ஆராய்ச்சிச் செய்திகள்

ஆண்களை விட பெண்களுக்கே ரத்த அழுத்தத்தால் ஆபத்து அதிகம் :



ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வழிமுறைகளில் உள்ள குறிப்பிட்ட வேறுபாடுகள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தத் தகவல் வெளியானது.இதற்கு முன்னால் ரத்த அழுத்தம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகளும் ஒன்று என்றும் மருத்துவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் சார்லஸ் பெர்ராரியோ.
உண்மையில் அமெரிக்காவில் இதய நோய் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே விதமான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும் போது, இந்த முரண்பாடு எதனால்?” என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்ராரியோ.

ஆண்களும், பெண்களுமாக 100 பேரை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக 30 முதல் 40 சதவீதம் பாதிப்புகள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

இதனால் பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் தரம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியம்என்று இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.
பாட்டு பாடும் குரங்குகள்: ஆய்வில் தகவல்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சீனா, லாவோ, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன் வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கின்றன.
தனது இணையை கவரவும், எல்லைகளை பிறருக்கு தெரியப்படுத்தவும், பிறரோடு தொடர்புகொள்வதற்கும் என்று பல விசயங்களுக்கு பாடல்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.
ஆய்வுக்கு 92 டூயட் பாடல்கள் உட்பட 400 பாடல் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அந்த பாடல்களை ஏறத்தாழ 53 வேறுபட்ட அலைவரிசைகளில் பிரித்து சோதனை செய்தனர். அதில் கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள் ஒரே மாதிரியான டி. என். . அமைப்பைச் கொண்டிருந்தன.
மேலும் 4 ரகமான தனித்தன்மை வாய்ந்த பாடல்களை அவை பாடுவதும் தெரிய வந்தது. குறிப்பாக வடக்கு வியட்நாம், சீனா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிப்பன்கள், தெற்கு பகுதியைச் சேர்ந்த கிப்பன்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மனித குரங்குகளிடமிருந்து பரவும் ‘வைரஸ்’ – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

விஞ்ஞானிகள் கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வில், ஆப்பிரிக்காவில் உள்ள மனித குரங்குகளிடம் இருந்து ஒரு வகை மலேரியா வைரஸ் கிருமிகள் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆப்பிரிக்காவில் உள்ள மனித குரங்குகளின் கழிவுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் புதிய வகையானபிளாஸ்மோடியம் விவாக்ஸ்’ (Plasmodium Vivax) கிருமி இருந்தது தெரியவந்தது. இந்த வைரஸ் கிருமியின் எண்ணிக்கை அடர்ந்த காட்டுக்குள் இருந்த குரங்குகள் மத்தியில் அதிகமாகவும் காணப்பட்டது.
இந்த நோய் கிருமி குறித்து ஆய்வை மேற்கொண்டபென்சில்வேனியா பல்கலைகழகத்தில்உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கும் போது, மனிதர்களின் உடலில் 5 வகை பிளாஸ்மோடியம் வைரஸ்கள் மலேரியாவை உருவாக்கும்.
அவற்றில்பி விவாக்ஸ்’ (P Vivax) எனப்படும் பிளாஸ்மோடியம் விவாக்ஸ் வைரஸ் கிருமி மூலம் சுற்றுலா பயணி ஒருவருக்கு, மலேரியா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.








0 comments:

Post a Comment