தமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.


எங்கள் தமிழ் / தென் இந்திய திரைப்பட உலகிலே நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் எல்லோருக்கும், எதோ அர்த்தமற்ற பட்டப் பெயர்களை வைத்து, அவர்களை அழைத்துக் கூச்சல் போடுவது ரசிகர்களிடம் வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு நடிகருக்கும் அவருக்கு வழங்கப் பட்டிருக்கும் பட்டப் பெயர், எந்த அளவுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்றோ, ஏதாவது ஒரு உருப்படியான காரணத்தினாலா அப்பெயர் வந்தது என்றோ அவர்கள் சிந்தித்துப் பார்க்க விரும்புவதில்லை.  இப்படிக்கு கோஷங்கள் இடுவதால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது என்று கூடி எண்ணிப் பார்க்க விரும்ப மாடடார்கள்.

கீழே உள்ள பட்டியலில் உள்ள ஒரு சில நடிகர்களுக்கு, ஏன்தான்  அப்பெயர்கள் கிடைத்தன என்று யாராவது விளக்குவார்களா?

கமல் - உலக நாயகன்: யூனிவேர்சல் ஸ்டார்:
கமல் மிகச் சிறந்த நடிகர் என்பது வெளிச்சம்; நிறையவே மனித 
நேயப் பணிகள் எல்லாம் புரியும் ஒரு நல்லவர் என்பதும் உண்மைதான். பரந்த பார்வை உள்ளவர். ஆனால், 'உலக', 'யூனிவேர்சல்' என்று சொல்லுவது கொஞ்சம் ஓவராய்த் தெரியவில்லை?  தமிழ் நாட்டுக்குள் என்ன உலகத்தையம், யூனிவெர்சையும் அடக்கியா வைத்திருக்கின்றார்கள்?

ரஜனி - தலைவர், சூப்பர் ஸ்டார்:
வித்தியாசமான ஸ்டைல் நடிப்பினால் பெரும் இரசிகர் கூட்டத்தினை  உருவாக்கினவர்தான். ஆனால், தலைவர் என்றால் எதற்குத் தலைவர்? ஏதாவது கட்சி, கழகம், பொது அமைப்பு, நாடு, கடைசி ஒரு பஞ்சாயத்துக்கு என்று எதற்காவது தலைவரா? ஒன்றுமே இல்லையே!
அத்தோடு, தனி ஸ்டைலில் ஸ்டார் ஒழிய, நடிப்பில் அல்லவே சூப்பர் ஆகுவதற்கு!

விஜகாந்த் - கப்டன்:
கேப்டனாக நடித்திருப்பாரே ஒழிய, எந்த ஒரு படையிலும் சேர்ந்து போராடி இருக்கவே இல்லை.தாய்மொழிக்காக/இனத்திற்காக  குரல் கொடுத்தது கூடக் கிடையாது.

விஜே - இளைய தளபதி:
என்னவோ எந்த ஒரு தேசிய படையிலோ அல்லது விடுதலைப் படையிலோ ஒரு சாதாரண போராளியாகக் கூட இருந்தது கிடையாது; அப்படி இருக்க, மூத்த தளபதிக்கு கீழே, எப்படி ஒர் இளைய தளபதி வந்தார்?

அஜித் - தல, அல்டிமேட் ஸ்டார்:
என்னவோ தெரியாது; தலையைத்தான் 'தல'  என்கிறார்களோ?.
ஏதாவது ஒன்றின் தலையா  அல்லது  ஏதாவது ஒன்றுக்குத் தலையா? யார் அறிவார்! அத்தோடு, 'அல்டிமே'ட் என்றால் இதற்கு மேலே ஒருவரும் நடிக்க இயலாதா?

விஷால் - புரட்சித் தளபதி:
அப்பப்பா! தளபதிகள் கூடி விட்டது ;  தேசிய படையில் ஒரு சாதாரண  போர் வீரனாக சேருவதற்குதான்  ஆட்கள் இல்லை.

சிம்பு - லிட்டில் சூப்பர் ஸ்டார்:
தந்தையார் சூப்பர் என்பதாலேயோ என்னவோ முதல் படத்திலேயே இந்தப் பெயருடன்  வந்தார். இன்னும் 'லிட்டில்' ஆகவே இருக்கின்றார்.

சத்திய ராஜ் - புரடசித் தலைவர்:
நடிப்பில் புரடசி; பெரும் நடிகர் தான். நிஜத்தில்?

சந்தானம் - காமெடி சூப்பர் ஸ்டார்:
'சூப்பர்' என்றால் என்ன அர்த்தம் என்று ஒருமுறை அகராதி நூலினை  திரும்பவும் பார்ப்போம்.

மோகன் லால் - கொம்பிலீட்  ஆக்டர்:
இதுக்கு மேலே, அவராலேயே இனி நடிக்க முடியாது போலும்.

சிரஞ்சீவி - மெகா ஸ்டார்:
திரும்பவும் வேண்டாமே!

உபேந்திரா - ரியல் ஸ்டார்:
ரியல்! மற்றோர் எல்லாம் போலி போங்க!

விஜே சேதுபதி - மக்கள் செல்வன்:
மக்கள்? எந்த மக்கள்?

இப்படியாக, பலதரப்பட்ட பெயர்களை வைத்து, ரசிகர்கள் பித்துப்  பிடித்தவர்கள்போல், அவர்களுக்காக கட்டவுட்டுகள்  செய்து, மாலை போட்டு, பட்டாசு வெடித்து, வணங்கி  என்னென்ன கோமாளித்தனம் எல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கும்போது, இவர்களுக்கு உருப்படியான, பயன் தரக்கூடிய தொழில் வேறு ஒன்றுமே இல்லையோ, குடும்பம் பிள்ளைகள் பிரச்சனைகள் எதுவும் இல்லையோ  என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது!

மேலும், நடிகன் ஒருவர் போவதைக் கண்டால், பக்கத்தில் கடவுளே நேரில் வந்து நின்றாலும், அவரையும் இடித்துத் தள்ளி விழுத்துவிட்டு, முட்டி அடித்துக்கொண்டு,  நடிகனின் ஒரு பக்கத்த்தினை என்றாலும் எட்டிப் பார்த்து விடவேண்டும் என்று முந்தி அடித்துக்கொண்டு பின்னால், அவரின் பட்டப் பெயரினைக் கோஷமிட்டவாறு ஓடுகிறார்கள்.!

என்னதான் குருட்டு நம்பிக்கைகளோ தெரியவில்லை!

- செல்வதுரை ,சந்திரகாசன்.                                                                

2 comments:

  1. எமது இனம் இப்படியான குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதிலேயே தற்காலத்தில் உலகிலேயே பெரும் சாதனைகள் படைத்து வருகின்றனர்.

    ReplyDelete
  2. கண்ணன்Sunday, January 28, 2018

    பாடகர்கள், இசை அமைப்பாளர்களுக்கும் பல பட்டங்கள் இருக்கு. நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கும் பத்துப் பதினைந்து பட்டங்கள் பெயருக்குப் பின்னால் இருக்குமே!

    ReplyDelete