சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா


 வேலைக்காரன்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. `சீமராஜாஎன தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துள்ளும் குதிரையில் உட்கார்ந்தபடி சிவகார்த்திகேயன் தனது கையில் ஒரு கொடியுடன் இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
24 .எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ‘ரஜினிமுருகன்படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன்பொன்ராம்சூரிடி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

0 comments:

Post a Comment