மே தினத்தின் வரலாறு

மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த பேகன் ஐரோப்பியாவில்(Pagan Europe)ஏற்பட்டது. முதன் முதலில் அவர்கள் இளவேனிற் கால ஆரம்பத்தை ஒரு விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகால செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and Saxons ] நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் திகதியைக் கொண்டாடினார்கள்.சாக்சன் [Saxons ] ஏப்ரல் 30 மாலை /பின்னேரம்  விழாவைத் தொடங்குவர். ,கேளிக்கைகள்,மற்றும்  விருந்துடன் கூடிய விழா இந்த விழா, பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலம் வருவதை  வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது. மற்றும், மேலும் இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தோலிக்க தேவாலயம்  சட்டத்தால் தடை செய்தது (outlawed by the Catholic church) என்றாலும் அங்கு வாழ்ந்த மக்கள்,இந்த விழாவை,1700 வரை கொண்டடிக் கொண்டுதான் இருந்தனர்.ரோமானியர்கள்[RomanS] பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora)  ஒரு வழிபாடு.து  ஏப்ரல் 28 முதல் மே 2 வரை  நடைபெறும்.காலக்கிரமத்தில் இந்த கொண்டாட்டம்   செல்ட்ஸ் மற்றும் சாக்சன்[Celts and ஸக்ஷொன்ச்] இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

நாம் தற்போது கொண்டாடும் மே தினம்,தொழிலாளர்கள் விடுமுறை தினமாகக்  ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி, அமெரிக்காவில் தொழிலார்கள்,எட்டு மணி நேர வேலை வேண்டி  நடத்திய போராட்டமே ஆகும். இந்த போராட்டம்  Haymarket என்ற இடத்தில் நடத்தியதின் நினைவாகவே தற்போது மே தினம் கொண்டாட்டப்படுகிறது. இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளர்களின்  விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) அறிவித்தது.தொழிலாளர்கள்  சிந்திய குருதியின்  ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியை தேர்ந்து எடுத்து அதை  சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம்,Lei ( garland or wreath) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைத்து கொண்டாடப்படுகிறது.லேய் என்பது மலர்களால் ஆனா ஒரு அல்லது நெக்லஸ் ஆகும்.இது கிட்டத்தட்ட 46 செ.மீ. நீளம் இருக்கும்.ஜெர்மனியில் முதல் முறையாக,1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை அரசாங்க விடுமுறையாக["State Holiday"] மாற்றியது 

மேலும் இன்று உலக நாடுகள் எல்லாம் பொதுவாக மே 1ஆம் திகதியை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கொண்டாடப்படுகிறது.பல  பொதுவுடமை நாடுகளில்,மே தினம்  ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை.அத்துடன் அங்கு, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் இது கொண்டாடப்படுகிறது. என்றாலும் நியூசிலாந்தில் [New Zealand ] தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல்  டன்கன் பர்னெல் [ Samuel Duncan Parnell ] என்னும் தச்சு வேலை செய்பவர் ஆகும். இவர் 1840ல் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மறுத்ததுடன்,மற்ற தொழில் செய்பவர்களையும் அப்படி செய்யவேண்டாம் என தூண்டிவிட்டார்.அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம்,ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.இதன் 50வது வருடத்தை,அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது.இதன் தொடர்ச்சியாக,இதன் பின் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்ட்டாடுவது அங்கு வழமையானது.மேலும் 1899ல் அரசாங்கம், 1900 ஆண்டு முதல்,இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.இப்படியாக ஒவ்வொரு தேசமும் தமது மே தினத்தைக் கொண்டாடுகின்றன.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, May 07, 2016

    "இது ஏப்ரல் 28 முதல் மே 2 வரை நடைபெறும்"-என்று வாசிக்கவும்.தவறுதலாக 'இ' விடுபட்டு விட்டது.

    ReplyDelete