என்று -நான் உன்னை காண்பேன்??


என்று -நான் உன்னை காண்பேன்??


ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை?
எந்தை அவள்- தன்  ஒளி அணைத்துவிட்டாள்
முந்தை நாளில்- கொஞ்சி  கூடி   குலாவினாள் 
பந்தை   அடித்து-சேயுடன் ஆனந்தக்   கூத்தாடினாள்


 சிந்தை ஓடவில்லை?- என் மனம் ஆறவில்லை?
எந்தை அவள்-கண்  மூடி  உறங்கிவிட்டாள்
நிந்தை பேசாள்- நினைவிலும் கெடுதல் செய்யாள்
விந்தை புரிந்தாள்- எந்நாளும்  உள்ளம் கவர்ந்தாள்

 மந்தை கூட்டம் போல் நாம்  இருந்தோம்!
தந்தை தாயாக  சேர்ந்து    நாம்  இருந்தோம்!
இந்தை  பிள்ளை இன்னும் கண்ணீர்  துளியில் 
கந்தை  கொண்டு கண் துடைக்க வாரயோ

குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய்  இருப்பாள் 
விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள்
சிந்தை குளிரும் அவள் சிங்கார சிரிப்பில்
எந்தை அவள் வாய் மூடி உறங்கிவிட்டாள்

 தீந்தை  விழியால் தினம்  காதல் பேசியவள்
சாந்தை  பூசி   சந்தன பெட்டிக்குள்  போயிற்றாள்
வேந்தைக்கும் ஏழைக்கும் அவள் ஒரே பார்வை
குழந்தைக்கும் குஞ்சுக்கும்  அவள்  ஒரே அன்பு

 உந்தை வழியில் -தினம் கடவுள் வேண்டினாய்        
விந்தை உலகமடா- இன்று  நீயே   கடவுள்?
எந்தை யேஎன்றன்- குலப் பெருஞ் சுடரே!
மடந்தை  யேஎன்று -நான் உன்னை காண்பேன்??
[ஆக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

2 comments:

  1. நிந்தை பேசாள்-
    நினைவிலும் கெடுதல் செய்யாள்
    விந்தை புரிந்தாள்-
    எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்

    ReplyDelete
  2. வரியாக அடி எதுகை
    சரியாகத் தீட்டியது எதுகையோ?
    புரியாது துடி முதுகை
    பிரியமாய்த் தட்டியது இதுகையே!

    ReplyDelete