தீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்படுகிறது?


தீ பரவுவதற்கு முன்னரே அது பற்றிய எச்சரிக்கையைத் தெரிவிக்கும் ஒரு பாதுகாப்புச் சாதனமே தீ எச்சரிக்கைக் கருவியாகும். பெரும்பாலான தீ எச்சரிக்கைக் கருவிகள் வெப்பம், புகை அல்லது தீப்பிழம்பு (flame) ஆகியவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றன. வெப்பத்தைக் கண்டறியும் கருவி, தீயின் காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வை உணர்ந்து, எச்சரிக்கைக் கருவியைத் தூண்டிவிட்டு (trigger) அதனை இயங்கச் செய்யும்.

இக்கருவியில் குறைவான வெப்ப நிலையிலேயே கலப்பு உலோகத்தின் (alloy) உருகும் தன்மை அல்லது இரட்டை உலோகத் தகட்டின் (bimettalic strip) வளையும் தன்மை காரணமாக எச்சரிக்கைக் கருவி தூண்டிவிடப்படுகிறது. புகை கண்டறியும் கருவியைப் பொறுத்தவரை, ஒளிமின்கலத்தின் (photocell) மீது விழும் ஒளிக்கற்றைக்கு (beam of light) புகைத் துகள்களால் (smoke particles) இடையூறு ஏர்படும்போது எச்சரிக்கைக் கருவி தூண்டிவிடப்பட்டு இயங்குகிறது. தீப்பிழம்பு மூலம் இயங்கும் கருவியில் தீப்பிழம்புகளால் வெளியாகும் அகச்சிவப்புக் கதிர்வீச்சு (infrared radiation) கண்டறியப்படுவதால் எச்சரிக்கைக் கருவி செயல்படுகிறது.
                                                            


0 comments:

Post a Comment