தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா?

முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.

தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள்.

ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும். அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும்.

மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்!!!!!!!

தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உன்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துன்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும். இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது.

இது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

இரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்னெயால் ச்மைக்கபட்ட உனவுகலை உன்டது.

ஆய்வு முடிவில் தேங்காய் எண்னெயில் செய்தவற்றை உன்ட குழுவினருக்கு நல்ல கொலஸ்டிரால் கணிசமாக அதிகரித்தது. ட்ரைகிளிசரைட்ஸும் குறைந்தது. அவர்கள் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைந்தது. மோசமான எல்டிஎல் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை (ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் கணிசமாக குறையும்).

அதை விட முக்கியமாக "வெஜிட்டபிள் ஆயிலில் இருந்து எடுத்த எண்னெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் கொலஸ்டிரால் குறைந்தது" என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

அப்புறம் ஏன் நாட்டில் ஹார்ட் அட்டாக்குகள் பெருகாது என கேட்கிறேன்?

கொழுப்பை குறைக்கும் தேங்காய் . . .

தேங்காயில் உள்ளஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாதுஎன்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.

சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதைதென்னம்பிள்ளைஎன்று அழைக்கிறார்கள்.

தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல்.

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள் . . .

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் . . .

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள். . .

தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு . . .

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது

ஆண்மைப் பெருக்கி . . .

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக . . .

குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும்ஜெல்என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் . . .

இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் ண்ணெயை தலையில் தேய்ப்பதே ல்லை. தலை முடி ட்டிக் கொண்டு முகம் அழுது ழியும் ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும்.

ஆனால், தேங்காய் ண்ணெயைப் போன்று உடலுக்கு ன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே ல்லை ன்று கூறலாம். தலைக்கு தேங்காய் ண்ணெய் தேய்த்துக் கொள்வதுமிகவும் ல்லது. தலையின் தோல் பகுதியை வறண்டுவிடாமல் தேங்காய் ண்ணெய் பாதுகாக்கும்.

மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் ண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம். இது தோலுக்குமிகவும் ல்லது. திகமாக மேக்-ப் போடும் பெண்கள், இரவில் முத்தை சுத்தம் செ‌‌ய்துவிட்டு தேங்காய் ண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு ல்ல பொலிவுகிடைக்கும்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.


0 comments:

Post a Comment