தொழில்நுட்ப செய்திகள்

நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்தது.
 இந்நிலையில் இந்த மாத இறுதியில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nokia X எனும் இக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் மக்கள் மத்தியில் நொக்கியா கைப்பேசிகள் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.
ஹவார்ட் கல்லூரியின் பொறியியல் மற்றும் பிரயோக விஞ்ஞான பிரிவு, ஹவார்ட் பல்கலைக்கழகத்திலுள்ள உயிரியல் ஈர்ப்பு பொறியியல் பகுதியான Wyss நிறுவனம் என்பன இணைந்து நவீன ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.
Termes என அழைக்கப்படும் இந்த ரோபோவானது சுயமாகவே கட்டுமாணப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ எதிர்காலத்தில் பூமியிலும், விண்வெளிகளிலும் மிகவும் பயன்மிக்கதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு SD Cardஅறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில் தற்போது Super Fast வேகம் கொண்டதும் 64GB சேமிப்பு வசதி கொண்டதுமான UHS-II U3 Extreme Pro SD Card இனை SanDisk நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
250MB/sec வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியதும் 4K Ultra HDமற்றும் 3வீடியோ ரெகார்டிங் செய்யக்கூடியதாகவும் இருக்கும் இச்சாதனத்தின் விலையானது 300 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இவை இந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் வைரஸ் பிரச்னை வந்துவிடும்.
முக்கியமாக கம்ப்யூட்டரில் வைத்திருக்கும் ஆவணங்களை கோப்புகளை பதம் பார்த்துவிடும்.

ஒரு சிலர் எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு ஆபிஸ் டாக்குமெண்ட்டோ அல்லது ஏதேனும் ஒரு படமோ இப்படி உருவாக்கிய ஆவணத்தை சேமிக்கும்பொழுது தானாகவே டீபால்டாக மை பிச்சர் போல்டர், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேமிக்கப்படும்.
பிரச்னை என்னவென்றால் இவ்வாறுக C டிரைவில் சேமிக்கப்படும் கோப்புகள் பாதுகாப்புக்கு உகந்ததல்ல..என்பதுதான். எப்படியென்றால் ஏதாவது ஒரு சமயத்தில் உங்களுடைய கம்ப்யூட்டரை பார்மட் செய்திடும்பொழுது, C டிரைவிலுள்ள கோப்புகள் அனைத்துமே அழிந்துபோய்விடும்.
பார்மட் செய்திட்ட பிறகு அந்த கோப்புகளை மீண்டும் எடுக்கவே முடியாது.
அதுசரி.. மைடாக்குமெண்ட், மைபிக்சர், மை ஸ்கேன், மை மியூசிக், மை வீடியோஸ் (My Document, My Picture, My Scan, My Music, My Videos) போன்ற போல்டர்களெல்லாம் சி டிரைவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
அதை உங்களுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு மற்ற டிரைவ்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக My documents போல்டரை நீங்கள் சி டிரைவிலிருந்து D டிரைவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வழிமுறை:
முதலில் My Documents போல்டரின் மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்
டார்கெட் என்ற இடத்தில் உங்களுக்கு எந்த டிரைவில் போல்டர் இடம்பெற வேண்டுமோ அதை உள்ளீடு செய்யவும்.
பிறகு Move என்பதைக் கொடுத்தால், அந்த போல்டரானது D டிரைவிற்கு மூவ் ஆகிவிடும்.
இனி நீங்கள் சேமிக்கும் எந்த ஒரு டாக்குமெண்டும் தானாகவே டி டிரைவில் உள்ள போல்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.
சாதாரண மொபைல் போன் முதல் தற்பொழுது பிரபலமாகியுள்ள ஸ்மார்ட்போன்கள் வரை எப்.எம். ரேடியோ வசதி இல்லாத மொபைல்களே இல்லை.
மொபைல்கள் வாங்கும்போது, அதனுடைய மேனுவல் கைடில் அதில் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பார்கள். அதில் FM Radio – RDS என்ற ஒரு குறிப்பையும் பார்க்கலாம்.
எப்.எம். ரேடியோ என்றால் தெரியும். அதென்ன RDS?
RDS என்பது Radio Data Service என்பதன் சுருக்கம். இந்த தகவல்தொழில்நுட்ப நெறிமுறையானது, எப்.எம்.ரேடியோ ஒலிப்பரப்படும்பொழுது, அந்த ரேடியோ நிலையம் குறித்த தகவல்கள் மற்றும் அப்பொழுது ஒலிப்பரப்பபடும் நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகளை டேட்டாவாக அனுப்ப பயன்படும் நுட்பமாகும்.
ஒரு எப்.எம். ரேடியோவை கேட்கும்பொழுது, அந்த நிலைய அறிவிப்பாளர், அந்நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகள், ஒலிப்பரப்படும் ரேடியோவின் பெயரை குறிப்பிடும்வரை நமக்கு தெரியாது.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எந்த ஒரு FM Radio நிகழ்ச்சியாக இருந்தாலும், நீங்கள் வைத்திருக்கும் செல்போனில், அதுகுறித்த தகவல்கள் Data வாக உங்களுக்கு காட்டப்படும்.
செல்போன் மட்டுமல்ல.. கார் ஸ்டீரியோக்களிலும் இதுபோன்ற டேட்டாக்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். செல்போனில் RDS வசதியை பெற செட்டிங்சில் RDS Enable செய்திருக்க வேண்டும். அவ்வாறு எனேபில் செய்திருந்தால் எப்.எம்.ரேடியோவில் ஒலிப்பரப்படும் நிகழ்ச்சி, நேரம், நிலையத்தின் பெயர் போன்ற டேட்டாக்களை செல்போனிலேயே தெரிந்துகொள்ளலாம்.
இந்த வசதியுள்ள செல்போன் மற்றும் கார் ஸ்டீரியோக்களில் எப்.எம். ரேடியோவின் அலைவரிசை எல்லையை கடக்கும்பொழுது, அதில் ஒலிப்பரப்படும் அதே நிகழ்ச்சி வேறொரு எப்.எம்.மில் ஒலிப்பரபப்பாகிக் கொண்டிருந்தால் தானாகவே அந்நிகழ்ச்சிக்கு மாறிவிடும். அவ்வாறு மாறுவதற்கும் RDS தொழில்நுட்பமே காரணம்.
ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படும்பொழுது, இடையே முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியானால், எந்த ஒரு அலைவரிசையில் ரேடியோ ஒலிப்பரப்பாகிக்கொண்டிருந்தாலும், அனைத்து அலைவரிசையிலும் அந்த முக்கியமான அறிவிப்பு ஒலிபரப்பாகும். இதற்கும் இந்த RDS தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.


0 comments:

Post a Comment