வீட்டுக்கு வந்தமருமகள் மகராசியா?

திருமணம் முடிந்துவிட்டது . முதலிரவில் புது  மாப்பிள்ளை  தயங்கினபடி தன் மனைவிடம் கேட் கிறான்.
''என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
மனைவி , ''அப்படி எல்லாம் கேளாதீங்க!''
அதிர்ந்த கணவன் ,'' அப்போ என்னைப்  பிடிக்கலையா?''
மனைவி,'' சும்மா போங்க ,எல்லாமே  முடிஞ்சிட்டுது.இனி என்ன வாழ்ந்துதானே ஆகவேனும் .''
அப்பாவி போல் அப்பெண் நாசுக்காக கூறிய பதில் சிந்திக்கத்தக்கது.
உலகம் இயங்குவதற்கு திருமணப்பந்தம் அவசியம்.
திருமணம் முடிந்தபின் சில பெண்களோ அல்லது ஆண்களோ நான் அவளை செய்திருக்கலாம்,அல்லது அவனை செய்திருக்கலாம் இவளை/இவனை செய்து என்ன சந்தோசம் அடைந்தேன் என்று எண்ணுவோர் உண்டு.
இப்படியானவர்கள் ஒன்றினை உணர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமான முகங்கள் உண்டு. வித்தியாசமான சிந்தனைகள், கருத்துக்கள், பார்வைகள், இரசனைகள் கையாளும் விதங்கள் பெருமளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். எனவே  எந்த ஒரு மனிதனும் அடுத்த ஒரு மனிதனுக்கு 100 வீதம் நல்லவனாக/ அவன் விரும்பக்கூடியவளாக   இருக்க முடியாது.
அப்படி இருக்கையில் எப்படி -உதாரணமாக- வீட்டுக்கு வந்தவள் கணவனுக்கு அல்லது மாமியாருக்கு 100 விதம் நல்லவளா இருக்க முடியும். எனவே நீ யாரை மணம் முடித்திருந்தாலும் இப்படித்தான் வாழப்போகிறாய் என்பதனை நீ உணர்ந்திருக்கவேண்டும்.
அவற்றினை எல்லாம் கணவனோ,மாமியாரோ தூக்கிப்பிடிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையின் சந்தோசத்தினை இழப்பவர்கள் சம்பந்தப்படடவர்களே அன்றி அடுத்தவர்களல்ல.
ஏன் இந்த போராட் டம் ? அர்த்தமோ,குறிக்கோளோ இல்லாது தங்கள் குடும்பத்தினை/தங்கள் வாழ்வினை த்   தாங்களே குலைக்கும்  இம்முட்டாள் தனமான செயல் மானிட வர்க்கத்தில்  வளர்கிறது எனலாம்.
விட்டுக்கொடுப்பது என்பது ஒரு குடும்பத்தின் முக்கியமான அத்தியாயம் ஆகும்.விட்டுக்கொடுப்பதால் ஒன்றும் யாருக்கும் கெட்டுப்போகாது. ஆனால் மாறாக விதண்டாவாதம் செய்தால்  கெட்டுப்போவது கணவன் மனைவி, பிள்ளைகளின்  சந்தோசம்,நிம்மதி,எதிர்காலம் என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.
குடும்பத்தில் மட்டுமல்ல தொழில் புரியும் இடங்களினாலானும் சரி ,அரசியலானாலும் சரி விட்டுக்கொடுப்பு என்பது அதி முக்கியமானதாகவே கருத்தப்படவேண்டி உள்ளது.
மனிதன் தவறு செய்யும்போதுதான் அத்தவறின் பலன்களை உணரமுடிகிறது. அவற்றினை மன்னிப்பவன் தான் மனிதன்.அல்லாவிடில் காட்டு விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
உலகு எங்கும் அமைதி ஓங்கட்டும்!

அரங்கில்  ஒலித்ததில் புடித்தது:செல்லத்துரை,மனுவேந்தன்  


3 comments:

 1. கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிரச்னையை அடுத்தவரிடம் எடுத்து சென்றாலே முடிவு பிரிவுதான்

  ReplyDelete
 2. பரமு பரமுSaturday, February 17, 2018

  அருமையான தொகுப்பு.புலம்பெயர்ந்து வந்து கண்டறியாதன கண்டவர்கள் மணமுறிவின் மூலம் தங்கள் வாழ்வினை சூன்யமாக்கி தாமும் வாழாது .நம்பிவந்தவளையும் வாழவிடாது பிள்ளைகளையும் நிற்கதியாக்கி ஒரு குறிக்கோள் இல்லாது சென்று கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு இவை ஒரு நல்ல தகவல்.

  ReplyDelete
 3. ஒரு குடும்பத்தை ஒற்றுமையாக நடாத்த தெரியாதவர்கள் பொது இடங்களில் வந்து ஒற்றுமையினை பேசிக் பேசியே அங்கும் ஒற்றுமையினை கெடுக்கிறார்கள்

  ReplyDelete