அரசியல் தலைவர்கள் மாறவேண்டும்!!


தொடர் வினை தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தல் சாதி, மதம், மொழி, நாடு வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் ஒன்றே.அதன் அடிப்படையில் தான் ஜனநாயக முறைப்படி அரசு நடக்கிறது. ஆனால் அதில் முழுமையாக ஜனநாயகம் இல்லை அதனால் தான் தீவிரவாதம், போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது.
    உயர் பதவிகள் உள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து நான் என்ற எண்ணம் போக வேண்டும். நான், என் சாதி, என் மதம்,என் மொழி, என் மாநிலம், எனது என்ற உணர்வு மேல் ஓங்கி இருந்தால் அது மிருகநிலை ஆம், நான் என்ற உணர்வு மேல் ஓங்கி அறிவு தாழ்ந்து இருந்தால் அது மிருக நிலை, இரண்டும் சமமாக இருந்தால் அது மனித நிலை, ஆம், நான் என்ற எண்ணத்தில் இருந்து நாம் என்ற மனித நிலைக்கு நாட்டை ஆளும் உயர் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் வந்தால் போதும் நாட்டில் உள்ள மாநிலங்கள், மொழிகள் அனைத்துக்கும் சம அந்தஸ்து கிடைக்கும்.ஒரு தனி மனிதனுடைய கருதும் தான் தாய்மொழியின் வாயிலாக மதிய அரசை வழி நடத்த வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு அல்ல பல பிராந்தியங்களின் கூட்டு தான் இந்தியா ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி பிராந்தியங்களாக தான் இருந்தன. ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திய பிறகு தான் பாக்கிதானையும் சேர்ந்து நாம் ஒரே நாடாக இருந்தோம். அப்படி என்றால் இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேய காலத்திற்கு முன் இல்லை, பல பிராந்தியங்கள் கூடுதான் இப்போது உள்ள நம் இந்தியநாடு. ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கும்போது இந்தியா ஆட்சி மொழியாக எப்படி இந்தி வந்தது? இந்தியா ஆட்சி மொழி என்றால் பிராந்திய மொழிகள் அனைத்தும் இந்திய மொழியாக தான் இருந்திருக்க வேண்டும். அப்போது உள்ள வடமாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நான் என்ற எண்ணத்தில் செயல்படாமல், நாம் என்ற உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அனைத்து பிராந்திய மொழியும் சமமாக தெரிந்திருக்கும்.
    தாய்மொழியில் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும் பிற மொழிகள் எதுவாக பயன்படுத்தும் ஆங்கிலத்தையே நம் நாட்டின் தகவல் தொடர்புக்கு பிரதான மொழியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் பிராந்திய மொழிகள் வாழும் அத்துடன் சேர்ந்து நம் உணர்வுகளும் வாழும்.
    தகவல் தொடர்புக்கு என்று ஹிந்தியை தாய்மொழி அல்லாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏன் மூன்று மொழிகளை கற்க வேண்டும், உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஆங்கிலத்தை மட்டும் நம் தகவல் தொடர்புக்கு இந்தியர் அனைவரும் பயன்படுத்திக் கொண்டால் உலக அளவில் அனைத்து மாநிலத்தவரும் தகவலை பரிமாறிக் கொள்ளமுடியும் அல்லவா?
    மொழி பிரச்னையை போல் நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன. அதனை நான் என்ற உணர்வு இல்லாமல் நாம் என்ற உணர்வோடு அரசியல் தலைவர்கள் அதை அணுக வேண்டும்.
    சாதி, மதம் சார்ந்த அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்ககூடாது. ஒவ்வொரு மனிதனும் சமம்தான் என்ற உணர்வுள்ள அரசியல் கட்சி தான் இருக்க வேண்டும்.
    தொடர்வினை தத்துவத்தின்படி நானும், பாமரனும் ஒன்று தான் என்று உயர் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் நினைக்க வேண்டும். தன்னிடம் பணிபுரியும் ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை நானும் நீங்களும் சமம் தான் என்ற உணர்வோடு பழக வேண்டும். இப்படி அவர் நடந்தால், அதிகாரிகளும் ஊழியர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அப்போது சசமுதயத்தில் அனைவரும் ஒன்றுதான் என்ற நிலை உருவாகும். இதனால் குற்றம் நடகாது. தொடர்வினை தத்துவத்தின் படி உயர்பதவியில் இருப்பவர்கள் நாம் லஞ்சம் வாங்கினால் அது சமுதாயத்தை பாதிக்கும், சமுதாயத்தால் நம்மையும் நம் சந்ததிகளையும் பாதிக்கும் என்று எண்ணி நேர்மையான நிர்வாகத்தை நடத்த வேண்டும். நேர்மையான நிர்வாகம் நடந்தால் மக்களும் நேர்மையாகவும்,      ஒழுக்கமாகவும் இருப்பார்கள் மனிதனுக்கு மனிதனிடமிருந்து பாதுகாப்பு என்று நிலை மாற வேண்டும்.

     நாற்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் கிரமத்து வீட்டிற்கு பூட்டு  இல்லை, மாடு, ஆடு வீட்டுக்குள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கு தான் கதவு இருக்கும், மனிதனுக்கு பயந்து யாரும் வீட்டுக்கு பூட்டு போட்டது இல்லை அப்போது எல்லாம் ஆடு, மாடுக்கு பயந்து தான் வீட்டை சுற்றி வேலிபோட்டு இருப்பார்கள். இப்போது மனிதர்கள் மிருகத் தைபோல் ஆகிவிட்டார்கள் அதனால் மனிதன் தாண்டாதவாறு ஏழு அடி உயரம் மதில்சுவர் வைத்து அதில் கண்ணாடியையும் குத்தி   வைக்கின்றார்கள், சமுதாயம் அமைதியாக இருந்தால் தான் நலமுடன் நம் சந்ததிகளும் பாதுகாப்பாக 7 அடி சுவர் இல்லாமல் வாழ முடியும், போராட்டம் இல்லாமல் அனைவரும் அவர்கள் உரிமை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இது தான் உண்மையான ஜனநாயகம். போராட்டம் பிரிவினையை ஏற்படுத்தும் போராட்டம் செய்கின்ற சூழலை மக்கள் மீது அரசியல்வாதிகள் திணிக்க கூடாது.

    உயர் பதவிக்கு வரும் அரசியல் தலைவர்கள் நான் இந்த நாட்டை ஆளுகின்றேன் என்ற எண்ணத்தில் செயல்பட கூடாது. நான் இந்த நாட்டை நிர்வாகம் செய்கின்றேன் என்றுதான் எண்ண வேண்டும். ஜனநாயகத்தில் யாரும் யாரையும் ஆளுமை செய்ய கூடாது. ஆட்சி என்ற வார்த்தை ஜனநாயக நாட்டில் அகற்றப்பட வேண்டும்.
                                                          
              

0 comments:

Post a Comment