ளது.

"பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர், கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர்", என்ற கச்சிமாநகர் புக்க காதை, மணிமேகலை 31,32 ஆவது வரி - பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணி கரும் - என கூறுகிறது. புளியோதரை எனப்படும் ஒரு புளி சாதம் பற்றியும் புளி, நெல்லிக்காய் சேர்ந்த ஒரு வகை பானம் பற்றியும் அங்கு விரிவாக சொல்லப் பட்டுள்ளது. கீரை, பூசனிக்காய், முருங்கைக்காய், மற்றும் மூன்று பருப்பு வகைகள் - உளுந்து, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு - அங்கு பரவலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. அதே போல அரிசி, தயிர், தயிரில் நனைத்த வடை போன்றவையும் ஆகும். மற்றும் முக்கனிகளான மா, பலா, வாழையும் அவர்களின் உணவில் தாராளமாக இருந்தன. அரசியல் சூழல் காரணமாக, ஒரே இடத்தில் பெருந்தொகையினர் பல்லாண்டுகள் வாழ நேரிட்ட போதுநகரம்ஏற்பட்டது. இத்தகைய நகரங்களில் பல, காலப்போக்கில் அழிந்து விட்டன. என்றாலும்  சங்க இலக்கியமானமதுரைக் காஞ்சிசித்திரிக்கும் மதுரை நகரம் இரண்டாயிரமாண்டுகளைக் கடந்த பின்னரும், தனக்கான அடையாளத்துடன் இன்றும் உயிர்த் துடிப்புடன் விளங்குகிறது. இரவு வேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய காட்சி ஒன்றை, வரிகள், 624  -627:


"நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை, அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம், கவவொடு பிடித்த வகை அமை மோதகம்தீஞ் சேற்றுக் கூவியர்என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த விவரிப்பில்  ‘உணவு வணிகர்குறித்த குறிப்புகள் முக்கியமானவை. சங்க காலத்தில் நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய இனிப்பு அடை [அடை: அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் அகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊறவைத்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் அடை. கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து, அடையின் மீதுத் தூவிச் சமைப்பர். சம்பிரதாயமாக வெல்லம் அடையுடன் தொட்டுக் கொள்ளப்பட்டது]

, காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம் [கொழுக்கட்டை] விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று இந்த பாடல் வரிகள் மூலம் அறிய முடிகின்றது.

 

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

 

பகுதி : 23 தொடரும்

 👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக-soon 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:  

 

"FOOD HABITS OF TAMILS" PART: 22 "

Food Habits of Ancient Sangam Tamils continuing"

 

In Perumpanattuppadai, lines 377- 378, We find some details about Appam as: " .... in the shade, appear like round appam made with threads of rice and sugar syrup lying in milk in the dark, wide bowls of vendors who call out prices.... " Eminent food scientist Dr K.T. Achaya. His books — Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food (all published by Oxford University Press, India), he points out authoritatively that while Dosai and Vadai have a hoary two - thousand - year history in Tamil country, Idli is a foreign import. He notes that the word Idli, might derive from ‘iddalige’, first mentioned in a Kannada work “Vaddaradhane” of Sivakotyacharya in 920 AD as iddalige, but the indications are that this was made from an urad dhal batter only, which was neither fermented, nor steamed to fluffiness. It figures as one of the eighteen items served to a brahmachari [unmarried man] who visits the home of a lady. In the subsequent Sanskrit Manasollasa (1130 AD), It is mentioned as iddarika, but again made from urad dhal flour only. It actually describes iddarika as made of fine urad flour fashioned into small balls and then spiced with pepper powder, cumin powder and asafoetida. In Karnataka, a century later, the idli is described as being 'light, like coins of high value.' But the three elements of modern Idli making are missing in all these references: use of rice grits along with urad dal, the long fermentation of the mix, and steaming the batter to fluffiness. Achaya contends that only after 1250 AD are there references to what seem to be idli as we know them.

The Chinese chronicler, a Buddhist monk, scholar, traveller, and translator Xuang Zang categorically stated that in 7th century AD Indians did not know the use of the steamer. Before he leaves India he travelled to Andhradesa & later proceeded to Kanchi, the imperial capital of Pallavas, and a strong centre of Buddhism in Tamil Nadu.

There is a suggestions that the Idli was developed in Indonesia, a part of which was then ruled by Hindu kings like the Pallava, Gupta, The Pala Empire [பாலப் பேரரசு 750-1162 CE was an imperial power during the post-classical period in the Indian subcontinent, which originated in the region of Bengal] and Chola in the succeeding centuries up to the 12th century. It is called Kedli there. Achaya writes that the cooks who accompanied the Kings during 800 -1200 AD, May have returned home with the recipe, and there by brought fermentation and steaming methods to South India. Also he point out that Dosai during the Sangam period was probably made only out of rice, is made out of fermented rice batter, but the fermenting agents range from toddy to yeast, never urad dal. And even more interestingly, the  “dhosaka” mentioned in Manasollasa, the Chalukyan king Someswara’s massive encyclopedia about daily life in 12th century Karnataka, was made only of dhals - no rice at all. It is generally believed that dosa had its roots in the Temple Streets of Udupi, Karnataka.

Dr K.T. Achaya, further mentioned that both idiyappam and appam were dishes sold by kaazhiyar [காழியர்] and kuuviyar [கூவியர்] - vendors of snack foods on the seashore; it is described in post-Sangam poems such as Silappathikaram and manimekalai, for example in Manimekalai, It says, fisher folk who sells many fishes, salter who sells many heap of silvery crystalline salt, along with toddy sellers, pittu traders and appam traders were there as:

"பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர், கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர்", where, kaazhiyar means "Dealer in the rice-preparation piṭṭu" and kuuviyar means, "those who sell Appam [rice pancakes]". Tamarind rice figures extensively, as also a drink made with tamarind and nellikai (gooseberry). Leafy greens (keerai), gourds, drumsticks and the three pulses were widely used. So were rice and curd, and vadai soaked in curds as well as  the three great Tamil fruits were of course, mango, jackfruit and bananas.

Due to the political environment, the 'city' was formed when large numbers of people had to live in one place for many years. Many of these cities have perished over time. However, the city of Madurai, depicted in the Sangam literature ' Mathuraikkanchi [மதுரைக் காஞ்சி]', is still vibrant with its own identity even after two thousand years. we come to know from that mothakam [மோதகம்] being sold on the streets of Madurai along with Adai, which is made of lentils and rice, a type of Dosai or pancake as per Lines 624-627:

"vendors who sell delicate adais that are like honeycombs with fine lines and 'mothakams' that are made on the palms pressing fingers, with fillings of sugar syrup," ["நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை, அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம், கவவொடு பிடித்த வகை அமை மோதகம்தீஞ் சேற்றுக் கூவியர்"].

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

PART : 23 WILL FOLLOW

0 comments:

Post a Comment