குருவிடம் ஒரு குறுக்கு விசாரணை!

கடவுளுக்கு உண்மையில் எத்தனை முகங்கள்?

கடவுள் என்பவர் உலகத்தை படைத்தவர்,எங்களைவிட பிரமாண்ட மானவராக  இருக்கவேண்டும் என்ற உணர்வில் உங்கள் கடவுளுக்கு நான்கு முகங்கள்,ஆறு முகங்கள், பதினாறு கைகள் என்றெல்லாம் உருவகப் படுத்தினீர்கள்.
உண்மையை சொல்லுங்கள்.உங்களுக்கு எத்தனை முகங்கள்? வீட்டில் ஒரு முகம்.அலுவகத்தில் ஒரு முகம். நண்பர்களின் முன் ஒரு முகம். பகைவர்களின் முன் ஒரு முகம். தெருவுக்கு தெரு மாற்றுவதற்கென்று எத்தனை முகங்களை சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்?
முருகனை விட உங்களுக்கல்லவா அதிக முகம்.
முகங்களைக் கணக்கெடுத்து கடவுளைத் தீர்மானிப்பதென்றால்  உங்கள் அரசியல் வாதிகளுக்கு எதிரில் எந்த கடவுளும் போட்டி போட முடியாதே!
நம் முன்னோர்கள் உருவ வழிபாட்டுக்காக கடவுளுக்கு தோற்றங்கள் கொடுத்ததுக்கு வேறு பல புத்திசாலித் தனமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்ளாமல் கடவுளைத் தெரிந்து கொண்டு விட்டதாக  நினைப்பது உங்கள் மன அகங்காரத்திற்கு தீனி போடும் சாமாசாரம். அவ்வளவே!
                                                                                                                            

0 comments:

Post a Comment